Tuesday 27 May 2014

240. Scenes just before creation

Verse 240
பழமுனிவன் என்றுரைத்தீர் கடவுளாரே
பருந்து பக்ஷி தம்பமதைப் பலுக்கக் கேளு
குழாமுடனே தம்பமத்தில் யானும் போவேன்
ஓஓஓ சக்கரமும் பிரண்டு போகும்
தழும்பணிய சாகரங்கள் எங்கும் தானாய்
சப்த சாகரம் பிரண்டு எங்கும் தானாய்
அழகுடைய மாதொருத்தி தம்பத்துள்ளே
அர அரா கண்ணாடி லீலை தானே  (240)

Translation:
God!  You called me old muni
You listen about the birds and kites approaching the pillar
I will also go to the pillar along with the group
O O O the wheel will also reverse
With the mark, the oceans
The seven oceans will spread everywhere
A beautiful maiden within the pillar
Ara haraa!  This is the play of the mirror!

Commentary:

Siva called Pujandar the old muni in the previous verse.  This is to indicate that Pujandar has been around for a long time, he is the state of supreme consciousness.  In this verse he is telling Siva that all the life forms will merge within that pillar.  All the oceans will cross their boundary and spread over the world, the great deluge.  In the Siddha parlance, the world is made up of water element and fire element, the appu and thejas came together to create this world.  Generally, the water element corresponds to the female reproductive fluid.   Here it refers to the substratum of the seven states of consciousness.  Pujandar says that a beautiful maiden will appear within the pillar.  He is referring to Valai or the kundalini Shakti who is generally depicted as a lady.  Going to one of the versions of Agatthiyar’s lifehistory, Lopamudra who is considered his wife was said have been created from the waters of Tamraparani river.  She is none other than Agatthiyar’s Sakti. 
The maiden, Sakti is travelling through the pillar to join her consort, Siva.  Pujandar exclaims that all these are the divine play of the ‘kannaadi’ mirror. 

According to Kashmir Saivam Prathyabijna philosophy, this world is nothing but a reflection of the Divine, like the image one sees in the mirror.  The universal consciousness, the Divine, out of its own free will projects the universe on its own mirror, its own consciousness.  An individual who has his consciousness contracted, also has the universe as his body, in a contracted form. He is not able to realize he is the universal consciousness.  Hence, he does not see himself as the universe.  In this verse Pujandar says that everything is a play of the mirror, the consciousness.  The creation, the dissolution and the images that one sees are all nothing but a play of consciousness.

சிவபெருமான் புஜண்டரை பழைய முனி என்று முந்தைய பாடலில் அழைத்தார்.  அதை இங்கே புஜண்டர் நினைவு கூருகிறார்.  இப்பாடலில் அவர் உயிர்கள் அனைத்தும் பிரளயத்தின்போது தோன்றும் தம்பத்தில் ஒடுங்குகின்றன என்கிறார்.  தானும் அத்தம்பத்தில் ஒடுங்குவேன் என்று சிவபெருமானிடம் கூறுகிறார்.  தம்பம் என்பது சுழுமுனை நாடி என்று முன்னமே பார்த்தோம்.   இதனை அடுத்து ஏழு கடல்களும் எங்கும் பரவுகின்றன என்று புஜண்டர் கூறுகிறார்.  இவ்வுலம் அப்பு தேயு என்ற இரண்டு பூதங்களால் ஆனது என்று சித்தர்கள் கூறுவர்.  இதில் அப்பு அல்லது நீர் என்பது பெண்ணின் கருப்பையில் சுரக்கும் நீரையும் தேஜஸ் அல்லது தேயு என்பது ஆணின் சக்தி சுக்கிலத்தையும் குறிக்கின்றது.  இதுவே பிறவி ஏற்படக் காரணமாகிறது.  இப்பாடலில் ஏழு கடல்கள் என்பது நீரைக் குறிப்பிடுவதாகத் தோன்றினாலும் அது பரவுணர்வு கடக்கும் ஏழு நிலைகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.  எங்கும் இருப்பது பரவுணர்வே.  அப்போது ஸ்தம்பத்தில் அழகான மாது ஒருத்தி தோன்றுவாள் என்று புஜண்டர் கூறுகிறார்.  இந்த மாது குண்டலினி சக்தி, வாலை. 

அகத்தியரின் வாழ்க்கை வரலாறு என்று செவிவழி உள்ள பல வரலாறுகளில் ஒன்று அவரது மனைவி எனக் கருதப்படும் லோபாமுத்திரா அம்மையை அவர் தாமிரபரணி ஆற்று நீரிலிருந்து தோற்றுவித்தார் என்று கூறுகிறது. லோபாமுத்திரா அம்மை அகத்தியரின் சக்தி என்பது இதிலிருந்து புலனாகிறது.
இப்பாடலில் உள்ள கடைசி வரியில் அகத்தியர் ஒரு முக்கியமான கருத்தை வைத்துள்ளார்.  அவர் இந்த காட்சிகள் அனைத்தும் கண்ணாடியின் லீலை என்கிறார்.  கண்ணாடி என்பது கண்ணில் உள்ள லென்ஸ் எனப்படும் பார்வையை அளிக்கும் ஒரு பகுதி, அது முகம் பார்க்கும் கண்ணாடியையும் குறிக்கும். 
காஷ்மீர சைவத்தில் குறிப்பாக பிரத்யபிக்ஞய சாஸ்திரத்தில்  உலகுக்கும் இறைவனுக்கும் பரவுணர்வு நிலைக்கும் உள்ள தொடர்பு ஒருவருக்கும் கண்ணாடியில் காணும் அவரது உருவத்துக்கும் உள்ள உறவு போன்றது என்று கூறுகிறது.  இறைவன் அல்லது பரவுணர்வு தனது சங்கல்பத்தால் உலகைத் தனது கண்ணாடியில், தனது விழிப்புணர்வில், தோன்றச் செய்கிறது.  ஜீவாத்மாக்களும், அவற்றின் விழிப்புணர்வு குறுக்கம் உடையதாக இருந்தாலும், உலகை ஒரு குறுகிய நிலையில் தமது உடலாகப் பெற்றுள்ளன.  அதனால் அவை உலகைத் தமது உடலாகக் காண்பதில்லை.  இப்பாடலில் புஜண்டர் அனைத்தும், சிருஷ்டி, லயம் காணும் காட்சிகள் அனைத்தும், கண்ணாடியின் லீலை என்பது இந்தக் கருத்தையே பிரதிபலிக்கிறது.   


2 comments:

  1. A small correction here pls. LobaMudra has not been created From the waters of River Tamarparani, but is River Tamaparani Itself.

    Agattiayan Himself had mentioned that ,HE created the Tamarparani River 3000 years back,named her LobaMudra and kept HER alongside HIM since then.

    ReplyDelete
  2. Thanks Jnana Jyothi amma for the correction.

    ReplyDelete