Thursday 8 May 2014

216. Agatthiyar reveals his identity!

Verse 216
செப்பினாள் கும்பம் அவள் சமைத்ததாலே
சிவ கும்பக் குடத்தினில் நான் பிறந்த தாலே
ஒப்பினாள் சகல சித்தும் உரைத்தாள் அம்மன்
ஒரு குழந்தை அகத்தீசர் பேரும் ஈய்ந்து
தப்பினாள் தவறாமல் சகல சித்தும்
சாற்றினாள் அனுதினமும் சொல்லிச் சொல்லி
நொப்பினாள் மந்திரங்கள் அனந்தம் கோடி
நுணுக்கத்தில் தசை (ச) தீக்ஷை புகட்டினாளே

Translation:
She told about Kumbam as she made it
As I was born in the Sivakumba kudam
She granted me all mystical accomplishments, the mother uttered
A child, offering a name as Agattheesar
She taught without fail all the mystical accomplishments
She taught them by teaching them daily
She blessed with millions of mantras
She taught the dasa diksha in all its subtlety.

Commentary:
This is a very important verse where Agatthiyar talks about himself.  The lady reffered to here is manomani or kundalini sakti whom he mentioned in the previous verse. 
Manonmani is the name for Sakti in the state of supreme consciousness.  It the 207th name in Lalitha Sahasranama.  The Svacchanda sangraha says, “There is a sakti, the supreme cause and above that is unmani.  In that center there is no time, space, no tattva, no deity, complete freedom, purity, supremacy.  It is called the rudravaktra or the mouth of rudra.  In here there is neither subject nor object, spotless.”  The Tripura Upanishad explains unmani as “when the mind free from attachment to object is fixed on the heart it attains the state of unmani, the Supreme abode.”

Manonmani is also a mudra is yoga.  For this mudra, “The eyes neither close nor open, the breath is neither inhaled nor exhaled, the mind is blank neither speculating nor doubting..”  It is the state of meditation where the meditator and the object of meditation cease to exist. This is the state of unmani. 
Hathayoga pradeepika defines Manonmani as Steadiness of mind that comes when the air moves freely in the middle, that is the manonmani condition which is attained when the mind becomes calm.

Vijnana Bhairava is an import text on Yoga in Kashmir Saivism.  The definition of manonmani or mana unmani found here explains how this state is supreme sakti and how it applies to Agatthiyar.

While explaining the ascendance of consciousness the book says that audible sound goes through the following stages with aum as an example.  A is contemplated in the navel, u in the heart and ma in the mouth.  The sound which occurs after the utterance is the pranic energy which appears in the middle of the brows as a dot of light or bindu.  This transforms into nada in the forehead of lalata.  After that the bindu completely disappears and and the energy assumes the form of a straight line in the upper part of the forehead.  The nada becomes nadanta in the brahmarantra or the top of the cranium.  The sense of body disappears here.  The next stage is vyapini and the yogi enjoys the feeling of all-pervasivenss like the sky.  This is experienced at the root of the sikha or the tuft.  The vyapini is followed by the samanaa which is experienced in the hair of the tuft.  The yogi acquires supernormal powers when he reaches this state.  The next and the supreme state is the unmama which is the ultimate energy, sakti, beyond all mental processes.  This is the Light of universal consciousness or vimarsa, the para sakti..  This is experienced at the last part of the tuft of hair.  This is the supreme stage where the yogi identifies himself with Parama siva.  It is the Siva vyapti.

This is the ‘pidari yogam’ or the yoga of the nape that Agatthiyar has mentioned before.  In this verse he says that he was born following this state, the one created by this state.  Thus, Agatthiyar represents the Supreme consciousness, the state of identification with Parama Siva. 

Agatthiyar refers to this when he says he was born in the Siva kumba kudam.  Kundam means the direction, west or merkku desai in Tamil.  This refers to the back of the head or the nape.  Thus from what we have seen above we realize that Agatthiyar was born subsequent to reaching the ultimate state of kundalini yoga.  He says that he learnt all the wisdom, mantras, rituals etc from Mani or Manonmani, this supreme state of consciousness.  Now we realize the greatness of Agatthiyar’s words, they are indeed meijnaanam!

இப்பாடலில் அகத்தியர் தான் யார் என்பதை வெளிப்படுத்துகிறார்!  இப்பாடலில் குறிப்பிடப்படும் பெண் மனோன்மணி.முந்தைய பாடலில் குறிப்பிடப்பட்ட மணி அவளே.    

பரவுணர்வு நிலையில் சக்தியின் பெயர் மனோன்மணி.  லலிதா சஹஸ்ர நாமத்தில் 207 வது பெயர்.  ச்வச்ச்சந்த சங்க்ரகம் “அனைத்துக்கும் காரணமான ஒரு சக்தி உள்ளது அதற்கும் மேலே உள்ளது உன்மணி.  இந்த இடத்தில் காலம், இடம், தத்துவம், தெய்வம், எதுவுமில்லை, பரிபூரண சுதந்திரம், தூய்மை, மேன்மை மட்டுமே உள்ளது.  இது ருத்ர வக்த்ரம் அல்லது ருத்திரனின் வாய் என்று அழைக்கப்படுகிறது. இங்கு காண்பவர், காட்சி எதுவுமில்லை” என்கிறது.  திரிபுர உபநிஷத் உன்மணி (மன+ உன்மணி= மனோன்மணி) நிலையை, “எல்லாவித பற்றுக்களையும் விடுத்து மனம் இதயத்தில் மையப்ப்படும்போது உன்மணி நிலை அடையப்படுகிறது.  இதுவே மிக பரநிலை” என்கிறது.
                                   
யோகத்தில் மனோன்மணி என்று ஒரு முத்திரை உள்ளது. கண்கள் திறந்தும் இல்லாமல் மூடியும் இல்லாமல், மூச்சு உள்ளும் வராமல் வெளியேயும் போகாமல் மனம் எவ்வித எண்ணமும் இல்லாமல் இருக்கும் நிலையே மனோன்மணி.  இந்த நிலையில் காண்பவர் காட்சி என்ற வித்தியாசங்கள் இல்லை.  ஹதயோக பிரதீபிகா மனோன்மணியை பிராணன் நடுவில் பயணிக்கும்போது மனம் சலனமற்று இருக்கும் நிலை என்கிறது .

காஷ்மீர சைவத்தின் மிக முக்கிய நூல் விஞ்ஞான பைரவம் என்பது.  இது மனோன்மையை அதீத சக்தி நிலை என்கிறது.  இது எவ்வாறு அகத்தியருக்குப் பொருந்தும் என்று கீழே பார்ப்போம்.

காதால் கேட்கும் ஒலியை விளக்கும்போது ஓம் என்ற பிரணவத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு அ என்பது நாபியிலும் உ என்பது இதயத்திலும் ம என்பது வாயிலும் ஏற்படுகின்றன.  அதன் பிறகு பிராண சக்தி ஒரு ஒளிப் புள்ளியாக புருவ மத்தியில் தோன்றுகிறது.  இந்த நெற்றியில் ஒரு நீள் கோடாகத் தோன்றி நாதாந்த நிலையை பிரமரந்திரம் எனப்படும் சஹாஸ்ராரத்தில் அடைகிறது.  இந்த நிலையில் உடலுணர்வு மறைந்துவிடுகிறது.  இதற்கு அடுத்த நிலை வியாபினி என்பது அது ஆகாயத்தைப் போல எங்கும் பரந்திருக்கும் உணர்வுநிலை. இது தலையின் பின்னே சிகை எனப்படும் குடுமி இருக்கும் இடத்தில் உணரப்படுகிறது.  இதனை அடுத்த நிலை சமான நிலை.  இது சிகையின் முடியில் உணரப்படுகிறது.  இந்த நிலையை அடையும் யோகி அதீத சக்திகளைப் பெறுகிறார்.  இதனை அடுத்ததும் கடைசி நிலையுமே உன்மணி என்பது.  இது சிகையில் மேல் உச்சியில், முடிவில் உணரப்படுகிறது.  இந்த நிலையில் யோகி தன்னை பரம சிவனுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார்.  இதுவே பரவுணர்வு நிலை, சக்தி நிலை.  அனைத்தையும் கடந்த நிலை. இந்த நிலை சிவ வ்யாப்தி எனப்படுகிறது.

இதைத் தான் அகத்தியர் பிடரி யோகம் என்று இதுவரை கூறினார்.  இப்பாடலில் அகத்தியர் தான் சிவ கும்பகுடத்தில் பிறந்ததாகக் கூறுகிறார்.  குடம் என்பது குடதிசை அல்லது மேற்கு திசையைக் குறிக்கும்.  மேற்கு என்பது தலையின் பின்புறம், பிடரி.  அதன் மூலம் நாம் அகத்தியர் இந்த பரவுணர்வு நிலையைக் குறிப்பவர் என்பதை அறிகிறோம்.  இந்த நிலையில் தான் எல்லா மந்திரங்களையும், சித்திகளையும் ஞானத்தையும் மனோன்மணியிடமிருந்து கற்றதாக அவர் கூறுவது அவரது பாடல்கள் அனைத்தும் இந்த பரவுணர்வு நிலையிலிருந்து பிறந்தவை, மெய்ஞ்ஞானம் என்பதை நாம் அறிகிறோம். 

No comments:

Post a Comment