Wednesday 14 May 2014

226. Conversation between Pujandar and Vasishta

Verse 226

காகம் என்ற வேடமதாய் விருக்ஷ மீதில்
காத்திருந்தார் வசிட்டர் வரக் கண்டார் காதன் (நாதன்)
ஏகமதாய் எட்டானே வசிட்டரே நீர்
எங்கு வந்தீர் வாரும் என்று பீடறிந்து
தாகமுடன் ஈசன் உம்மை அழைக்கச் சொன்னார்
சங்கதிக்காய் யானும் வந்தேன் எட்டான் தேனன்
பாகமுடன் எட்டான விபரம் தன்னை
பற்று மெய்ஞ்ஞானப் பொருள் அருள் பெற்றோரே

Translation:
In the garb of a crow on the tree
He waited, the lord he saw Vasishta approaching
The one who has not reached/the one who has become eight, “Vasishta ! You
Came here for what purpose?” he asked knowing his glory
The Lord desired to invite you
I came for that reason.  The one who cannot be reached/the 8, the honey-like sweet one
The detail of (him) becoming attainable/number eight along with the part/Shakti/the number 2 The one who has this true knowledge, the one who has received this the grace” (Vasishta said)

Commentary:
Pujandar is sitting on top of a tree in the form of a crow.  He sees Vasishta approaching him.  He asks Vasishta the purpose for his visit.  Agatthiyar tells us that Pujandar has attained the state of oneness, the eight or the akara state.  When it is interpreted as one who has not reached oneness it means ‘the one who has not merged with the Oneness’, one who still has his individual identity.  Vasishta tells Pujandar that Isa wanted him to explain about how the Divine could be attained/ become 8 (the letter a in Tamil) along with the part/Shakti (who is represented by the letter 2 or u) as Pujandar was the receipient of the grace, the essence of true wisdom.


அகத்தியர் வசிட்டர் புஜண்டர் சந்திப்பைப் பற்றி இப்பாடலில் கூறுகிறார். புஜண்டர் காகத்தின் வடிவில் மரத்தின் மீது அமர்ந்திருக்கிறார்.  அவர் வசிஷ்டர் தன்னைக் கானவருவதைப் பார்க்கிறார்.  அகத்தியர் புஜண்டரை ஏகமாக எட்டான் என்று அழைக்கிறார்.   இதற்கு இரண்டு விதத்தில் பொருள் கூறலாம்.  புஜண்டர் ஏக நிலையைஇறைவனுடன் கலந்திருக்கும் நிலையை அடையவில்லை, இன்னும் தனித்தன்மை பெற்று காகத்தின் உருவில் இருக்கிறார், அல்லது ஒருமையான அகார நிலையை உடையவன், எட்டாகியவன் என்றும் இதற்குப் பொருள் கூறலாம்.  நிலைபுஜண்டர் வசிட்டரிடம் அவர் வந்த காரணத்தை வினவுகிறார்.  அதற்கு வசிட்டர் இறைவன், எட்டான் (யாராலும் எட்டமுடியாதவன், எட்டாக இருப்பவன், அகாரமாக இருப்பவன்) தேனைப் போல இனிமையானவன் ‘பாகமுடன் எட்டான விவரத்தை (இரண்டு அல்லது உ என்ற பாகத்துடன் எட்டாக, அகாரமாக இருக்கும் விவரத்தை) உண்மையான ஞானம் என்ற அருளைப் பெற்ற புஜண்டரை அழைக்கின்றார் என்று கூறினார்.

No comments:

Post a Comment