Friday 30 May 2014

245. The creator was saddened a little

Verse 245
கன்னி இவள் என்றுரைத்தார் புசண்ட மூர்த்தி
கர்த்தன் அப்போ மனது சற்றே கலங்கினார் பின்
மண்ணினுள் தேவர்களும் பிறப்பித்திந்த
மார்கத்தில் இருப்பதுவே மௌனப் பெண்ணோ
உன்னிதமாம் உன் அருளை எங்கே காண்போம்
ஓஓஓ ஐவரும்தான் வணங்கினார்கள்
கொன்னி அவள் வாருரைக்காள் சிவமே கன்னி
கொலு முகத்தில் நால்வரும்போய் வணங்குவாரே

Translation:                                      
Pujanda murthy said, “She is a maiden”
The creator’s heart saddened a little.  Then
Is it this silent girl who made the devas and others
Is she the one who remains in the margam (path)
Where will we see your grace, glory
O O O the five saluted
The stammering one will not reveal the way she arrives, the maiden is verily Sivam
The four will go to the beautiful face and salute her.

Commentary:
Pujandar reiterates that the lady is the maiden, vaalai, vaamai.  One wonders why the creator’s heart saddened.  May be because he is missing her as she has not reached him yet.  The next two lines make one think this may be true as Siva laments saying where will he witness her grace, the glory of the one who created all life forms.  Agatthiyar/ Pujandar says that the five worshiped her.  This must be the five deities, pancha kartha, Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva. The next line says that the four went to the assembly and worshiped her.  The four may be the above deities except Sadasiva as he is already at ajna, the face. 


அந்தப் பெண் கன்னி என்று புஜண்டர் மீண்டும் கூறுகிறார்.  இதைக் கேட்டு படைப்பவன் சிறிது மனம் கலங்கினாராம்.  எதற்கா?  சக்தி தன்னுடன் சேராமல் இன்னும் கன்னியாக, தனியாக இருக்கிறாளே என்றா?  இதனை அடுத்து வரும் வரிகள் இக்கருத்துக்கு வலுவேற்றுகிறது.  தேவர்களையும் பிறரையும் பிறப்பித்த மௌன கன்னியின் அருளை எங்கே காண்பது என்று அவர் கேட்கிறார்.  இதனை அடுத்து ஐவரும் அவளை வணங்கினர் என்கிறார் புஜண்டர்.  ஐவர் என்பது முன்பு பஞ்ச கர்த்தாக்கள்பு என்று பார்த்த லன்கள், பொறிகள், விழிப்புநிலைகள் ஆகியவையாக இருக்கலாம்.  அடுத்து நால்வர் கொலு முகத்துக்கு வந்து வணங்கினராம்.  அவர்கள் தேவர்கள் மானுடர்கள் தாவரங்கள், மிருகங்கள் என்ற நால்வகை உயிர்களாக இருக்கலாம். 

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அம்மா,

    உண்மையிலேயே தேவர்கள் என்பவர்கள் யார்? சித்தர்கள்,தேவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றனர்?

    ReplyDelete
  3. வாலை என்பது பெண் ரூபம் என்று சொல்லி இருந்தாலும் உண்மையிலேயே அப்படி ஒரு உருவம் இல்லை தானே? கண்களுக்கு தெரியாமல் எட்டுத்திக்கும் பரவியிருக்கும் அந்த சக்திக்கு தானே வாலை என்று குறிப்பிட்டு உள்ளனர்?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. திருமூலரின் திருமந்திரத்தில் பலவிதமான ஆத்மாக்க்களை அவர் விளக்குகிறார். பிரளயகலா, சகலா, விஞ்ஞானகலா என்று அவர்களது தன்மைகளை விளக்குகிறார். அத்தகைய ஆத்மாக்களில் ஒரு வகை தேவர்கள்.
    வாலை என்பது குண்டலினி சக்தி. இறைவனின் செயலற்று இருக்கும் நிலை சிவ நிலை, செயலுடன் கூடியது சக்தி நிலை. வாலை அல்லது மனோன்மணி குண்டலினி சக்தி. அசைவை உடையவள். அதனால் அவளுக்கு பெண் உருவம் கொடுக்கப்படுகிறது.

    ReplyDelete
  6. மிக்க நன்றி!

    ReplyDelete