Saturday 17 May 2014

229. "I was sitting on the branch and witnessing creation and dissolution!" Pujandar

Verse 229
வந்தீரே வசிட்டரே இன்னம் கேளும்
வந்து நான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி
இந்தமா மரக்கொம்பில் இருந்தேன் இப்போ
இதுவேளை எவ்வளவோ க்ஷணமே காணும்
அந்தமோ ஆதியோ ரெண்டும் காணார்
அவர்களெலாம் ரிஷியோகி சித்தரானார்
சந்தேகம் உமக்குரைக்கப் போகாதையா
சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே    

Translation:
Vasishta who came here!  Listen some more
I will come and tell removing my garb
I was on top of this branch of the mango tree/this great tree
I saw so many things over time from here
Those who did not see the beginning or the end
Became rishi, yogi and Siddha
Your doubt will not be cleared when I tell you
Tell the Lord that I am on my way now.

Commentary:
Pujandar tells Vasishta that he remained on the branch of a mango tree/ this great tree and saw everything, from the beginning to end and that most off the rishi, siddhas and munis do not know the beginning or end of creation.  He tells Vasishta that by mere explanation Vasishta’s doubts will be cleared. He tells Vasishta to tell the Lord that he is on his way.  

The expression ‘maa maram’ means a great tree as well as a mango tree.  If it is the mango tree then one wonders where the mango tree was when everything was destroyed!  Hence, it should be ‘the great tree’.  The great tree is the sushumna nadi.  Thus, Pujandar was remaining at the top of the sushumna, in the super conscious state when he witnessed creation and dissolution.  Him saying that several rishis, yogis and siddhas have never seen these scenes means that they have not reached the supreme state that Pujandar is in.  Agatthiyar has previously decribed that there are several souls, gurus, who are in different states of evolution, with their consciousness raised to different cakras. This explains why these rishis and siddhas never witnessed what Pujandar saw.  Pujandar tells Vasishta that mere explanation will not clear Vasishta’s doubts and that he was coming to the Rudra Sabha to discuss it further.  Rudra sabha must mean the super conscious state.

புஜண்டர் வசிஷ்டரிடம் தான் ஓர் மாமரத்தின் கிளையில் தனது வேஷத்தை களைந்து அமர்ந்திருந்தபோது உலகின் தோற்றம் லயம் ஆகிய சமயங்களில் நடைபெறும் காட்சிகளைக் கண்டதாகவும் பல ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர் இந்த காட்சிகளைக் கண்டதில்லை என்றும் கூறுகிறார்.  அதன் பிறகு அவர் வசிஷ்டரின் சந்தேகம் வார்த்தைகளால் விலகாது என்றும் தான் இப்போதே வந்தேன் என்று இறைவனிடம் சொல்லுமாறும் கூறுகிறார்.


மா மரம் என்பது மாங்காய் காய்க்கும் மரத்தையும் பெருமை வாய்ந்த மகா பெரிய மரத்தையும் குறிக்கும்.  அது மாங்காய் மரமாக இருந்தால் பிரளயத்தின்போது எல்லாம் அழிந்துவிடுமே, இந்த மாமரம் மட்டும் எங்கே இருக்கும் என்ற கேள்வி பிறக்கும்!  அதனால் மா மரம் என்பதற்கு பெருமை வாய்ந்த மரம் என்றே பொருள்கொள்ள வேண்டும்.  இந்த மாமரம் சுழுமுனை நாடி.  அது ஆக்ஞையில் முடிந்து தனது கிளைகளை சஹாஸ்ராரத்துக்கும் மேலே பரப்பியுள்ளது.  இந்த கிளையில் அமர்ந்துதான் புஜண்டர் இந்த அறிய காட்சிகளைப் பார்த்திருக்கிறார்.  அதாவது பரவுணர்வு நிலையிலிருந்து இந்த அறிய காட்சிகளைப் பார்த்திருக்கிறார். பிற ரிஷிகளும் முனிவர்களும் அதைக் கண்டதில்லை என்று அவர் கூறுவது அந்த ரிஷிகளும் முனிவர்களும் புஜண்டர் அடைந்த உயர் நிலையை அடையவில்லை என்று பொருள்படும்.  முந்தைய பாடல்களில் அகத்தியர் பல குருக்கள் தமது விழிப்புணர்வை ஒரு குறிப்பிட்ட நிலை வரைதான் உயர்த்தியுள்ளனர் அதனால் அவர்களுள் வித்தியாசம் உள்ளது என்று கூறியிருப்பது இந்த வாக்கியத்துக்கு வலுவேற்றுகிறது.  புஜண்டர் வெறும் வார்த்தைகளால் தான் விலக்கினால் வசிஷ்டரின் சந்தேகம் தீராது என்றும் தான் இப்போதே வருவதாக இறைவனிடம் கூறுமாறு வசிஷ்டரிடம் கூறுவது அவர் வசிஷ்டரையும் தனது நிலைக்கு உயர்த்துவதைக் குறிக்கும். ஏனெனில் இந்த அறிவு வார்த்தைகளுக்கு அப்பால்பட்டது அனுபவத்தினால் உணரவேண்டியது. 

3 comments:

  1. A Mighty Revelation and Jnanam (Knowlegde and Wisdom) Indeed !! This was Exactly what Agatthiyar meant when HE mentioned that, only HE and Pujandar had Witnessed all the Four Pralayams...Creations and Dissolutions...

    ReplyDelete
  2. Yes, in the next verse he tells how Pujandar came to the rudra sabha, very interesting indeed!

    ReplyDelete
  3. Rudra Sabha.....State of Supreme Consciousness,,,,,,SHIVOHAM SHIVOHAM...

    ReplyDelete