Friday 23 May 2014

235. When the wheels turn....

Verse 235
அண்டப் பிரட்டு
கேள் ஐயா நடந்த கதை சிவமே உண்மை
கெடியாகச் சக்கரங்கள் திரும்பும்போது
பாள் ஐயா தச நாதம் மௌனம் பாயும்
பரமான மௌனமது பரத்தில் சாடும்
ஏள்ஐயா அடுக்குகளும் இடிந்து வீழும்
இருந்த சதா சிவம் ஓடி மணியில் மீளும்
கோள் ஐயா இது கேளு எவரும் சொல்லார்
ஓஓஓ அண்டம் எல்லாம் கவிழ்ந்து போமே

Translation:
Reversal of the universes

Listen to the story of what happened.  Only Sivam is the truth.
When the wheels turn firmly
The void, Sir, the ten sounds return to silence
The silence, the manifested divine, will return to the param.
All the seven layers will crumple down
The Sadasivam will run back to the jewel (pearl)
Listen to this Sir, no one will tell this
O!O!O! All the universes will topple.

Commentary:
Pujandar tells Vasishtar that the state of super consciousness, Sivam is the only truth, the unchanging entity, satyam.   Everything else changes.  He says that during dissolution, when the wheels turn, everything returns to the ‘paazh’ or indefinable space.  The six cakras that are depicted as wheels, when they turn in one direction cause creation.  When their direction is reversed it leads to dissolution.  We have already seen about the triple paazh or the three spaces of creation. In the space of creation the manifested sound will return to silence which then returns to the para state or the original state of nada.  The seven layers are the seven worlds or seven states of consciousness, jagrit(wakeful), svapna (dream state), sushupti (deep sleep), turiya (state of supra consciousness), turiyathitha, bindhu and nada.  Books on yoga state that the seven worlds span the human body from navel upwards.

Sadasiva  is the state where only the ahamkara, the first among the five innate impurities is present. third principle of universal experience.  The ahamkara is the cause for the world we create for ourselves.

Paramasiva is the Ultimate Reality which is both transcendental and immanent.  The power of self revelation of Parama Siva or the chith is Siva tattva.  The ananda that ensues upon self revelation is the Sakti tattva.  The will of Parama siva or the iccha sakti is Sadasiva.  This is the first step in manifestation.  This is followed by jnana sakti or knowledge, the Isvara and the kriya sakti or power of assuming any form, creation, is Sadvidya.  When Agatthiyar says that Sadasiva merges with the ‘mani’ he refers to the first state of manifestation or the will to manifest merging with the ultimate state of consciousness, the state of Paramasiva.

புஜண்டர் இந்த விஷயத்தை பரவுணர்வு நிலைக்கு, சிவத்துக்குக் கூறுகிறார்.  அதாவது பிரளயத்தை நினைவு கூறுகிறார்.  பிரளயத்தின்போது சக்கரம் சுழலும் என்றும் அனைத்தும் பாழை அடையும் என்றும் புஜண்டர் கூறுகிறார்.  ஆறு ஆதரங்களான சக்கரங்கள் ஒருவிதமாகச் சுழலும்போது படைப்பு ஏற்படுகிறது.  அதுவே தனது கதியை மாற்றிக்கொள்ளும்போது பிரளயம் ஏற்படுகிறது. முப்பாழைப் பற்றி நாம் முன்னமே பார்த்துள்ளோம்.  இந்தப் பாழிளிருந்து தோன்றும் சப்தம் மௌனத்தை, நாதத்தின் முதல் நிலையான பரா நிலையை அடைகிறது.  ஏழு அடுக்குகள் என்பது ஏழு உலகங்களை, ஏழு விழிப்புணர்வு நிலைகளைக் குறிக்கும்.  அவை விழிப்பு, கனவு, ஆழ்தூக்க நிலை, துரியம், துரியாதீதம், பிந்து, நாதம் என்பவை.

படைப்பு நிகழும்போது பரவுணர்வின் மூன்றாவது நிலை சதாசிவம் என்று காஷ்மீர சைவம் கூறுகிறது.  பரமசிவம் என்பது கடவுள் நிலை, அதாவது அனைத்துள்ளும் எல்லாமாகவும் இருக்கும் நிலை.  இந்த நிலை தன்னைத் தான் அறிவது அதாவது சித் நிலை சிவ தத்துவம்.  இந்த நிலை தன்னை அறியும்போது ஏற்படும் ஆனந்தமே சக்தி, இந்த நிலையின் படைப்புச் சக்தி.  இந்த சிவ தத்துவமும் சக்தி தத்துவமும் பிரிக்கமுடியாதவை. ஏனெனில் சக்தி என்பது சிவத்தின் தன்மை.  இதனை அடுத்த நிலை சதாசிவ நிலை .  இது இச்சா சக்தியைக் குறிக்கும்.  இந்த நிலையில்தான் முதன்முதலாக காட்சி, காணும்பொருள் என்ற பிரிவு ஏற்பட ஆரம்பிக்கிறது.  சதாசிவம் மணியில் புகுகின்றது என்று அகத்தியர் கூறுவது இந்த படைப்பின் முதல் நிலை மணியான பரவுணர்வில் பரமசிவத்தில் ஒடுங்குவதைக் குறிக்கிறது. சதாசிவத்தை அடுத்த நிலை ஞானசக்தி அல்லது ஈஸ்வர நிலை.  அதனைத் தொடர்வது சத்வித்யா அல்லது கிரியா சக்தி, இறைவன் தான் உலகமாகப் பரிணமிப்பது.  மேற்கூறிய சிவ தத்துவம், சக்தி தத்துவம், சதாசிவ தத்துவம், ஈஸ்வர தத்துவம், சத்வித்யா என்ற ஐந்தும் தூய தத்துவங்கள் எனப்படுகின்றன ஏனென்றால் அவற்றில் மாயை இன்னும் கலக்கவில்லை.  

No comments:

Post a Comment