Verse 211
சேருவேன் என்றுரைத்தாய் மணியே கண்ணே
சிவசிவா புலத்தியனே செப்பக் கேளு
சாருவேன் அவர்களது சார்வு கேளு
சதாகாலம் வாசியிலே நடுநிற்பார்கள்
கூறுவேன் சலமதில் நிற்பார் உண்டு
கூகூகூ நாபியினும் நிற்பார்கள் உண்டு
சேருவேன் கண்டமத்தில் நிற்பார் உண்டு
சிவ சிவா சுழிமேல் நிற்பார் உண்டே
Translation:
You said you will go him, My Jewel!, my beloved
Siva siva!
Pulatthiya! Hear me
Hear about them, you want to associate with
They will remain in the vaasi, the center, at all times
I will tell you, there are some who remain in the fluid
Koo!koo! koo! There
are some who remain at the navel
I will join some who remain in the throat
Siva siva! There are
also some who remain on top of the sushumna
Commantry:
This is an important verse where Agatthiyar describes gurus
at various stages of evolution. A good guru will always have his breath
regulated through the vasi yoga, they will have their awareness stationed at
the sushumna nadi. Some of them have the awareness at the muladhara or
svadhistana,in the fluid of kundalini.
Some may have managed to raise their awareness up to the navel or the
manipuraka cakra. Some of them be housed
at the visuddhi or the throat cakra while some may have attained the pinnacle
of having it raised all the way upto the terminus of the sushumna nadi.
This verse explains the behavior of different gurus as their
nature depends on where their awareness is housed. The supreme gurus are those who have reached
the top of the sushumna nadi.
அகத்தியரின்
இப்பாடல் மிக முக்கியமானதொன்று. இதில்
அவர் ஏன் குருக்கள் வெவ்வேறு தன்மையராக இருக்கின்றனர் என்று விளக்குகிறார். குருக்களை அனைவரும் குரு தத்துவத்தைக் குறித்தாலும்
அவர்கள் தமது விழிப்புணர்வை எவ்வளவு தூரம் தூய்மைப்படுத்தப்பட்டு சக்கரங்களில் ஏற்றப்பட்டுள்ளது
என்பதைப் பொருத்து அவர்களது நடவடிக்கை உள்ளது. எல்லா நல்ல குருக்களும் வாசியோகத்தில்
எப்பொழுதும் திளைத்தவராக தமது விழிப்புணர்வை சுமுனையில் குவித்தவராக இருப்பர். சில குருக்கள் சலம் என்னும் குண்டலினி
மூலாதாரம் சுவாதிஷ்டானத்தில் இருக்கும் நிலையில் நிற்பர். சில நாபியிலுள்ள மணிபூரக
சக்கரத்தில் நிற்பர். சிலர் தொண்டையில் உள்ள
விசுத்தி சக்கரத்தில் நிற்பர், மற்றும் சிலர் சுமுனையின் உச்சிக்கு செல்வதில்
தேர்ச்சி பெற்றிருப்பர். இவ்வாறு அவர்கள்
எந்த நிலையில் இருக்கிறார்களோ அதைப் பொருத்து அவர்களது பழக்க வழக்கங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு
அவர்களது நடத்தையாகக் காணப்படும்.
No comments:
Post a Comment