Wednesday, 28 May 2014

241. World emerging during creation

Verse 241
லீலை போலக் காணு முகம் பெண்போல் காணும்
நிலை பார்த்தால் புருஷரைப் போல் நெறிப்புக் காணும்
வாலைபோல் காணும் ஐயா பின்னே பார்த்தால்
மகத்தான் அண்டமது கோர்வை காணும்
ஆலைபோல் சுழன்றோடும் கம்பத்துள்ளே
அரஅரா சக்கரங்கள் ஆறும் காணும்
சேலையாம் அண்டமதில் சிவம்தான் வீசும்
சிவத்திலே அர அரா பரமும் காணே

Translation:
The face that appears as divine play will appear like a lady’s face
It will also show the frown like a man
It will look like Vaalai, when looked again/behind
The magnificent universe will appear together
Within the pillar that whirls like a fan
Ara araa!  The six cakras will be seen
In the cloth of the universe Sivam will blow
Within the Sivam, ara araa! See the Param.

Commentary:
This verse is the first in the series that talk about creation.  Pujandar says that the image that is seen in the pillar, the sushumna will appear like a lady’s face.  Then again, it will appear like the frown of a man.  This means, the embodiment of consciousness will appear as both a man and a woman.  It will appear like the kundalini sakti.  The universe in its totality will appear within the pillar that whirls like a wheel.  The six cakras will appear next.  Within this manifold, the cloth, the consciousness Sivam will blow.  Within this super consciousness the divine with a form, param, the manifested universe with the life forms will appear.
This verse explains creation in the microcosm, where the sushumna nadi, the energy centers and consciousness along with all the manifestations appear.  It also explains creation in the macrocosm where the universes appear.  This verse shows us clearly that what is perceived as manifested universe is so only because of consciousness.  This is in line with the Kashmir Saivism philosophy which states that anything that does not impress upon the consciousness does not exist.

சிருஷ்டியைப் பற்றிய முதல் பாடலான இதில் புஜண்டர் ஸ்தம்பத்தில் தோன்றுவது பெண் முகம்போல் இருக்கும் ஆனால் அதில் ஆணைப் போல நெறிப்பு இருக்கும் அது வாலை என்கிறார்.  அதாவது அந்த பரவுணர்வு ஆணுமல்ல பெண்ணுமல்ல இரண்டாகவும் இருப்பது.  உருவமற்ற குண்டலினி சக்தியும் அதுவே.அதன் பிறகு அண்டமனைத்தும் ஒன்றாக இருக்கும் காட்சி தென்படுகிறது.  ஆறு சக்கரங்களும் அடுத்து தோன்றுகின்றன.  இந்த சக்கரங்களான சீலையில் சிவம் அல்லது விழிப்புணர்வு அசைகிறது.  அதனால் பரம் எனப்படும் உருவமுள்ள இறைமை உலகம் தோன்றுகிறது.

இப்பாடல் உலகம் தோன்றுவதை விளக்கப்புகுந்து சிற்றம்பலமான உடல் தோன்றுவதையும் விளக்குகிறது.  இவ்வாறு கண்ணால் காணும் உலகம் விழிப்புணர்வினால்தான் அதன் நிலையில் இருக்கிறது.  விழிப்புணர்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாத எதுவும் இருப்பைப் பெறுவதில்லை என்ற காஷ்மீர சைவத்தின் கருத்தை இங்கு நினைவுகூர வேண்டும்.

No comments:

Post a Comment