Monday, 18 August 2014

332. For whose sake does Devi perform this wonderful feat?

Verse 332
செய்வாளே பத்தர் சித்தர் முனிவர் கண்டு
திருவடியில் வணங்குகின்ற அடியார்க்காக
மெய்வாளே சபை ஆறும் கண்டோர்க்கு ஐயா
வெளியாகி உள்ளாக நிறைந்தோர்க்கையா
செய்வாளே சுழி ஓடி நிறைந்தோர்க்கையா
சிவ சிவா அம்பலத்தில் நின்றோர்க்கையா
எய்வாளே சமைய மதம் கொண்டோர் தன்னை
இருப்பாளே தன்புகழை நினைந்தோர்க்கு எண்ணே

Translation:
She will do so for the baddha, siddha and muni
For the sake of the devotees who salute her feet
It is the true sword for those who have seen the six sabhas
For those who have become space and filled as outside and inside 
She will do for those who have become full running through the whorl
Siva sivaa for those who remain in the arena (ambalam)
She will toss those who are crazed by religion
She will remain for those who contemplate on her glory. Contemplate. 

Commentary:
The reason for Devi performing the wonderful feat mentioned in the above verse is for the sake of evolved souls- the siddha, the muni/those who contemplate on her, for devotees and for the baddha or the worldly souls.  She will do so for souls who have experienced the six cakras, for those remain as the supreme space, those who have traveled through the whorl and those who remain in the ambalam or sahasrara, the state of supreme consciousness.  In short, she will remain so for the sake of those who eulogize her.


இத்தகைய அதிசயங்களை தேவி யாருக்காகச் செய்கிறாள், எதற்காகச் செய்கிறாள் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  சித்தர்கள், முனிவர்கள், உலக மக்களான பத்தர்கள், அடியார்கள் ஆகியோருக்காக தேவி இந்த செயல்களைச் செய்கிறாள்.  சுழியான குண்டலினியைத் தமது சக்கரங்களில் பாயச் செய்து, ஆறு ஆதாரங்களில் பயணித்து அம்பலம் எனப்படும் சஹஸ்ராரத்தை அடைந்து அங்கே தனது புகழை எண்ணுவோருக்காக தேவி இந்த வியக்கத் தக்க செயல்களை நிகழ்த்துகிறாள். 

Sunday, 17 August 2014

331. Durga, she dances on the pillar!


Verse 331
ஓம் என்றே ஆடி நின்றாள் கம்பம் மீது
உலகமெலாமாம் என்றே கம்பம் ஆகி
ஊம் என்றே உலகம் எல்லாம் அடங்கித் தென்றாள்
ஓ ஓ ஓ துர்க்கை யவள் ஆடும் கூத்தை
தாம் என்றாள் ஆடி நின்றாள் ஒழியாக் கூத்து
சங்கல்பம் விகல்பம் என்ற சட்டை நீக்கி
ஆம் என்றால் கூத்து விட்டு வார தெப்போ
அடி முடியில் நின்றோர் முன் அருள் செய்வாளே

Translation:
She remained dancing on the pillar as Om
As the pillar of the entire world/as pillar of "aam"/aham
She said, “all the worlds abided as oom”
O O O The dance of her, Durga
She said "self"/taam, she danced, the dance that never terminates
Removing the two shirts, sankalpa and vikalpa
When is the time to come away from the dance, if it is aam?
She will grace this information in front of those who remain at the top and bottom termini.

Commentary:
This is an interesting verse where Agatthiyar calls Kundalini Sakti as Durga.  The term Durga means “one who is invincible” and also one who removes difficulties.  Navadurga are the nine forms of Durga are worshiped during navaratri.  Due to their association with the cakras in the body Agatthiyar is mentioning her here while talking about ascension of Kundalini sakthi.  According to scriptures, Durga incarnates as Sarasvati, Lakshmi and Kali.  Each of them manifest into three more forms and thus there are totally nine Durgas or nava durga. 

The first form of the nine Durga is Shilaputri.  She is worshipped on the first day of Durga Puja. She represents the muladhara cakra. As the daughter of Daksha, the muladhara, where our “not easily shakable” karma, the rock, is stored, she is called Shilaputri or the daughter of the rock.

Her second form is called Brahmacharini.  She represents the svadishtana cakra in this form. Svadishtana or sva+adhishtana means the locus of the Self.  Karmas are usually stored in the muladhara and they operate through the svadishtana.  Durga who represents Svadishtana, where the kundalini who is not “married” to Siva resides, is the Brahmacharini. She remains as the one who contemplates on the Brahmam.

In her third form she is Chandrakhaanta representing the manipuraka cakra. Chandra represents consciousness.  Chandrakaantha means one who adores the supreme consciousness.  The limited soul held in the concealed state at the muladhara and svadhishtana starts its journey of breaking free from its fetters, desiring (kaantha) the state of supreme consciousness, the chandra.
 
Kooshmanda Durga represents the fourth cakra, the anahata.  This term means “one who brings a little warmth to the universe”.  A warm heart means a heart filled with love.  Tirumular has referred to this as “ambe sivam”

The Skandamata, the fifth form of Durga, represents the Visuddhi cakra. At the vishuddhi cakra the base qualities or animalistic tendencies start their transformation into Divine qualities.  Hence, this place is called "kanda" or the meeting point.  The union of Siva and Sakti or the universal and limited consciousness starts from this cakraa.  Hence, she is Skandamata, the mother who will birth Skanda.

Katyayani Durga represents the ajna cakra.  Devi Kanyakumari is a form of Katyayani Devi. 

Kaalaraatri Durga, Maha Gauri and Siddhi Daatri correspond to the three cakras above the ajna.  They could be the bindu cakra, the sahasrara and the dvadasantha or the bindu, guru and sahasrara cakra. The kundalini sakthi flows through the sushumna nadi until the ajna cakra.  After ajna it flows through several channels, goes through the indu cakra at the back of the head, the guru cakra at the entrance of the sahasrara and then reaches the pinnacle, the sahasrara.  Thus the path of kundalini beyond ajna is very fierce, unknown, dark and the Durga who represents it is Kaalaratri.  Also, the concept of time stops at ajna where only soul consciousness exists.  Thus, this form of Durga “kills time”.  Beyond Kaal ratri is Maa Gauri, the benevolent mother, the guru who takes us to Siva at the sahasrara.  At Sahasrara she is Siddhi daatri or granter of Siddhi.

Siddhi Daatri was the first Durga or Devi who emerged from Siva at the time of creation.  Thus she represents the state of supreme consciousness. 
The ascendance of wisdom is said to a state of complete effulgence, koti surya prakasa.  This state is represented by Kashmunda.

Thus the nine forms of Durga are nothing but Kundalini Sakti in various forms and navaratri puja is actually a puja for kundalini sakthi.

Now going back to the verse-  aam means aham or the sense of Self.  In Nandikesakaasika it is said that the first letter of the sanskrit alphabet a joins with the last letter ha and becomes aham.  Thus it encompasses all the tattva, all the entities within it.  Oom represents the Self in action.  The "aaam enra kampam oom enru aagi" means, the actionless state has a ripple in it, kampam means slight movement, and becomes the world, the oom.  This ripple is the dance of Durga, the dance of Self.  It is the self with distinctions as "I" and "that".  The two shirts sankalpa and vikalpa means will and imagination.  These are two actions of maya that operates through the mind.  sankalpa is will that controls the prana.  Hence, the Raja yogis consider the will or the mind to be greater than the prana or the breath.  vikalpa is imagination.  Swami Sivananda says that maya plays havoc through this vikalpa.  Imagination or visualization is both good and bad.  Siddhas recommend visualization as a technique to break away from limitedness.  It is also the cause for bondage as the mind imagines without any limit.  Hence, these two should be removed, that is, influence of the mind should be removed to reach the supreme state.  One has to even go beyond the aham the state of consciousness as there is still the split of "me and my consciousness" or Siva and Sakti, to reach the paraveli or the state of supreme consciousness.  Durga or Self reveals how to do so for those who are practising kundalini yoga by being aware of the top and bottom termini, the sahasrara and muladhara, the unmanifested state and completely manifested state

இப்பாடலில் அகத்தியர் சக்தி, குண்டலினியை துர்கா என்று அழைக்கிறார்.  துர்கா என்றால் “துக்கத்தை அறுப்பவள்”, “யாராலும் வெல்ல முடியாதவள்” என்று பொருள்.  நவ துர்கா என்பது துர்கையின் ஒன்பது நிலைகளைக் குறிக்கும்.  துர்கையின் இந்த ஒன்பது உருவங்கள் நவராத்ரியின்போது வழிபடப்படுகின்றன.  துர்கையின் இந்த நிலைகள் நம் உடலில் உள்ள சக்கரங்களுடனும் குண்டலினி சக்தியுடனும் தொடர்பு கொண்டிருப்பதால் அகத்தியர் இப்பாடலில் துர்கையைப் பற்றிப் பேசுகிறார்.  துர்கையே சரஸ்வதி, லட்சுமி, காளி என்ற மூன்று உருவங்களாகத் தோன்றுகிறாள் என்று நூல்கள் கூறுகின்றன.  இந்த மூவரும் இன்னும் மூன்று நிலைகளில் இருந்து நவதுர்கையாகக் காட்சியளிகின்றனர். 

இவர்களில் முதலாமவர் சிலாபுத்ரி என்று அழைக்கப்படுகிறார்.  அவர் நமது மூலாதாரத்தைக் குறிக்கிறார்.  சிலா என்பது பாறையைக் குறிக்கும்.  பாறையைப் போன்ற கடினமான நமது கர்மங்களும் சம்ஸ்காரங்களும் மூலாதாரத்தில் சேர்த்துவைக்கப்பட்டுள்ளன.  அவையே பாறையைப் போல நமக்கு ஆதாரமாக இருக்கின்றன.  தட்சன் என்று குறிப்பது இந்த தத்துவத்தைத்தான்.  இவ்வாறு துர்கா தட்சனின் புத்ரி, இங்கிருந்து தோன்றுபவள்.  குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து எழுவதை இது குறிக்கிறது.

இந்த நிலையை அடுத்து இருபது பிரம்மச்சாரிணி.  இது சுவாதிஷ்டானத்தைக் குறிக்கும்.  சுவாதிஷ்டானம் ஆத்மாவின் இடத்தைக் குறிக்கும்.  சுவாதிஷ்டான சக்கரமும் மூலாதார சக்கரமும் சேர்ந்த ஒரு பிறப்பாக விளங்குகின்றன.  இந்த நிலையில் விழிப்புணர்வு, பரவுணர்வுடன் சேரவில்லை, அவள் பிரம்மசாரியாக இருக்கிறாள்.  பிரம்மத்தை அறிய முயல்பவளாக, அதைப் பற்றி எண்ணுபவளாக இருக்கிறாள். 
துர்கையின் மூன்றாவது நிலை சந்திரகாந்தா. இது மூன்றாவது சக்கரமான மணிபூரக சக்கரத்தைக் குறிக்கும்.  சந்திரன் என்பது பரவுணர்வு நிலையை,விழிப்புணர்வைக் குறிக்கும்.  சந்திரகாந்தா என்பது இந்த விழிப்புணர்வை விரும்பும் நிலை.  கர்மங்களால் மூடப்பட்டு இருந்த ஆத்மா விழிப்புணர்வை விரும்பி தனது மேல்நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறது.
கூஷ்மாண்டா என்ற நான்காம் துர்கா இதயத்தில் உள்ள அனாகத சக்கரத்தைக் குறிக்கிறாள்.  இந்த சொல் அண்டத்துக்கு சிறிது கதகதைப்பைத் தருபவள் என்று பொருள்படும்.  கதகதப்பான இதயம் என்பது அன்பான இதயம்.  இதையே திருமூலர் அன்பே சிவம் என்கிறார்.
இதனை அடுத்த துர்கா ஸ்கந்தமாதா.  இவள் கழுத்தில் உள்ள விசுத்தி சக்கரத்தைக் குறிக்கிறாள்.  இங்குதான் மிருக குணங்கள் தேவ குண்டங்களைச் சந்திக்கின்றன.  அதனால்தான் கழுத்து கண்டம் எனப்படுகிறது.  விழிப்புணர்வு இந்த சக்கரத்துக்கு மேலே ஏறி உச்சியை அடையும்போது ஸ்கந்தம் அல்லது பரவுணர்வுடன் கூடிய நிலை பிறக்கிறது.  இதனால் இங்கு இருக்கும் துர்கா ஸ்கந்தனின் தாயாவாள்.

இதனை அடுத்து இருப்பது காத்யாயனி.  தேவி கன்யாகுமரி இந்த காத்யாயனி தேவியைக் குறிக்கிறாள்.  இவள் இருப்பது ஆக்ஞா சக்கரத்தில். 
இவளை அடுத்து இருப்பது காளராத்ரி, கெளரி மற்றும் சித்தி தாத்ரி.  இவர்கள் ஆக்ஞாவுக்கு மேலே இருக்கும் மூன்று சக்கரங்களான பிந்து, குரு மற்றும் சஹாஸ்ராரதைக் குறிக்கும்.  ஆக்ஞையில் இடை பிங்களை சுழுமுனை என்ற மூன்று நாடிகள் முடிவுறுகின்றன.  இதற்கு மேல் குண்டலினியின் பயணம் பெரும் சக்தியுடன் பல கிளைகளில் நடக்கிறது.  பிந்து சக்கரம் என்பது நமது தலையின் பின்புறம் இருக்கும் சக்கரம்.  குரு சக்கரம் சஹாஸ்ராரத்தின் வாயிலில் இருப்பது.  இந்த சக்திமிக்க பயணத்தைக் குறிப்பவள் காளராத்ரி.  அவளை அடுத்து இருக்கும் மா கெளரி அன்புடன், மென்மையாக நம்மை சஹாஸ்ராரத்துக்கு அழைத்துச் செல்கிறாள்.  இவளது அடுத்த நிலை சித்தி தாத்ரி அல்லது எல்லா சித்திகளையும் அருளுபவள்.  இவர் அனைவருக்கும் மேலே இருப்பவள் கஷ்முண்டா அல்லது பரிபூரண ஜோதி.  அவளே கோடி சூரியப்பிரகாசத்துடன் இருப்பவள். இதுவே ஆன்மாவின் உச்ச நிலை, பரவுணர்வு நிலை.   
இவ்வாறு நவதுர்கைகளும் குண்டலினி சக்தியின் ஒன்பது நிலைகளைக் குறிக்கின்றனர்.  

இனி பாடலில் உள்ள பிற கருத்துக்களைப் பார்ப்போம்.  ஆம் என்பது விழிப்புணர்வின் செயலற்ற நிலை.  சிவ நிலை.  நந்திகேச காசிகாவில் சம்ஸ்கிருத எழுத்துக்களில் முதலாம் எழுத்தான அ என்பது கடைசி எழுத்தான ஹ என்பதுடன் சேர்ந்து அஹம் அல்லது சுயம் என்று ஆகியது என்று கூறப்படுகிறது.  இந்த சுயத்தில் சிறிது அசைவு அல்லது கம்பம் ஏற்பட்டு அது ஊம் அல்லது செயல்படும் நிலையை உலகமாக விரியும் நிலையைப் பெறுகிறது.  இதுவே தான் என்று ஜீவாத்மாவாக உலகில் செயல்படுகிறது.  இந்த ஜீவாத்மாவைக் கட்டுப்படுத்துபவை சங்கல்பமும் விகல்பமும்.  சங்கல்பம் என்பது ஒன்றைச் செய்யவேண்டும் என்று உறுதியாக எண்ணுவது.  இந்த சங்கல்பம் மனதினால் இயங்குகிறது.  பிராணன் மனம் என்ற இரண்டில் மனமே பிரணனைவிட சக்திவாய்ந்தது ஏனெனில் அதற்கு சங்கல்ப சக்தி உள்ளது என்று சுவாமி சிவானந்தா கூறுகிறார்.  விகல்பம் என்பது கற்பனை.  மாயை இந்த விகல்பத்தின் மூலம் எல்லா ஆட்டத்தையும் ஆடுகிறது.  அதனால்தான் அகத்தியர் இந்த இரு சட்டைகளையும் அகற்ற வேண்டும், ஆத்மாவின்மீது மனம் கொண்டுள்ள கட்டுப்பாட்டை விலக்க வேண்டும் என்கிறார்.  இது ஆம் என்ற சிவ நிலைக்கும் அதனை அடுத்த, எவ்வித குறியும் இல்லாத பரவுணர்வு நிலைக்கு அழைத்துச் செல்லும்.  ஆம் என்பது சக்தியும் சிவனுமாக இருக்கும் நிலை.  இதனைக் கடந்ததே வெட்டவெளி எவ்வித identity இல்லாத நிலை. 

Friday, 15 August 2014

330. Experiences when Kundalini ascends

Verse 330
தண்டு தனைத் துண்டு துண்டாய் மாய்கை எல்லாம்
தரித்துவிட்டாள் நல்வினை தீ வினைகள் ரெண்டும்
கடுதனை அற்பர்களும் மெச்சி நிற்க
கரணம் ஓர் மூன்று செய்தாள் கம்பம் மீது
கொண்டு நின்று அறியோடு சித்திரியும் ஆகி
குருநம சிவாய சிங்காரத்தோடு
பண்டு தனை ரீங்காரம் ஐவர் ஓடு
பரியாசம்புல்லவடா கிலி ஓம் என்றாள்

Translation:
She cut the maya into pieces in the stem
And adorned the two, good and bad actions
With even the cheap ones praising her
She tumbled thrice on the pillar
Going there and remaining as ari and chitri
Along with gurunamacivayam singaaram
With the ancient reenkaaram along with the five
She said let us engage in physical union, klee, om.

Commentary:
Devi cut away all the maya, the delusion.  She absorbed the fruits of both good and bad actions.  Both the good and bad actions are bad for spiritual progress.  They are gold and iron shackles.  Even the idiots who do not know her greatness will appreciate the speed with which she performs the above actions.  Agatthiyar says that Devi tumbled thrice over the pillar.  The sushumna nadi is said to be composed of three more concentric tubes one within the other.  These tubes are vajrini- for rajas, chitrini for sattva and brahma for consciousness. Agatthiyar refers to this in line 5.  This process brings up various sounds.  The mantra mentioned here are the namacivaya, sing, reem, kleem and om.  The “aivar” are the five deities, pancha kartha who represent the chakras.  Thus the mantra is om aim kleem reem sing namacivaya.  The term “pariyaasam pullavadaa” is not clear. It may mean pariyangaasanam for physical union.


மாயை அனைத்தையும் தேவி துண்டு துண்டாக வெட்டி நல்வினை தீவினை என்ற இரண்டையும் தான் ஏற்றுக்கொண்டாள்.  நல்வினை என்பது பொன்விலங்கு தீவினை என்பது இரும்பு விலங்கு.  அவை இரண்டும் ஆன்மீக முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பவை. அவளது இந்த செய்கையின் வேகத்தை அற்பர்களும் மெச்சுவார்கள் என்கிறார் அகத்தியர்.  இதற்குப் பிறகு தேவி மூன்று முறை கரணமிட்டாள் என்கிறார் அவர்.  இது சுழுமுனை நாடியில் உள்ள மூன்று உள் நாடிகளைக் குறிக்கலாம். அவை ரஜோ குணத்தைக் குறிக்கும் வஜ்ரிணி, சத்துவ குணத்தைக் குறிக்கும் சித்ரிணி மற்றும் விழிப்புணர்வைக் குறிக்கும் பிரம்ம நாடிகளாகும். இந்தச் செயல் பலவித ஒலிகளை எழுப்பும்.  இப்பாடலில் குறிப்பிடும் மந்திரம் நமசிவாய சிங் ரீம் க்லீம் ஓம் என்பவையாகும்.  ஐவர் என்று குறிப்பிடுவது ஐம் என்று இருக்குமோ என்று தோன்றுகிறது.  “பரியாசம் புல்லவடா” என்பது புரியவில்லை. 

Wednesday, 13 August 2014

329. Appreciated by Devas, she climbs with the plaintain bark shaking, with a camphor sword

Verse 329
மீதேறி வானவரும் தேவர் காண
மெய்ஞ்ஞானச் சின்மயமும் மகிழ்ந்து மெச்சு
மீதேறி நின்றிலங்கும் வடம் தள்ளாட
வாள் உருவி வாழையது தண்டில் பாய்ந்தாள்
சூதேறி ஆடுகின்ற சூத்திரத்தை
சோதிக்க ஆராலும் சொல்லொண்ணாது
காதேறி நின்றிலங்கும் தச நாதத்துள்
கற்பூர வாள் வாங்கி வாழைத்தண்டே

Translation:
Climbing up with the celestials and Devas witnessing it
With the true wisodom the embodiment of consciousness praising it
With the rope on which ascended shaking
Drawing the sword she charged at the bark of the plantaintree
The principle that ascends the secret
No one can test it or describe it
Within the ten types of sound that climb to the ears
Receiving the sword of camphor, the plantain tree bark.

Commentary:
This verse describes the ascent of the force of Kundalini.  Agatthiyar says that he ascent was praised by celestials and Devas.  These are souls at higher states of consciousness.  Souls are classified as vijnaana kalaa, pralayakalaa and sakala depending on how many of the triple faults, egoity (aanava), action (karma) and delusion (maya) are active.  The Devas are souls that belong to the category of pralaya kalaa, those who have the egoity and action functioning.  Through yoga they reach the supreme state of Sivam.  As these souls are in the process of evolution they understand the mighty power of Kundalini and hence they praise her.  The ascent is so powerful that the channel or nadi that it flows through shakes by the force.  Agatthiyar calls the nadi as the bark of the plaintain tree.

Unlike other trees the plaintain tree bark does not branch out.  It is smooth, straight and ends at the top where the leaves, flower and fruit emerges.  Kundalini ascends similarly.  It reaches the sahasrara, the top, where it becomes fruitful.  Agatthiyar says that this process is beyond description.  When the kundalini sakthi ascends through the cakras it transmutes specific principles there, the result of which emerges as sounds.  This is the dasa nadha or the ten types of sound that the yogin experiences.  No one can clearly define these sounds.  To give us a clue about them the yogins have named them as the sound of the bell, the drum, the singanadh or that of the buzzing bee.  These are only place values for the sounds, not the actual sounds.  Agatthiyar says that Sakthi has the sword of camphor.  Camphor is known for its smoke and brilliant light.  In the end it disappers without a trace.  The kundalini appears as a smoke in the anahata cakra, as the brilliant light at the ajna and disappears when the consciousness merges with the supreme consciousness , beyond the sahasrara.


இப்பாடல் குண்டலினி சக்தியின் எழுச்சியை விளக்குகிறது.  அகத்தியர் குண்டலினியின் எழுச்சியை தேவர்களும் முனிவர்களும் பாராட்டுகிறார்கள் என்கிறார்.  மும்மலங்களான ஆணவம், கர்மம், மாயை என்பவற்றில் எவை செயல்படுகின்றன என்பதைப் பொருத்து ஆத்மாக்கள் விஞ்ஞானகலா, பிரளயகலா, சகலா என்று மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றனர்.  இவற்றில் பிரளயகலா என்னும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தேவர்கள்.  அவர்கள் யோகத்தின் மூலம் மும்மலங்களையும் துடைத்து சிவ சித்தன் நிலையை அடைய முயல்பவர்கள்.  இந்த பயிற்சியில் ஈடுபட்டிருப்பதால் அவர்களுக்குக் குண்டலினியின் சக்தி புரிகிறது அதன் மகத்துவம் தெரிகிறது.  அதனால் அவர்கள் அவளை மிக மெச்சுகின்றனர்.  குண்டலினியின் எழுச்சி மிக சக்தி வாய்ந்ததாக வார்த்தைகளால் விளக்க முடியாததாக உள்ளது என்கிறார் அகத்தியர். அதன் சக்தியால் அது பாயும் நாடி, வாழைத்தண்டு, தள்ளாடுகிறது. 

மற்ற மரங்களைப் போலல்லாமல் வாழை மரத்தின் தண்டு கிளை விடுவதில்லை.  ஒரே சீராக வளர்ந்து உச்சியை அடைந்து அங்கே இலைகள், பூக்கள், காய்கள் என்று காணப்படுகிறது.  குண்டலினி சக்தியும் அவ்வாறே ஒரே சீராக உச்சியை அடைந்து அங்கே பழுக்கிறது.  குண்டலினி சக்தி சக்கரங்களின் ஊடே பாயும்போது அது பல தத்துவங்களைத் தன்னுள் லயிக்கச் செய்கிறது.  இந்த லயம் பல சத்தங்களாக வெளிப்படுகின்றது.  இந்த சத்தங்களை வார்த்தைகளால் விளக்க இயலாது.  அதைப் பற்றி ஒரு எண்ணம் தோன்றுவதற்காக யோகிகள் அதை மணியின் ஓசை, சிங்க நாதம், வண்டின் ரீங்காரம் என்று அழைக்கின்றனர்.  இவை உண்மையில் அவ்வாறு இல்லை.  வண்டின் ரீங்காரம் எவ்வாறு இருக்கும் என்று நமக்குத் தெரிவதால் இந்த ஓசை எவ்வாறு இருக்கும் என்று ஓரளவு கற்பனை செய்து பார்க்க முடிகிறது. 


சக்தியின் வாள் கற்பூர வாள்.  கற்பூரம் புகையுடன் எரியும் பிரகாச வெளிச்சம் முடிவில் எவ்வித தடயத்தையும் விடாமல் மறைந்துபோகிறது.  குண்டலினியும் அதைப் போல அநாஹதத்தில் புகையாகவும் ஆக்னையில் ஆத்ம தீபமாகவும் தோன்றி சஹாஸ்ராரத்தில் பரவுணர்வுடன் கலக்கும்போது எவ்வித தடயமும் இல்லாமல் மறைந்து போய்விடுகிறது.

Tuesday, 12 August 2014

328. The Devas who worshipped Devi

தானேதான் பிரம்மனுமோ வணங்கி நின்றான்
தனைவிட்டால் மாயனுமோ வணங்கி நின்றார்
தேனேதான் ருத்திரனும் வணங்கி நின்றார்
சிவ சிவா மயேசனுமே வணங்கி நின்றார்
ஊனேதான் சதாசிவனும் வணங்கி நின்றார்
ஓ ஓ ஓ  பஞ்சவரால் சமைந்த கம்பம்
காணேதான் சுழிமேவி மணியின் ஆட்டு
காரணியாள் ஆகாசக் கம்பமீதே

Translation:
The Brahma stood worshipping
The Maya also remained saluting
The sweet Rudra also stood worshiping
Siva Sivaa Mahesa also stood worshipping
 The Sadasiva, the body, also remained worshipping
O O O the pillar created by the five
See the dance of the jewel that pervades the whorl
On the pillar of akasa of the lady of the cause.

Commentary:
Brahma, Vishnu, Rudra, Maheswara and Sadasiva are the five manifestations of the Divine with specific principles for each of them in ascendence.  Agatthiyar says that the pillar of Devi was composed of the five people.  It may be the above mentioned five as they represent different principles and states of consciousness.  Her dance is the movement of the jewel, or the Self-consciousness that is experienced at the ajna.  Devi is the cause of the manifested world and hence she is the “kaarani” and her pillar is that of space, the cittambalam.


பிரம்மா விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன் சதாசிவன் என்ற ஐவரும் வெளிப்பாட்டின் முதல் தத்துவங்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தத்துவத்தைக் குறிக்கின்றனர்.  ஐவரால் சமைக்கப்பட்ட அம்மனின் கம்பம் என்பது இந்த ஐவரால் ஏற்பட்டது என்று குறிக்கலாம்.   அந்த கம்பத்தின்மேல் அம்மனின் நடனம் ஆத்ம தத்துவமான மணியின் நடனம், சுழி அல்லது ஆக்ஞையில் நடைபெறுவது, அந்தக் கம்பமும் ஆகாச தத்துவத்தால் ஆனது.

120. A true disciple

Verse 120
இன்னொருவன் செய்கை என்ன குருவே என்று
எந்நேரம் அது கவனமாகத் தேடி
அன்னொருவன் குருவென்று வந்தானானால்
அடியற்ற பனை போல தெண்டம் செய்து
தன் இருகைவாய் பொத்தி அன்னம் ஈந்து
சந்தோஷம் குருகேட்டதெல்லாம் ஈந்து
உன் இருகையுடன் பொருளும் ஆவி மூன்றும்
உகந்துனக்கு தாரை என்னும் ஞானம் தானே

Translation:
Action of another.  If he comes seeking
Guru, after searching for him carefully for a long time,
If he comes saying, “Guruve!”
Falling at his feet like a palm tree without a base,
Covering his mouth with both palms, offering food
Happily offering everything that the Guru asks for
The Guru will grant wisdom to such a person
Who offers, with both hands, his material possessions and soul.

Commentary:
Agatthiyar says that sometimes a disciple will seek a Guru for a very long time and come to the right one seeking wisdom.  He will fall at the feet of the Guru, as an act of supplication, like a palm tree that has no base.  He will happily offer the Guru, food and anything he asks for. For such a disciple who offers his material possessions, his body and soul, the Guru will grant wisdom.


சில சமயம் ஒரு சீடன் வெகுநாட்களுக்கு ஒரு குருவைத் தேடிவிட்டு தகுந்த குருவிடம் வருவான்.  அவரிடம், “குருவே!” என்று சரணடைந்து அவர் கால்களில் விழுந்து வணங்கி, கை கட்டி வாய் பொத்தி அவருக்கு உணவும் அவர் கேட்பவற்றையும் சமர்ப்பிப்பார்.  இவ்வாறு தனது உடல் பொருள் ஆவி என்று அனைத்தையும் சமர்ப்பிப்பவருக்கு குருவும் ஞானத்தை வழங்குகிறார்.

Monday, 11 August 2014

327. Devi dances to relieve troubles

Verse 327
காரப்பாபுலத்தியனே கம்பக் கூற்று
காசினியோர் மெச்சும் இந்த கருணைக் கூத்து
சீரப்பா மூவர்களும் ஐவர் காண
தீரப்பா அண்டபகி ரண்டாம் எல்லாம்
திடுக்கிடவே கம்ப கரு நெல்லிக் கீழே
பேரப்பா சதுர்முகத்தோன் கொலுவின் மீதே
பிறங்கு தொல்லை தீர்க்க வந்தால் பேதை தானே.

Translation:
Contemplate Pulatthiya!  The dance of the movement/pillar
This merciful dance appreciated by people of this world
Grace, Son, seen by three and five
Siva Sivaa!  With the Devas and Munis witnessing it
With the universes and worlds
Shocked by it, under the black gooseberry tree, pillar/movement
See it in the assembly of the fourfaced one
The innocent one, came to relieve all of their troubles.

Commentary:
Agatthiyar says that the dance of Devi is the dance of mercy.  He explains why at the end of the verse.  He says that she dances so with the three and five as witnesses.  The three may be the holy triad of Brahma, Vishnu and Rudra.  The five may be the five divine manifestations, five states of consciousness.  The “karu nelli” is again the sushumna nadi which is called as “nelli maram” by the Siddhas.  Agatthiyar says that this dance occurs in the court of the four faced one.  It is either Brahma who manages creation or the four faces of Siva.  Then Agatthiyar says why this dance occurs.  It is to relieve everyone of their miseries.  The greatest misery of all is life in this world, where souls are mired in delusion and hence tensions.  Devi dances to relieve everyone of this misery so that they would understand their true nature and life a realized life.


தேவியின் நடனம் கருணைக் கூத்து என்கிறார் அகத்தியர்.  தான் ஏன் அவ்வாறு சொல்கிறோம் என்று அகத்தியர் இப்பாடலின் கடைசியில் கூறுகிறார்.  தேவியின் நடனத்தை மூவரும் ஐவரும் காண்கின்றனர், தேவரோடு முனிவரும் காண்கின்றனர் என்கிறார் அகத்தியர்.  மூவர் என்பது பிரம்மா, விஷ்ணு, ருத்ரனைக் குறிக்கும்.  ஐவர் என்பவர் இறைவனின் ஐந்து வெளிப்பாடுகளாக இருக்கலாம்.  கருநெல்லி கீழே என்பது சுழுமுனை நாடியின் அடியான மூலாதாரமாகும். இந்த நடனம் நான்முகனின் சந்நிதியில் நடைபெறுகிறது.  நான்முகன் என்பது பிரம்மாவையோ சிவனின் நான்கு முகங்களாக இருக்கலாம்.  இந்த நடனம் உலகின் தொல்லைகளைத் தீர்ப்பதற்கு என்கிறார் அகத்தியர்.