Friday, 25 April 2014

186. Life of a good person

Verse 186
வீணப்பா இவன் வீணன் உதவா வீணன்
வெள்ளாட்டி பயல்களிவர் மெத்த உண்டு
ஆணப்பா இவர்களை நீ கண்டாயானால்
அகற்றிவிடு மலம் போல அகலத்தள்ளு
காணப்பா நல்ல பிள்ளை செய்கை கேளு
கால் அடக்கி சுழிமேவி கருத்தொன்றாகி
சாணப்பா வந்தக்கால் சமையம் சொல்லிச்
சமையம் விண்டு வந்தாக்கால் கைக்கொள்வாரே

Translation:
Waste, he is a waste, a wastrel one who is of no help,
There are many servants (low-life) like him,
You the valorous one, if you see such people
Discard them as if they are offal, push them far away
See son, listen to the actions of a good person
Controlling the breath, spreading over the sushumna, making their focus singlepointed
Revealing the path when the worthy comes along
Explain the religion when they come and remain so.

Commentary:
In this verse Agatthiyar describes the life of a worthy person.  After advising Pulatthiyar to discard unworthy folks he tells him that a worthy person will remain controlling his breath and directing his consciousness through the sushumna and having single pointed attention.  He will reveal the path and the philosophy if another worthy person comes along.

ஒரு நல்ல மனிதன் எவ்வாறு வாழ்வான் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  முதலில் வீணர்களை மலம் போலத் தள்ளிவிட வேண்டும் என்று அறிவுறுத்திய அகத்தியர் ஒரு நல்ல மனிதன் தனது மூச்சைக் கட்டுப்படுத்தி, சுழுமுனையை மேவி தனது கருத்தைக் குவித்தவனாக இருப்பான்.  தகுந்தவர்கள் வந்தால் அவர்களுக்கு தனது பாதையை, சமயத்தைக் கற்றுக்கொடுப்பான் என்கிறார் அகத்தியர். 

Thursday, 24 April 2014

170-185 A wasted yogi

Verse 170
குறுவினார் கோழியைப் போல் குப்பை சீச்சீ
குறவளையல் கட்டி வைக்கும் கதையைப் போல
தளுவினார் குறவளையல் ஈயைப் போல
தான் அவன்தான் இருந்த இடம் அறியாமற்றான்
புளுவினார் பேடு விட்டுப் பிரிந்து தானால்
பின்னையொரு புறாவுடனே பொருந்துமோ சொல்
களுவினால் நல்லறிவு கற்றோன் ஆனால்
....................................................
Three palm leaves missing in the original

நக்கிவயம் சொல்வான் இப்படியே நேமம் காமம்
மாளுமட்டும் புலம்பியே விழுவான் வீணே (185)

Translation:
He clucked the throat like a hen, garbage, fie!  Fie!
It is like the story of tying up the vocal chords
They held the vocal chords like a fly
Without the knowing where he is, the place.
He lied.  When a dove separates from its pair
Will it go with another pigeon
Even though he learnt good things through studies
……………………..
He will utter namacivaya, lament about love and desire
Until he dies, and fall down wastefully.  (verse 185)

Commentary:
It is very unfortunate that the verses from 170 (a few lines ) to verse 185 are missing in the palm leaf manuscript. 
Let us see what the early part of verse 170 says.  This is a continuation of the yogi who tries to plug the uvula with his big finger.  Agatthiyar says that he will cluck like a hen trying to tie up his vocal chords and make a sound like a fly.   He will lose his sense of location, he will not know where is consciousness is located and he will lie saying that he has attained wisdom. The next line is interesting. Pigeons are famous for remaining as a pair throughout their life.  They will not switch their partners at will.  Similarly a yogin will not go after minor pleasure when he is trying to unite with the Divine.  Agatthiyar remarks about this.
The concluding part of verse 185 talks about a yogi who is also wasting his life not attaining the jnana.  Agatthiyar says that he will die only talking about namacivaya, love and desire.  He would not have attained the true wisdom. 
These verses show the importance of preserving ancient manuscripts.  The wisdom offered by these fifteen verses are lost forever due to our negligence.

பாடல் 170 கடைசி வரிகள் முதல் பாடல் 185 வரை உள்ள ஓலைச்சுவடிகள் நூலகத்தில் இல்லை.  இது நமது துரத்ருஷ்டம் தான்.  இதில் அகத்தியர் உரைத்திருந்த மெய்ஞ்ஞானம் உலகத்தோருக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் அழிந்துவிட்டது.  ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கவேண்டியது எவ்வளவு அவசியம் என்று இது நமது முகத்தில் அறைந்து காட்டுகிறது.
பாடல் 170 ல் அகத்தியர் உண்ணாக்கை பெருவிரலால் மூடி அமிர்தத்தை கீழே இறக்க முனையும் யோகியைப் பற்றி மேலும் தொடருகிறார்.  இந்த யோகி தனது குரல்வளையைக் கட்ட முனைவதால் ஒரு கோழியைப்போல கொக்கரிக்கிறான், ஒரு ஈயைப் போல சத்தமிடுகிறான்.  இவனைக் குப்பை என்று தள்ளவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இதனை அடுத்து அவர் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிக் கூறுகிறார்.
புறாக்கள் தமது ஆயுள் முழுவதும் ஒரே ஜோடியுடன் இருக்கும்.  ஒரு பேடு போய்விட்டது என்றால் மற்றொரு புறாவைத் தேடாது.  அதேபோல ஒரு யோகி இறைவனுடன் சேரவேண்டும் என்ற ஒரே எண்ணத்தைக் கொண்டவனாக, வேறு இன்பங்களைத் தேடாதவனாக இருப்பான்.

பாடல்   185 கடைசியில் அகத்தியர் பயனற்ற முறைகளில் ஈடுபட்டு தனது உயிரை விடும் ஒரு யோகியைப் பற்றிக் கூறுகிறார்.  இந்த யோகி நமசிவாயம், நேயம், காமம் என்று பெரிதாக தனது வாழ்க்கையின் இறுதிவரை புலம்பி மாள்வான் என்கிறார் அகத்தியர்.

Wednesday, 23 April 2014

169. Auterities- not the shortcut

Verse 169
தானப்பா ஒருகாலில் தவம் செய்வோரும்
தலமதிகம் நாடதிகம் தேடுவோரும்
தேனப்பா சாராயம் குடித்திட்டோரும்
தெருவிலே பல தேசம் திரிந்திட்டோரும்
காணப்பா சிவதீர்த்த பூசையோரும்
கறுத்த மண்ஆற்றுமண் லிங்கத்தாலும்
கோனப்பா சிவபூசை அனந்தம் கோடி
குறுக்குவழி தெரியாமல் குறுவினாரோ

Translation:

Those who perform austerities standing on one leg
Those who seek several sacred sites and places
Those who drink toddy as honey
Those who roamed around several lands
See son, those who perform ablutions to Siva
With linga made of black sand, river sand
Are several millions.  Without knowing the supreme siva puja
They suffered without knowing the shortcut.

Commentary:
Agatthiyar talks about some other people who spend a lot of time in wasteful austerities but do not attain wisdom.  Some people stand of one leg for a very long time and perform tapas.  Some go to all sacred sites and temples.  Some drink toddy and say that in their ineberated state they are raising their consciousness beyond their body level.  Some give up their family life and roam around the world as mendicants as if that would grant them the wisdom.  Some perform elaborate puja rituals such as performing abishekam to the linga.  Agatthiyar says that these people are only suffering without knowing the shortcut, the right path for wisdom.

We should note something here.  Agatthiyar is not dismissing austerities per se.  He is only telling us that they do not grant us wisdom, quickly and easily.

இப்பாடலில் அகத்தியர் பயனற்ற பல்வேறு தவங்களை மேற்கொள்பவர்களைப் பற்றிப் பேசுகிறார்.  சிலர் ஒரு காலில் நின்றுகொண்டு தவம் செய்வர்.  (சிலர் அதையும் தீயின் நடுவில் செய்து தவம் புரிவர்).  சிலர் புனிதத் தளங்களையும் கோயில்களையும் தீர்த்தங்களையும் தேடித்தேடி ஓடுவர்.  இதைத்தான் சிவவாக்கியர் கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா கோயிலும் குளங்களும் உம்முளே என்று பாடுகிறார்.  ஒரு சிலர் சாராயத்தைக் குடித்துவிட்டு தான் அவ்வாறு தனது விழிப்புணர்வை உடல் தளத்திலிருந்து மேலே ஏற்றுவதாகக் கூறுவார்.  சிலர் தமது குடும்ப வாழ்க்கையை விட்டு ஓடி பண்டாரமாக சுற்றித் திரிவர்.  சிலர் மிக விரிவாக சிவபூஜை, லிங்கத்திற்கு அபிஷேகம் என்று தமது நேரத்தைச் செலவிடுவர். இதை ஊறுபட்ட கல்லின் மீது வண்டின் எச்சிலை ஊற்றுவது என்று சிவவாக்கியர் கூறுகிறார்.  இவ்வாறு ஞானத்தைத் தேதுபவர் கோடி கோடி என்று அகட்ட்தியர் கூறுகிறார்.  இந்த மக்கள் ஞானத்தைப் பெறுவதற்கான குறுக்கு வழியை அறியாமல் தத்தளிக்கின்றனர் என்கிறார் அகத்தியர்.

இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  தவங்கள் தவறானவை என்று அகத்தியர் கூறவில்லை.  அவை எளிதாக, விரைவாக ஞானம் பெற உதவாது என்றுதான் கூறுகிறார்.  

Tuesday, 22 April 2014

168. Various yogic practices

Verse 168

இருந்திட்டார் நாசிவிட்டு நாசி மாறி
எண்ணி எண்ணி நாசிதனை விழுங்குவாரும்
பிரிந்திட்டு கண் மூக்கைப் போற்றுவாரும்
பெருவிரலால் அண்ணாக்கில் ஏற்று வாரும்
பிரிந்திட்ட தண்ணியினுள் மூழ்குவாரும்
பத்திரமாய்க் குழிவெட்டிப் பதுங்குவாரும்
சரிந்திட்டக் குலை வாழை கவிழ்ந்தாப் போல
தத்தளித்து உலகோர்கள் தவித்தார் தானே

Translation:
They remained alternating between the nostrils,
Counting the breaths and holding it
Splitting away, those who hold the eyes and nose
Those who raise it to the uvula with the big toe
Those who submerge themselves in water
Those safely dig a hole and hide there
Like the fully mature branch of banana tree that fell down
Struggling, people of the world suffered so.

Commentary:
Agatthiyar lists other practices in this verse.  People practice breath control like nadi shuddhi or regulating the breath through alternate nostrils. They practice inhalation, retention and exhalation for specific counts (purakam, kumbakam and rechakam).  Some practice mudras where they close their eyes and nose with fingers and retain the breath within (yoni mudra etc).  Some try perform austerities under water and under the ground.  Agatthiyar says that people suffer in these ways and fall down like a banana tree that collapses after maturing completely.


இப்பாடலில் அகத்தியர் மக்கள் மேற்கொள்ளும் பல்வேறு வகையான தவங்களைப் பற்றிப் பேசுகிறார்.  சிலர் நாடி சுத்தி போன்ற பயிற்சிகளின் மூலம் மூச்சை நாசி மாற்றி நாசியில் செலுத்துகின்றனர்.  சிலர் பூரகம் கும்பகம் ரேசகம் எனப்படும் உள்மூச்சு மூச்சற்ற நிலை, வெளி மூச்சு என்று குறிப்பிட்ட எண்ணிக்கையில் மூச்சை விடுகின்றனர்.  சிலர் யோனி முத்திரை போன்ற முத்திரைகளை மேற்கொண்டு மூக்கையும் கண்ணையும் விரல்களால் பொத்திக் கொள்கின்றனர்.  சிலர் நீரின் அடியிலும் நிலத்தின் அடியிலும் புகுந்து தவம் புரிய முனைகின்றனர்.  இவ்வாறு மக்கள் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டு குலை தள்ளிய வாழை சரிவதைப் போல தவித்துச் சரிகின்றனர் என்கிறார் அகத்தியர்.

Monday, 21 April 2014

167. Agatthiyar warns about the dangers of kundalini yogam

Verse 167
வாசியடக்கும் வகை வாசியினால் கெட்டர்களைச் சொல்லியது
காணப்பா மூச்சடக்கிச் செத்தோர் கோடி
கண் தெறித்துச் சூலையிலே மாண்டோர் கோடி
தோணப்பா மெய் மறந்துப் போனார் கோடி
சுற்றெழும்பி கெடத்தோடே விழுந்தோர் கோடி
ஊணப்பா உண்ணாக்கால் அடைப்போர் கோடி
உள்ளடக்கிக் கோழியைப்போல மடிந்தோர் கோடி
சாணப்பா முழம் அப்பா எழுந்தோர் கோடி
தப்பிவிட்டு அற்பர்களாய் இருந்திட்டாரே
Translation:
See son, millions dies trying to control their breath
Millions have died with their eyes popping out and getting ulcers in the stomach
Think about it son, millions have forgotten about their body
Millions have died jumping up and falling down with the pot (body)
See son, millions have blocked their uvula
Blocking it within millions have died like a hen,
Millions have ascended a finger span, a hand span
Letting it escape they remained as mean-minded people.

Commentary:
After warning us that one’s skull will explore if the vãsi yogam is practiced without proper guidance and preparation, Agatthiyar lists other dangers that may happen for those who attempt kundalini yoga.  He says that millions have died (1) controlling their breath, (2) had their eyes pop out from the pressure, (3) had suffered ulcers of the stomach (it is called soolai as it feels like being poked with a spear) , (4) had lost the sensation of their body- lost their mind so that they do not recognize that they have a body, (5) had jumped up and down with the increased energy and fallen down, (6) had died like a croaking hen trying to block their uvula which is said to make the divine nectar descend, (7) had managed to raise their kundalini Shakti marginally and remained as mean-minded people unable to make this happen again or to take it further.


முந்தைய பாடலில் சரியான அறிவும் வழிகாட்டலும் இல்லாமல் குண்டலினி யோகத்தை மேற்கொள்பவர்கள் தமது கபாலம் வெடித்து சாவர் என்று கூறிய அகத்தியர் இப்பாடலில் மேலும் பல ஆபத்துக்களைப் பட்டியலிடுகிறார்.  கோடிக்கோடி மக்கள் இப்பயிற்சிகளினால் (1) தமது மூச்சை அடக்கி மாண்டுள்ளனர், (2) கண்கள் தெறித்து இறந்துள்ளனர், (3) சூலை நோய் எனப்படும் கடுமையான வயிற்றுப் புண்களால் மரணத்தைத் தழுவியுள்ளனர் (வயிற்றில் சூலத்தால் குத்துவதைப் போல வலிப்பதால் இந்த நோய் சூலை என்ற பெயரைப் பெற்றது), (4) தமது உடலுணர்வை இழந்துள்ளனர், தாம் உடல் பெற்றுள்ளோம் என்பதையே அறியாமல் இருக்கின்றனர், (5) (அதிகரித்த சக்தியினால் ) மேலும் கீழும் குதித்து உடலுடன் கீழே விழுகின்றனர், (6) உண்ணாக்கை மறித்து (அமிர்தம் ஏற்பட) கோழியைப் போலக் கொக்கரித்து இறந்துள்ளனர் (7) தமது குண்டலினி சக்தியை ஒரு சாண் அல்லது முழம் மட்டுமே எழுப்ப சக்தி பெற்று அதையும் இழந்துவிட்டு அற்பர்களாக இருக்கின்றனர் என்று அகத்தியர் கூறுகிறார். 

166. Kumbamuni talks about dangers of kumbakam

Verse 166
பொறுக்காமல் போவரால் புத்தி போச்சு
புடம் இட்ட சொர்ணம்போல் மனதுள் சேரு
குறுக்காமல் மெய்ஞ்ஞானம் விளையப் பாரு
கோடிரவி கண் கூசும் கூடி வாழு
இறுக்காதே வாசிதனை விழுங்கி உள்ளே
இசை கேடு வந்ததென்றால் கபாலம் போகும்
மறிக்காதே வழியறிந்து மறித்தால் நிற்கும்
வந்துமே வாராது போலாம் காணே

Translation:
Those who couldnot wait lost their intellect
Collect it within the heart like heat processed gold
See the meijnanam grow without any shrinkage
Millions of suns!  Eyes will glare, live associated (with it)
Do not constrict the breath (vaasi) swallowing it within (holding it within)
If it does not suit, the skull will explode
Do not inhibit it, if inhibited with knowledge it will stop
It may occur and immediately be lost.

Commentary:
In this verse Agatthiyar describes the fruits of the knowledge from meijnanam.  He says that thos who cannot wait for it will lose their mind.  (This does not mean that they will become crazy!)  The intellect or the questioning mind tries to question everything.  It tries to find an explanation for everything, rationalize everything.  It does not realize its limitations.  Anything that does not meet with its rules are rejected as illogical or irrational.  To experience true spirituality one should go beyond the intellect.  This is what Agatthiyar means by ‘those who could not wait lost their intellect’.  Agatthiyar advises Pulatthiyar that he should contemplate upon the meijnanam in his heart.  This heart is not the material heart but the spiritual one, the site of our soul, the mind.  This heart should be free of anything evil, it should be pure like purified gold.  Agatthiyar does not say pure gold he says purified gold.  The heart is not pure to begin with.  It has to be purified through regular, carefully watched sadhana.  Then one will realize that the meijnanam, true wisdom, is growing without any stunting.  Stunting means, misconceptions, erroneous twists, misinterpretations etc all born from ahamkara.  The result is the brilliance of millions of suns, the supreme consciousness.  Agatthiyar advises Pulatthiyar to live in this state, he says ‘koodi vaazh’ means join it and live. 

Next, Agatthiyar is advising Pulatthiyar about the dangers in kundalini yoga.  He says that if one tries to hold the breath within without proper training one’s skull will explode.  One should not practice kumbaka or retention of breath without proper knowledge.  Even if it is practiced with knowledge it may occur only for a moment. 


இப்பாடலில் அகத்தியர் மெய்ஞ்ஞானத்தால் ஏற்படும் பலன்களைக் கூறுகிறார்.  இவ்வாறு இந்த அறிவைப் பெறவேண்டும் என்று பொறுக்கமுடியாமல் இருப்பவர், தீவிர ஆசை கொண்டவர்கள் தமது புத்தியை இழப்பர்.  (அவர்களுக்குப்பைத்தியம் பிடித்துவிடும் என்று எண்ணவேண்டாம்!).  புத்தி என்பது விட்டாமல் கேள்விகேட்கும் ஒன்று, எல்லாவற்றிற்கும் காரணத்தைக் கண்டுபிடிக்க முனையும் ஒரு ஆயுதம்.  ஆனால் அது எல்லைக்குட்பட்டது.  அதற்குப் புரியாக விஷயங்கள் பல உள்ளன.  ஆனால் அது தனக்குத் தெரியாதவற்றை இல்லை என்று சாதிக்கிறது, அவற்றைத் தள்ள முனைகிறது.  ஆனால் ஆன்மிகம் என்பது புத்திக்கு அப்பாற்பட்டது, ஒரு புரிதல், ஒரு உணர்வு.  அதனால் மெய்ஞ்ஞானம் பெற்றவர் புத்தியை இழக்கின்றனர், அளவுகடந்த விழிப்புணர்வைப் பெறுகின்றனர்.  புத்தி என்பது பிரகிருதியால் ஆனது, அழிவுக்குட்பட்டது.  விழிப்புணர்வு, பருப்பொருள் சார்ந்த உலகைக் கடந்தது. 

இந்த விழிப்புணர்வைப் பெற்றவர்கள் தமது மனம் தங்கம் போல புடமிட்டிருப்பதனால் அங்கு மெய்ஞ்ஞானம் எவ்வித குறுக்கமும் இல்லாமல் வளருவதைக் காண்பார்கள்.  குறுக்கம் என்பது குறைபாடு, தவறான விளக்கங்கள், கருத்துக்கள், புரிதல் இல்லாமை ஆகியவை. அதன் ஒளி கோடி சூர்யப் பிரகாசம் எனபதைப் போல கண்களைக் கூசச் செய்வது.   இத்தகைய விழிப்புணர்வுடன் கூட வாழுமாறு அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.

அடுத்து அகத்தியர் புலத்தியருக்கு குண்டலினி யோகதின்போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் கூறுகிறார்.  சரியான பயிற்சி இல்லாமல் ஒருவர் வாசியோகம் செய்ய முனைந்தால், மூச்சைக் கும்பகத்தில் அடக்கும்போது கபாலம் சிதறிவிடும் என்று அகத்தியர் கூறுகிறார்.  சரியான வழிகாட்டலோடு ஒருவர் கும்பகத்தை முனைந்தால் கூட அது நொடிப்பொழுது ஏற்பட்டு அதன்பின் மறைந்துவிடும் என்கிறார் அவர்.


Sunday, 20 April 2014

165. Like a stork waiting at the threshold...

Verse 165
நூலில் பொருள் அறியவும்
அறியாமல் சஞ்சரித்து உலகத்துள்ளே
அனைவோரும் தூஷணிப்பார் அறிந்து கொள்ளு
குறியாமல் போவாயேல் குருடாய்ப் போவாய்
குருநிஷ்டை தில்லாது குருட்டு வேடம்
பிறியாமல் உலகத்தே பறை செய்யாமல்
பொய் ஒன்றும் சொல்லாமல் அருளைத் தேடு
பறிவாசல் காத்து நின்ற கொக்கு போலப்
பாடலிலே பொருள் கண்டால் பொறுக்கிக் கொள்ளே

Translation:
To get knowledge from the book
Ignorantly roaming around in the world
Everyone will heap insults, know this.
If you go without noting you will become blind
The garb of a blind without contemplation upon the guru
Without leaving it, without announcing/ telling
Without lying search for the grace
Like the stork that waits at the threshold
Pick up the meaning if you see knowledge in the song.

Commentary:
This is a great verse which tells us how to gain knowledge from meijnanam.  Previously Agatthiyar told us to not merely read this book but to process it within.  Now he tells us how to gain knowledge from it.  He tells that one should not live in the world, merely roaming around it, without knowing about this book.  Such a life will only earn dishonor and insults.  It is like the life of a blind person as he does not see that which should be seen.  Contemplating upon the guru will remove this blindness as the Guru will show the wisdom.  Agatthiyar advises that one should remain with the quest for knowledge, never go away from the book, never talk about it to another or announce his meager knowledge he gained from the book to another.  One should never tell lies but to search for grace and wisdom in the book carefully like a stork waiting for the right fish.  When one realizes the wisdom found in the book one should grab it, pick it, collect it immediately.


இப்பாடல் மெய்ஞ்ஞானம் என்னும் இந்நூலிலிருந்து எவ்வாறு ஞானத்தைப் பெறுவது என்று கூறுகிறது.  அறிவற்றவராக ஒருவர் இவ்வுலகில் சுற்றிக்கொண்டிருந்தால் உலகத்தோர் அவரைப் பழிப்பர்.  இந்த நூலில் குறிப்பிட்டுள்ளவற்றை அறியாவிட்டால் ஒருவர் குருடுதான்.  குரு நிஷ்டை ஒன்று மட்டுமே இந்த குருட்டுத்தனத்தை விலக்கக்கூடியது.  அதனால் ஒருவர் இந்த நூலைவிட்டுப் பிரியாமல், இதில் உள்ளவற்றை அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆசையைவிட்டுப் பிரியாமல், இந்த நூலைப் பற்றியும் தான் எவ்வளவு அறிவு பெற்றுள்ளோம் என்பதைப் பற்றியும் பேருரை நிகழ்த்தாமல் பொய் சொல்லாமல் அருளைத்தேடவேண்டும் என்கிறார் அகத்தியர்.  ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருக்கும் கொக்கைப் போல இந்த நூலில் தனக்கேற்ற ஒரு கருத்து தென்பட்டால் அதை உடனே பொறுக்கிக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.