Tuesday, 17 June 2014

263. How to benefit from Meijnanam

Verse 263
எண்ணி எண்ணி காவியத்தை எடுத்துப் பாரு
எந்நேரம் தர்ம சிந்தை இதிலே நோக்கு
பண்ணி பண்ணி பல குட்டி போட்டால் என்ன
பதியானைக் குட்டி ஒரு குட்டி ஆமோ
சண்ணி உண்ணி இந்த நூலை நன்றாய்ப் பாரு
சக்கரமும் அக்ஷரமும் நன்றாய்த் தோன்றும்
தண்ணி என்றலைந்தால் தாகம் போமோ
சாத்திரத்திலே பிறந்து தள்ளி ஏறே

Translation:
Thinking about it repeatedly take out the kavya and look at it.
Dharmic thoughts at all times, see here,
How does it matter if a pig yields several offspring?
Will it ever become equivalent to an elephant cub?
Contemplating deeply look at this book carefully
The cakra and the akshara will appear clearly.
Will thirst be quenched if roamed around saying thirsty?
Being born in sastra, push away and climb.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar how to benefit from the knowledge that this book offers.  He tells Pulatthiyar that he should think deeply, hold on to dharmic thoughts and read this book to understand the great principles.  To drive home the idea of how important this book is, Agatthiyar says it with an example.  Even if a pig sires several piglets none of them can become equivalent to a single elephant cub.  It is the not the mere number but the quality that matters. Similarly, even if there are several books in this field none can equal the meijnanam. 

Further, Agatthiyar says that when one reads this book carefully the akshara and the cakras will appear clearly.  However, merely wishing for this experience is not enough to attain them.  One has to take the effort and pursue them.  Merely uttering “thirsty” will not quench the thirst. One has to drink water to satify the need. 

The last line in this verse is interesting.  It says “being born in sastra, push away and climb’.  Agatthiyar tells us that this knowledge is found in the sastra or meijnanam is the sastra or the text which offers this knowledge.  One should learn it first.  However, one should not stagnate there but move to the next level, the level of actual experience, and ascend the sushumna nadi, ascention of consciousness. 

இந்த நூலினால் எவ்வாறு பயனடைவது என்று அகத்தியர் புலத்தியருக்கு இப்பாடலில் கூறுகிறார்.  ஆழ்ந்த சிந்தனை நோக்கோடு தர்ம சிந்தனையுடன் புலத்தியர் இந்த நூலைப் படிக்கவேண்டும்.  அப்போதுதான் இதில் கூறப்பட்டவை புரியும் என்றும் அவ்வாறு படித்தால் சக்கரங்களும் அக்ஷரங்களும் புலப்படும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இந்த நூல் எவ்வளவு முக்கியம் என்பதைப் புலப்படுத்த அவர் ஒரு பன்றி பல குட்டிகளை ஈன்றாலும் அவை ஒரு யானைக் குட்டிக்கு ஈடாகாது, அதாவது, பல நூல்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப் பற்றிப் பேசினாலும் அவை மெய்ஞ்ஞானத்துக்கு ஈடாகாது என்று கூறுகிறார்.  ஆனால் இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களைப் புரிந்துகொள்ள ஒருவர் விசுவாசத்துடன் முயற்சி செய்ய வேண்டும்.  தாகம் என்று கூறினால் மட்டும் தாகம் அடங்காது, நீரைத் தேடிக் குடித்தால்தான் தாகம் அடங்கும் என்கிறார் அகத்தியர். 

இப்பாடலின் கடைசி வரி ஒரு முக்கியமான கருத்தைக் கூறுகிறது.  “சாத்திரத்தில் பிறந்து தள்ளி ஏறு” என்று அகத்தியர் கூறுகிறார்.  அதாவது இந்த நூலில் கூறியுள்ள கருத்துக்களின் அடிப்படை சாத்திரம் அல்லது மெய்ஞ்ஞானம் தான் சாத்திரம், அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் படித்து, அத்தோடு நின்றுவிடாமல், புத்தக அறிவைத் தள்ளிவிட்டு நேரிடை அனுபவத்தைப் பெற முனைய வேண்டும்,  சுழுமுனை நாடியில் ஏற வேண்டும்,  விழிப்புணர்வை மேல் நோக்கி ஏற்ற வேண்டும் என்று அவர் கூறுகிறார்.  

262. She bid me to sing them as thousand verses

Verse 262
கூறினாள் சகலோரை பிழைக்கச் சொல்லி
கொட்டினாள் இந்த நூல் ஞானப்பேரு
ஆறினாள் பத்தர் சித்தர் முகத்தைப் பார்த்து
ஆயிரத்துள் பாடவென்று எனக்குச் சொன்னாள்
சாறினாள் சாரோட்டாள் இந்த நூலில்
சந்தயங்களும் தீர்ந்து பயமும் தீர்த்தாள்
ஏறினாள் இது பாதை இல்லாவிட்டால்
இழுபடா சுகம் காண எண்ணிப் பாரே

Translation:
She mentioned so that everyone will be saved
She poured,  this book is named jnanam
She was pacified seeing the faces of devotees and siddhas
She told me to sing it in thousand verses
She associated, the one who never associates, in this book
The doubts were cleared and she removed the fear also.
She climbed,  if this is not the path
Bliss cannot be experienced, think about this.

Commentary:
Sakthi mentioned all these esoteric principles so that all the souls in the world will realize these and get liberated.  Agatthiyar says that hence, this work is called jnanam,  She poured every piece of knowledge for Agatthiyar and bid him to compose this work of thousand verses.  Such a Sakthi, Manonmani is completely independent, is niradhara.  She associated herself with this book of Agatthiyar.  She cleared all the doubts and removed all fears.  She climbed the path, the sushumna nadi.  Agatthiyar says this is the only way to experience the bliss.  He advises Pulatthiyar to think about this.


சக்தி இந்த சூட்சுமமான விஷயங்களை உலகோர் உச்சீவிப்பதற்காக கூறினாள் என்றும் தன்னை அவற்றை ஆயிரம் பாடல்கள் கொண்ட நூலாக அதைப் பாடுமாறு கூறினாள் என்றும் இந்தப் புத்தகத்தின் பெயர் ஞானம் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இந்த மனோன்மணித் தாய் எதையும் சாராதவள், நிராதாரி, அவள் இந்த நூலைச் சார்ந்து தனது ஞானத்தை இதில் கொட்டியுள்ளாள்.  இவற்றைக் கூறிய பிறகு அவள் ஏறினாள் என்கிறார் அகத்தியர்.  மனோன்மணி சுழுமுனை நாடியில் ஏறினாள்.  இதைக் கூறியபிறகு அகத்தியர் இன்பத்தை அனுபவிக்க இது ஒன்றுதான் வழி என்று கூறி புலத்தியரை இவையனைத்தையும் எண்ணிப் பார்க்குமாறு கூறுகிறார்.

261. Manonmani revealed this for the sake of her son

Verse 261
நன்றாய்க் கேள் அகாரமோடு உகாரம் கூட
நலமான மகாரமொடு மூன்றும் ஆச்சு
ஒன்றாய்க்கேள் மூன்றெழுத்தும் வாசி ஆச்சு
ஒருவருக்கும் கிடையாது வாசி மூலம்
கண்டாக்கால் சித்தரொடு முனிவர் தாமும்
கைலாயம் கொள்ளைபோம் என்று சொல்வார்
கொண்டாக்கால் மனோன்மணியின் கொலுவினுள்ளே
கூறினாள் பிள்ளைக்காய் கூறினாளே.
                         
Translation:
Listen well, akaara, along with ukaara
And the beneficial makaara became three
Together, listen, they became vaasi
None has the origin, including vaasi
They will say, that if it is seen, the siddha and munis
That Kailaya will be appropriated
When it is taken up within the court of manonmani.
She mentioned it, for the sake of the son.

Commentary:
After mentioning that the nang, cing and yang became the vaasi, Agatthiyar tells here that the akaara, ukaara and makaara became the three parts of vaasi.  None of these, the letters and what they represent and the vaasi yogam have an origin.  They are the origin of everything.  If one realizes this one will attain kailaya.  Kailaya refers to sahasrara.  Thus, when one realized these esoteric principles one will attain kailaya or reach the sahasrara.  When one performs the vaasi yogam in the arena of manonmani, one will experience the kailaya.  Agatthiyar says that Manomani, the Kundalini sakti, revealed this secret for the sake of her son.  The son may be the Jiva or Agatthiyar.  He has mentioned in a previous verse that it was manonmani who gave him his name calling him son.


முந்தைய பாட்டில் நங், சிங், யங் என்ற மூன்று எழுத்துக்களும் வாசியோகத்துக்கான மந்திரங்கள் என்று கூறிய அகத்தியர் இப்பாடலில் அகார, உகார மகாரங்கள் வாசியோக மந்திரங்கள் என்று கூறுகிறார்.  இந்த மூன்று எழுத்துக்களுக்கும் அதாவது அவை குறிக்கும் பதி, பசு, பாசம்/ சிவன், சக்தி, மாயை என்ற மூன்று வஸ்துக்களுக்கும் மூலமில்லை.  அவையே அனைத்துக்கும் மூலம். இதை உணர்ந்தவர் கைலாயத்தை அடைவார் என்கிறார் அகத்தியர்.  கைலாயம் என்பது சஹாஸ்ராரத்தைக் குறிக்கும்.  இந்த உண்மைகளை அறிந்தவர்கள் கைலாயத்தைப் பெறுவார் என்று சித்தர்களும் முனிவர்களும் கூறுவர் என்கிறார் அகத்தியர்.  இந்த யோகம் மனோமணியின் அரங்கத்தில் பயிற்சி செய்யப்பட வேண்டும் என்று கூறும் அவர் இந்த அறிவை மனோன்மணித்தாய் தனது பிள்ளைக்காக கூறினாள் என்கிறார்.  இங்கு பிள்ளை என்பது ஜீவாத்மாவையும் குறிப்பாக அகத்தியரையும் குறிக்கும்.  முந்தைய பாடலில் அகத்தியர் மனோன்மணித் தாய் தனக்குப் பெயரை அளித்துத் தன்னை மகனாகக் கொண்டாள் என்று கூறுயுள்ளார். 

Thursday, 12 June 2014

260. The three mantras of vaasi yogam

verse 260

தீராது என்றுரைத்தாய் புலத்தியா கேள்
செப்புகிறேன் மூன்றெழுத்து மந்திரமாய்க் கேளு
பெறாது முதல் எழுத்து நங்கென்றோர் சொல்
பரிசமுடன் நடு எழுத்துசிங்கென்றோர் சொல்
சாராது கடைஎழுத்து யங்கென்றோர் சொல்
சம்சயங்கள் ஒன்றும் இல்லை வாசி மூன்றும்
பேராது இதில் மூன்றும் சூக்ஷம் கேளு
பொய்யன்றிமெய் விரும்பிப் புகல நன்றே

Translation:
Pulatthiya!  You said it will not be satiated
I will utter the three letters as mantra, listen
The unmoving first letter is nang
The merciful middle letter is cing
The unassociated last letter is yang
There are no doubts, the three vaasi
Are named as these three, listen about the subtlety
It is good to speak, desiring the truth without lies

Commtary:
Agatthiyar replies to Pulatthiyar's comment that unless one experiences the Divine, the supreme state of consciousness, one will not be really satisfied. He says that he will tell him the three letters of vaalai as the mantra, nang, cing and yang.  These three letters are present as poorakam, kumbakam and rechakam. 

Tamil Siddhas locate these letters at muladhara/ svadhistana, manipuraka/anahata and vishuddhi/ajna.



ஒருவர் இறையுணர்வை அனுபவித்தாலன்றி திருப்தி பெறமாட்டார் என்ற புலத்தியரின் கருத்துக்கு அகத்தியர் இங்கே பதில் கூறுகிறார்.  அவர் தான் கூறிய மூன்று எழுத்துக்கள் மந்திரமாக இருக்கும்போது நங், சிங், வங் என்று இருக்கும் என்றும் அந்த மூன்று எழுத்துக்களுமே பூரகம், கும்பகம், ரேசகம் என்று வாசியோகத்தில் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.  இதுவே சூட்சுமம். பொய் கலக்காத மெய் என்கிறார் அகத்தியர். 

Wednesday, 11 June 2014

259. An example of Siddha's 'not so politically correct' conversation

Verse 259
உள்ளோரே என்குருவே சிவமே ஐயா
உந்தனுக்குத் தெரியும் அல்லால் எவரும் காணார்
கள்ளோரே ரவிக்கை இட்டுச் சேலை மூடி
கண் காட்டும் மாதரை நான் கண்டு பொங்கி
தள்ளாடி நின்றதினால் மோகம் போமோ
சட்டமாய் ரவிக்கைதனை அவிழ்த்துக் கையால்
உள்ளாடைஅவிழ்த்து விழுந்தால் தீரும்
ஓ ஓ ஓ கண்டதினால் தீரா தென்றே 

Translation:
The who is remaining, My preceptor, Sivame, Sir!
You know it and none see it
The deceitful one! Covering with a blouse and sari
And winking their eyes, when I stand enchanted watching such women 
With the desire go away?
Removing the blouse by hand, properly
Loosening the undergarment, if it falls, the desire will be satisfied
O O O mere sight will not satiate it.

Commentary:
This verse is an example of how the Siddhas speak in ‘not so politically correct’ terms sometimes.  Pulatthiyar addresses Agatthiyar as “my preceptor, Sivam or supreme consciousness, and my Lord”.  He says that only Agatthiyar is conscious of these principles and no one else has experienced them.  To convey his conviction that experience is more important than theoretical knowledge, Pulatthiyar says that mere sight of a beautiful woman will not satisfy the desire but one has towards her.  He should take her clothes off and experience her beauty directly.  This verse shows us that none of the man-made boundaries control a Siddha, be it socially accepted behavior or norm.  They never shy away from speaking the truth.


சித்தர்கள் எவ்வாறு சில சமயம் அதிர்ச்சியடையும் வகையில் பேசுவார்கள் என்பதற்கு இப்பாடல் ஒரு சான்றாகும்.  எனது குருவே, சிவமே, ஐயா என்று அகத்தியரை அழைக்கும் புலத்தியர் அகத்தியர் ஒருவர் மட்டுமே இந்த சூட்சுமத்தை உணர்ந்தவர் என்றும் வேறு ஒருவரும் இவற்றை அறித்தார் இல்லை என்றும் கூறுகிறார்.  தனது இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் அவர் சேலையையும் ரவிக்கையையும் அணிந்துகொண்டு கண்ணைக் காட்டி பிறரை அழைக்கும் மாதர், அதாவது விலைமாதுக்கள், ஒருவருள் தோற்றுவிக்கும் மோகம் அவரைக் கண்டால் மட்டும் போகாது அவரது ஆடையைத் தளர்த்திப் பார்த்தால்தான் தீரும் என்று கூறுகிறார்.  சாதாரண மக்களைக் கட்டுப்படுத்தும் எந்த தளைகளும், அவை சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை, பழக்கவழக்கங்கள் ஆகியவைகூட, சித்தர்களைக் கட்டுப்படுத்துவதில்லை.  அவர்கள் உண்மையைக் கூற அஞ்சுவதில்லை என்பது இப்பாடலின் மூலம் புலப்படுகிறது. 

258. See with mind's eye

verse 258

கேளப்பா முதல் எழுத்து முதலே யாகும்
கெடியான நடு எழுத்து நடுவதாகும்
ஆளப்பா  கடைஎழுத்துக் கடையதாகும்
அர அரா மூன்றெழுத்தும் வாலை ஆகும்
கோளப்பா ஒன்றுமில்லை இரண்டைக் கேளு
குணமாக விட்டதுவும் விடாது மாகும்
தாளப்பா மனக்கண்ணால் விழித்தெழுத்தைப் பாரு
சம்சயங்கள் ஒன்றுமில்லை தவத்துள் ளோரே

Translation:
Listen Son! The first letter is first only
The firm middle letter is the middle one
Son! The last letter is the last only
Ara araa!  The three letters are vaalai
Hold it son! Not one, listen to the two
It is that which left and that which did not leave- qualitatively
Be patient, see the letter opening the eye of the mind,
There are no doubts, the Austere One!

Commentary:
The three letters mentioned here are a u and ma.  A or the akara is the first letter, the origin of everything, the Divine.  The middle letter u represents the Jiva, the middle one in the triad-pathi or lord, pasu or jiva and pasam or attachment.  The last letter is ma or maya that holds everything together. Agatthiyar says that all the three letters represent the kundalini sakti.  The akara is consciousness moving in the sushumna, the ukara in the ida and makara in the pingala.  “Not one but two” means not the singlet state but that of siva and sakti. The next line, that which left and that which did not leave, means several concepts.  It means ‘the soul or consciousness that does not leave and the body that leaves’, ‘the muladhara that was left and the sahasrara that was not left’, it means the lower consciousness that left and the higher consciousness that did not leave’ etc.    These principles could be perceived only through the eye of discretion.  This will be clear knowledge without any doubts.


இப்பாடலில் குறிப்பிடப்படும் மூன்று எழுத்துக்கள் அ உ ம.  அ அல்லது அகாரம் இறைவனைக் குறிக்கும்.  இறைவனே அனைத்துக்கும் முதலாவான்.  நடுவெழுத்தான உகாரம் ஜீவனைக் குறிக்கும்.  அது பதி, பசு, பாசம் என்ற மூன்றினுள் நடுவில் இருப்பது.  இந்த மூன்றில் கடைசியில் இருப்பது மகாரம்.  மகாரம் பாசத்தைக் குறிக்கும்.  தோற்றக் கிரமத்தில் கடைசியில் தோன்றுவது பாசம்.  இந்த மூன்று எழுத்துக்களுமே வாலை என்கிறார் அகத்தியர்.  அதாவது அகாரம் சுழுமுனையிலும் உகாரம் இடையிலும் மகாரம் பிங்களையிலும் செயல்படுகின்றன.  ஒன்றல்ல இரண்டு என்பது ஒருமைநிலையான பரமசிவனல்ல, இருமையான சிவனும் சக்தியுமான நிலை.  விட்டதும் விடாததும் என்பது பல பொருட்களைக் குறிக்கும்.  விட்டது என்பது மூலாதாரம் விடாதது என்பது சஹஸ்ராரம்.  அல்லது விட்டது என்பது உடல், விடாதது என்பது விழிப்புணர்வு.  இந்த உண்மைகள் ஒருவருக்கு ஞானக்கண்ணைத் திறந்து பார்த்தால்தான் புலப்படும்.  அப்போது எவ்வித சந்தேகமும் இருப்பதில்லை.

Monday, 9 June 2014

257. I placed it here like purified gold- Agatthiyar

Verse 257
சரக்குவைப்பு வாதமொடு குருவும் சொன்னேன்
ஜல்தியிலே சுழி மேவ இதிலே சொன்னேன்
உருக்கி வைத்தேன் ஞானம் எல்லாம் இந்த நூலில்
ஓஓஓ புடம் இட்ட தங்கம் போலும்
அருக்குகின்ற பல நூலின் கருக்கள் எல்லாம்
அர அரா திரட்டி வைத்தேன் இந்த நூலில்
சுருக்கில் சுழிமேவும் கருவும் சொன்னேன்
சுகமான அக்ஷரங்கள் மூன்றும் கேளே

Translation:
Along with ‘sarakku vaippu’ (stock of things) vaadam (alchemy) I told about guru
Here I told the way to pervade the whorl quickly
I melted and placed all the knowledge in this book
O O O like the purified gold
The essence of several books that take one close
Ara araa!  I collected them all in this book
I told the method to quickly pervade the whorl (muladhara)
Listen about the three akshara (letters) with pleasure

Commentary:
In this verse Agatthiyar talks about the concepts he has explained in the meijnanam.  He says that along with stock of things/nature of things, he has descried about alchemy and about guru.  He also mentioned the way to pervade the whorl or the kundalini.  He says that he has summarized the knowledge found in all the books after purifying them like purifying gold.  This tells us that he is not mere repeating what is in other books but is critically reviewing them and adding them here.  Thus this book is the supreme book of knowledge that Agatthiyar has granted us to know the way to perform kundalini yogam or siva raja yogam.  He concludes the verse saying that he will be talking about the three letters.  From the next verse we see that the three letters as a, u and ma.


இப்பாடலில் அகத்தியர் தான் இந்த மெய்ஞ்ஞானநூலில் கூறியுள்ள பொருட்களைப் பட்டியலிடுகிறார்.  தான் இங்கு சரக்கு வைப்பு, வாதம் மற்றும் குருவைப் பற்றிக் கூறியுள்ளதாகவும் சுழி அல்லது சுழுமுனை நாடியை விரைவாக மேவும் வழியை மிக குறுகிய முறையில் கூறியுள்ளதாகவும் பலநூல்களில் காணப்படும் கருத்துக்களைத் தான் தங்கத்தைப் புடமிடுவதைப் போல ஆராய்ந்து சரிசெய்து இங்கு அளித்துள்ளதாகவும் கூறுகிறார்.  இதனால் இந்த நூலில் காணப்படும் கருத்துக்கள் அகத்தியரால் கூர்மையாக ஆராய்ந்து நமக்கு அளிக்கப்பட்டுள்ளன என்பது புரிகிறது.  இந்த பட்டியலுக்குப் பிறகு தான் மூன்று அக்ஷரங்களைப் பற்றிக் கூறப்போவதாகச் சொல்லி அகத்தியர் இப்பாடலை முடிக்கிறார்.