Wednesday, 25 June 2014

270. Those who are hungry should eat this gruel of wisdom

Verse 270
தூக்கிப் பார் கையிலே இந்த ஞானம்
சுருக்கமது தான் அறிந்து சொக்கி ஏறு
ஆக்கி வைத்தேன் ஞான திரு பொங்கலப்பா
அர அரா பசியாளி அறிந்து உண்ணு
போக்கிரிக்கோ பாடி வைத்தேன் இந்த நூலை
புண்ணியர்க்கு லபிக்குமிது பொய்யற்கில்லை
சாக்கிரிகள் செய்யவென்றால் குருவைக் காரு
சதுர்முகன்போல் குரு நிலைத்தால் இது சொல்வாரே

Translation:
Evaluate this jnana and see it
Knowing the essence climb with enchantment
I cooked the gruel of the sacred wisdom
Ara araa!  The one who is hungry consume this with understanding
Did I sing this work for the troublesome?
It will be fruitful only for the fortunate not for liars
If you want to do the procedures approach a guru
If you get a guru like the four-faced one he will explain this.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that this book is for those who have the hunger for realization.  It is not for liars and charlatans but only for the deserving.  However, if one wishes to follow the procedures recommended in this book Agatthiyar advises that one should do under the supervision of a guru.  Only a guru can explain the procedures clearly and make sure the disciple is performing them in an error- free safe manner.  Agatthiyar says that if one is fortunate to get a guru like the four-faced one, Brahma, then one will be granted all the knowledge.


இறையுணர்வைப் பெற வேண்டும் என்ற பசியுள்ளோர்க்கே இந்த நூலைத் தான் பாடியதாகக் கூறும் அகத்தியர் இந்த தெய்வீக பொங்கலை பசியுள்ளோர்கள் அறிந்து உண்ணவேண்டும் என்கிறார். ஆனால் இதில் கூறப்பட்டுள்ள சரியை கிரியைகளை செய்யவிரும்பும் ஒருவர் தகுந்த குருவின் மேற்பார்வையில்தான் இதைச் செய்யவேண்டும் என்று அவர் கூறுகிறார்.  நான்முகனைப் போன்ற குரு வாய்த்தால் அவர் இந்த விஷயங்களை சரியாக விளக்குவார் என்கிறார் அகத்தியர். 

269. Agatthiyar explains why he composed meijnanam

Verse 269

சுடர் காண வேண்டுமென்றால் புருவ மையம்
சொல்லறிவு தோணவென்றால் இந்த ஞானம்
படராத சுடர் ஓடிப் படிந்தாப் போலே
படித்திட்டேன் மெய்ஞ்ஞானம் இந்த நூலில்
இடரான இடரனைத்தும் தீர்த்தேன் இந்தநூல்
எல்லோரும் பிழைக்கவென்றே வெளியாய்ச் சொன்னேன்
துடரான துடர் கோடி தொந்தம் கோடி
சொல்லிவிட்டேன் இந்த நூலைத் தூக்கிப் பாரே

Translation:
If the flame should be seen, then it is the middle of the brow
If knowledge from words has to occur, then this book
Like the flame that does not spread but remains in one place
I have taught in this book, meijnanam
I solved all the trials and tribulations
I told this book explicitly so that everyone will be liberated
The chains, they are millions, dilemma - millions
I have told in this book, evaluate it.

Commentary:
Agatthiyar is talking about the place to focus depending on the result desired.  If one wishes to see the flame of consciousness then one should focus at the spot between the eyebrows.  If one wishes to attain knowledge about these techniques and the Divine then one should read meijnanam.  Agatthiyar tells Pulathiyar that he has explained in the meijnanam, details about this flame in such a way that all the doubts, trials and tribulations that people face will be dispelled.  He says that the chains of ignorance, attachements that tether a soul to this world, the dilemma it faces are millions and that is the reason for him explaining these concepts in such an elaborate fashion.


எந்த பயன் வேண்டுமோ அதற்கு ஏற்றாற்போல் எங்கு கவனிக்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். ஜோதியைக் காணவேண்டும் என்றால் புருவ மத்தியில் கவனத்தை வைக்க வேண்டும் என்றும் வார்த்தைகள் மூலம் அறிவு பெறவேண்டும் என்றால் மெய்ஞ்ஞான நூலைப் படிக்க வேண்டும் என்றும் அகத்தியர் கூறுகிறார். மக்கள் தமது கஷ்டங்களையும் சந்தேகங்களையும் விலக்கி கொண்டு உய்யவேண்டும் என்பதற்காக இந்த நூலைத் தான் இயற்றியதாகக் கூறும் அகத்தியர் உலகில் மக்களைப் பல சங்கிலிகள் பிணைக்கின்றன அவர்களுக்குப் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவரைப் போக்க அவர்கள் இந்த நூலை ஆழப்படிக்கவேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.

268. Merge in the Jnana Jyothi!

Verse 268
வாசி சுழி காணவென்றால் அடியில் ஊது
மைந்தனே நடுமூலம் அறிந்து ஊது
ஊசி சுழி காணவென்றால் சுழியில் ஊது
உண்ணாக்கினால் மறித்து அலைந்திடாதே
வீசு புகழ் மூன்றெழுத்தும் முன்பின் மாறும்
மெய்ஞ்ஞான சுழி திறந்தால் பிரமை தீரும்
பூசிதமாய் புருவமையம் உற்றுப் பாரு
பிரபை ஒளி வீசுகின்ற சுடரில் சேரே

Translation:
To see the whorl of the vaasi blow at the bottom
Son, blow in the middle
To see the needle like whorl blow in the whorl
Block with the uvula and stop roaming (become still)
The glorious three letters will change their order
When the whorl of true wisdom opens, delusion will be relieved
Look carefully at the middle of the brow as if performing worship
Join the flame that shines brilliantly with aura.

Commentary:
During vaasi yoga or breathing practice, the breath should be directed through the sushumna nadi.  Agatthiyar says that one should do this knowing the base, the muladhara cakra.  The term 'nadu moolam' refers to the manipuraka chakra. The whorl mentioned in line 3 refers to ajna.  The sushumna nadi is said to have three concentric tubes the inner most being needle-like chitrangini nadi.  Agatthiyar has referred to this as a hairline bridge (so thin) and as the stock of the lotus.  After directing the breath through the sushumna the uvula is blocked by turning the tongue up.  Thoughts must be stilled.  Then the door of true wisdom will open, realization will happen.  Agatthiyar says that the glorious three letters will change their order.  The three letters are akara, ukara and makara.  During creation the single letter of om transforms into akara-the Divine, ukara- the limited soul and makara-the creative power or maya.  Up on gaining expertise in kundalini yoga the three letters will become one or akara, no more distinction no separations.  Everything will be in the state of oneness.  The yogi experiences this in the ajna cakra.  Hence, Agatthiyar tells Pulatthiyar to merge in this state of consciousness, the flame of consciousness by looking at the middle of the brow.


வாசி யோகத்தின்போது மூச்சு சுழுமுனை நாடியில் பாய வேண்டும்.  இதற்கு ஒருவர் மூலாதார சக்கரத்தின் அடியை, அதில் உள்ள திறப்பை அறிந்து அதனுள் மூச்சைச் செலுத்தவேண்டும்.  இந்த வாசல் ஒரு லிங்க வடிவில், சுயம்பு லிங்கம் என்ற பெயரில் குண்டலினியால் ஒரு பாம்பைப் போல சூழப்பட்டு உள்ளது என்று முன்பு பார்த்தோம்.  இரண்டாம் வரியில் உள்ள 'நடு மூலம்' என்ற சொல்லுக்கு மூலாதாரத்தின் நடுவு, சுழுமுனை நாடியின் நடுவு அல்லது நடுவில் உள்ள சக்கரம் அதாவது புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மற்றும் மூலாதார சக்கரம் ஆகியவற்றை அறிந்து ஊது என்று பொருள் கூறலாம்.  சுழுமுனை நாடி ஒன்றினுள் ஒன்றாக மூன்று குழல்களைக் கொண்டது என்று கூறப்படுகிறது.  இதில் அனைத்துக்கும் உள்ளே இருப்பது மிக மெல்லிய சித்ரங்கிணி நாடி.  அகத்தியர் முன்பு இந்த நாடியை மயிர்ப்பாலம் என்று அழைத்துள்ளார்.  இதனைத் தாமரைத் தண்டு என்றும் கூறுவார்.  இந்த நாடியில் மூச்சைச் செலுத்தும்போது மூலாதாரத்தில் உள்ள கதவு திறந்து குண்டலினி மேல் நோக்கிப் பாய்கிறது.  அப்போது நாவால் உண்ணாக்கை மூடவேண்டும்.  எண்ணங்களின் அலைச்சல் தடை செய்யப்படவேண்டு.  அப்போது புகழ் வாய்ந்த மூன்றெழுத்துக்கள் இடம்மாறும் என்கிறார் அகத்தியர்.  இந்த மூன்றெழுத்துக்கள் அ உ ம என்பவை.  உலகம் தோன்றும்போது ஒரே எழுத்தான ஓம்காரம் அகார உகார மகாரமாக உருமாறி உலகமாகக் காட்சியளிக்கிறது.  லயத்தின்போது இந்த மூன்று எழுத்துக்களும், மகார உகார அகாரங்கள் ஒரே எழுத்தாக அகாரமாக மாறுகின்றன.  இந்த ஒருமை நிலையை அந்த யோகி ஆக்ஞா சக்கரத்தில் காண்கிறார்.  அதனால் அகத்தியர் புலத்தியரை ஆக்ஞா சக்கரத்தை, புருவத்தின் மத்தியை உற்று நோக்கி பிரபையுடன் கூடிய சுடரில் கலக்குமாறு கூறுகிறார்.  

Tuesday, 24 June 2014

267. Everything is due to the dance of kundalini

Verse 267
குறித்துமிகப் பார்க்கவென்றால் சுழினை நாடு
கோடி ரவி பார்க்கவென்றால் வாசி ஊது
இறுக்கி மெள்ளப் பார்க்கவென்றால் சுழிக்கண் நாட்டு
ஏகவெளி பார்க்கவென்றால் இதுவே பாதை
சிறுக்கி அடி என்றதினால் மோகம் போமோ
சிவசிவா தினந்தோறும் தெளிந்து ஏறு
அரிக்கி முதல் பிறந்தெழுத்து சுழினை நாட்டம்
அஞ்செழுத்தில் பிறந்ததுவே வாசி தானே. 

Translation:
If to see pointedly, seek the whorl,
If to see million suns, blow the vaasi
If to see it slowly tightening it, plant in the whorl
To see the singular, supreme space, this is the path.
If it is said, “Hey lady!” will desire leave?
Siva sivaa!  Climb daily with clarity
It is the dance of the whorl from the letter a
That which was born in the five letters is verily vaasi

Commentary:
Agatthiyar elaborates on the nature of the whorl or kundalini.  He says that ascendence of Kundalini will give focused attention, a vision of million suns.  The breath and the power are tightened and the focus is placed on the movement of the kundalini.  It is not sufficient to talk about this yoga or read about it, one has to practice is actively and consistently.  Hence, Agatthiyar says that one should practice the vaasi yogam daily and with mental clarity.  He further adds that all the letters starting from akara are born from the dance of the kundalini and the vaasi yogam, the path to realize was born from the five letters of namacivaya.


குண்டலினி யோகம் அல்லது வாசியோகத்தை அகத்தியர் இப்பாடலில் மீண்டும் விளக்குகிறார்.  அந்த யோகம் ஒருவரது கவனத்தைக் குவித்து ஆயிரம் கோடி சூரியனின் ஒளியைக் கொண்ட பரவுணர்வைத்  தருகிறது.  அதனால் ஒருவர் கவனத்தை இறுக்கி மூச்சைக் கட்டி இந்த ஆனந்த நடனத்தைப் பார்க்கவேண்டும் ஏனென்னில் இவ்வுலகமே குண்டலினியின் நடனம்தான்.  இதைப் பற்றிப் பேசினால் போதாது, படித்தால் போதாது.  ஒருவர் இதனை தினமும் பயிற்சி செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.  எழுத்துக்கள் அல்லது வடிவுடையதாக இருக்கும் இந்த உலகமே குண்டலினியின் நடனத்தினால் தோன்றியது என்று கூறும் அகத்தியர் அதன் மகிமையை நமக்குக் காட்டும் வாசி பிறந்தது ஐந்தெழுத்தில்.  அல்லது நமசிவாய என்ற பஞ்சாட்சரத்தில் என்கிறார்.  

Sunday, 22 June 2014

266. Read Meijnanam with the right attitude for...

Verse 266
நாட்டம் என்றால் அது நாட்டம் மனக்கண் நாட்டம்
நாடினால் வெகு சூக்ஷம் ஏக சூக்ஷம்
ஆட்டம் என்றால் அது ஆட்டம் சுழினை ஆட்டம்
அணுவளவும் பேருவதாய் வளர்ந்த கோலம்
கூட்டம் என்றால் அது கூட்டம் பிரபை கூட்டம்
கோடி ரவி சுடர்காந்தி விசிறி ஆகும்
பாட்டம் என்ற பாட்டை மிகப் படித்திட்டால் என்
பலன் உண்டோ பாவிகளாய்க் குறித்துப் பாரே   

Translation:
It is the true seeking, the seeking through the mind’s eye
Seeking, it is the subtlety, the single supreme subtlety,
Dance, it is the dance of the whorl
The atomic size growing big
Crowd, it is the crowd of luster
It is the fan of million suns, their light and brilliance
To know the benefit that may be attained
Read my song. See it pointedly with the right attitude.

Commentary:
Agatthiyar describes the expansion or ascendence of kundalini Shakti and the consciousness inthis verse.  He says it is the supreme subtlety, the dance of the kundalini Shakti that remains as a whorl with three and a half turns, it is the true seeking, the force that is atomic in size but grows into a huge flame that equals the brilliance of millions of suns.  To know the benefit that result from the expansion of this force Agatthiyar suggests that we should read his book meijnanam with the right attitude.


இப்பாடலில் அகத்தியர் குண்டலினி சக்தியின் விரிவை, விழிப்புணர்வின் விரிவைப் பற்றிப் பேசுகிறார்.  அதுதான் ஒருவர் தேடவேண்டிய நாடவேண்டிய சூட்சுமம்,  சுழி அல்லது குண்டலினியின் நடனம், ஒரு அணுவளவிலிருந்து உலகமாக விரியும் சக்தி, கோடி சூரியப் பிரகாசத்தை உடைய பிரபை.  இதன் பலனை அறிய நாம், அவரது நூலான மெய்ஞ்ஞானத்தை சரியான பாவத்துடன் படிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.   

Thursday, 19 June 2014

265. See the dance of the whorl

Verse 265
சுத்திப் பார் ஞானமது எங்கே என்று
சுழன்றலைந்துப் போகாதே சூக்ஷம் கேளு
வித்திப் பார் பிரகஸ்பதிபோல் பிறப்பை தானும்
வீசுமடா நோட்டத்தில் காணும் உண்மை
பத்திப் பார் அதுவல்லோ சூழின நாட்டம்
பாடரிது ஞானமிது பரிந்து நாட்டே.

Translation:
Whirling, see where wisdom is.
Do not lose yourself spinning and roaming around, listen to the subtlety
Plant the mind firmly and see creation like Bruhaspathi
It will blow, the truth will become visible up on noticing
Hold it and see, this is the dance of the whorl
It is the wisdom that is hard to sing about, establish it with interest.

Commentary:
As a continuation of the previous verse, Agatthiyar tells Pulatthiyar to ‘sutru’ and see where the locus of wisdom is present.  ‘Sutru’ means both roam around and spin.  Agatthiyar is advising Pulatthiyar to spin through the wheels, the cakras- make the consciousness roam around through the cakras and try to locate the site of wisdom. However, Pulatthiyar is not to lose himself roaming too much or whirling too much.  In the previous verse Agatthiyar mentioned ‘if the rice is overcooked it will lose its taste’ that is indulging in kundalini yogam too much is not good.  Hence, with control Pulatthiyar is to look for the site of wisdom and identify it with the help of mental eye.  Then the play of creation, the dance of the kundalini the whorl will become visible.  Agatthiyar is advising Pulatthiyar to plant this experience, the hard to describe phenomenon within himself with interest.    

முந்தைய பாடலின் தொடர்ச்சியாக அகத்தியர் இப்பாடலில் புலத்தியரை ஞானத்தின் இருப்பிடத்தைச் சுற்றிப் பார்க்குமாறு கூறுகிறார்.  இங்கே சுற்றுவது என்பது சக்கரங்களில் விழிப்புணர்வை மேவச் செய்து உணருவது.  ஆனால் இந்த முயற்சியில் சுற்றி அலைந்து தன்னை இழந்துவிடவேண்டாம், பயனற்று விழிப்புணர்வை பயணிக்கச் செய்யவேண்டாம், தேவையற்ற இலக்குகளை அடைய முயற்சிக்கவேண்டாம், என்று அகத்தியர் அவருக்கு அறிவுறுத்துகிறார்.  இதைத்தான்  முந்தைய பாடல் ‘சோறு அளிந்தால் ருசிக்காது’ என்று அவர் கூறினார்.  இவ்வாறு மனக்கண்ணால் ஞானத்தின் இடத்தை நோக்கினால் அது சுழி அல்லது குண்டலினி சக்தியின் நடனம், உலகப் படைப்பு அதன் காரியம் என்பது புலப்படும்.  இந்த அறிவு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.  இதை உணர்ந்து ஆர்வத்துடன் இந்த உணர்வை தன்னுள் நாட்டிக்கொள்ளுமாறு அகத்தியர் புலத்தியருக்கு அறிவுறுத்துகிறார்.    

Wednesday, 18 June 2014

264. Senseless cattle, see around

Verse 264

ஏறடா பிரம்மாவுக் கொன்றே சொட்டு
இதன் பிறகு மாயோர்க்கு இரண்டே சொட்டு
கூறடா ருத்திரக்கு மூன்றே சொட்டு
கோகோகோ கண்டமத்தில் நாலே சொட்டு
மாறடா பாசம் எல்லாம் மனக் கண்ணாலே
மகத்தான சுழிமேவி மணியில் கூட்டு
சோறடா அளிந்தாக்கால் ருசிதான் போச்சு
சுரணைகெட்ட மாடுகளே சுத்திப் பாரே

Translation:
Climb son, for Brahma one drop
After this, for Mayon two drops
Say son, for Rudra three drops
Ko!Ko!Ko! In the throat four drops
Change attachment, pervade, through the mental eye
The gracious sushumna, join it with the jewel
When the rice is overcooked its taste is lost
Senseless cattle, look around.

Commentary:
This verse describes the path that the kundalini sakti takes during its ascent.  The deity of the svadishtana cakra is Brahma.  Agatthiyar says one drop for Brahma.  May be he means the first step is svadishtana cakra.  The next step is the navel cakra.  The deity for this cakra is Mayon or Vishnu.  The third step is the heart cakra.  The deity for this cakra is Rudra.   The fourth cakra is the throat cakra.  This is the fourth step.  At this stage all the attachments leave the person.  After this the consciousness is merged with the mani.  This should be done only up to a particular limit.  If it is overdone then the bliss is lost.  Agatthiyar says that if the rice is overcooked it loses its taste.  He calls people senseless cattle, shameless cattle and tells them to look around. Even though this terms looks like an insult one wonders whether Agatthiyar is really insulting people here.  Being senseless may mean being senseless of the world but being sensitive of the Divine, the cattle, which means those who have that wealth, should travel through the cakras and see/enjoy the bliss.


இந்தப் பாடலில் அகத்தியர் குண்டலினி சக்தியின் பாதையைப் பட்டியலிடுகிறார்.  இந்தப் பாதையின் முதல் படி ஸ்வாதிஷ்டானம். அதன் அதிபதி பிரம்மா.  இதற்கு முதல் சொட்டு என்கிறார் அகத்தியர்.  அதுவே முதல் படி என்கிறார் போலும்.  இதனை அடுத்த படி நாபிச் சக்கரம்.  இதன் அதிபதி மாயோன் அல்லது விஷ்ணு.  மூன்றாவது படி அனாஹத சக்கரம்.  அதன் அதிபதி ருத்ரன்.  இதனை அடுத்த படி விசுத்தி.  இதற்கு நான்கு சொட்டு என்கிறார் அகத்தியர்.  இந்த நிலையில் எல்லா பற்றுகளும் விலகிவிடுகின்றன.  இதனை அடுத்து விழிப்புணர்வு மணியுடன் சேருகிறது.  ஆனால் இந்த பயிற்சி ஒரு அளவுக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட வேண்டும்.  இல்லாவிட்டால் ஆனந்தம் ஏற்படாது.  சோறு அளிந்துவிட்டால் ருசிக்காது என்கிறார் அகத்தியர்.  அவர் மக்களை சுரணை கெட்ட மாடுகள் என்று அழைத்து அவர்கள் சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிறார்.  சுரணை கெட்ட மாடுகள் என்பது அவதூறைப் போலத் தோன்றினாலும் உண்மையில் அகத்தியர் மக்களைத் திட்டுகிறாரா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.  சுரணை அற்று இருத்தல் என்பது உலக சுரணை அற்று பரவுணர்வு பெற்று, அந்த சம்பத்தைப் பெற்ற அவர்கள் சக்கரங்களில் சுற்றிப் பார்க்கவேண்டும் அதாவது குண்டலினி சக்தியை மேலே எழுப்பி மீண்டும் கீழே இறக்கி பரவுணர்வை ஒரு துளியாவது அனுபவிக்கவேண்டும் என்று அவர் கூறுகிறாரோ என்று தோன்றுகிறது.