Sunday, 20 April 2014

164. Nature and locus of Paramasiva

Verse 164
மறுமொழி
சொல் என்றாய் புலத்தியனே சொல்லக் கேளு
சுத்த நிறமயமான சோதி தன்னை
கல் என்ற மனம் ஒற்ற பிள்ளைக் காக்கும்
காரணத்திலே விழுந்து களரும் உள்ளம்
இல் என்ற வீடுதனில் இருந்தால் என்ன
எழுந்து சில மலை புகுந்து போனால் என்ன
அல் என்ற உலகெல்லாம் சஞ்சரித்தால் என்ன
அருள் பெருகும் ஞானமதை அறிந்துக் கொள்ளே

Translation:
Reply
Pulatthiya! You asked, “Tell”.  Listen to me say it
The Pure, tranquil/undisturbed, effulgence
Will be attained by the son whose stony mind goes away
The heart will fall into the cause and dig
Does not matter whether remaining in the house
Or go to some mountains
What if roamed around the dark world
Know the wisdom the race will flow, know the wisdom.

Commentary:
Agatthiyar replies to Pulatthiyar’s query about the locus of the divine.  He says that it is the heart that is not stony.  The nature of the Divine, Paramasiva is purity, unbound by anything, effulgence.  When the heart is ripe enough to realize the presence of the Divine within then one’s attention will be completely focused on the Universal Cause, the Divine.  Once this happens then it does not matter whether one remains as a householder of a renunciate, whether one lives in a house or in the mountains or roams around the world as a mendicant.  Thus, Agatthiyar says that the external symbols such as being a householder or a renunciate does not matter, realization with the right attitude is all that matters.  When one realizes that one’s heart will melt and grace and universal love will flow.  Agatthiyar says that this is wisdom.

When Pulatthiyar asks about Paramasiva, instead of describing him as one with knotted hair, tiger skin robe or Ganga on his head Agatthiyar calls him as purity, niramaya and effulgence.  Paramasiva represents the unmaifested state, the state of oneness.  He is pure as he is free from the triple qualities- sattva, rajas and tamas.  He is in the undisturbed or actionless state and is the effulgence of consciousness.

Isvara pratyabijna karika a text of Kaishmir Saivism describes Siva as, “Siva lies as my own self (sva atma) and is proved in the very beginning (aadisiddha) as myself who is the doer (karta) and the knower (jnaatha).  Thus if one were to locate Siva one has to point to oneself, as Siva is really consciousness (citi or samvith). 
Agatthiyar reflects this idea by saying that one with pure heart will realize Siva within himself. 

பரமசிவனின் இடத்தைக் காட்டுமாறு புலத்தியர் கேட்டதற்கு அகத்தியர் இங்கு பதில் கூறுகிறார்.  தூய, அசைவற்ற, ஜோதியான சிவனின் இருப்பிடம் கல்போல் இல்லாத மனம் என்கிறார் அகத்தியர்.  திருமூலரின் அன்பே சிவம் என்ற வாக்கியத்தை ஒத்திருக்கிறது இது.  மனம் கனிந்து இறைவனின் இருப்பிடம் “தான்” என்பதை உணரும்போது அந்த மனிதன்  அனைத்துக்கும் காரணமான பரம்பொருளில் ஒன்றிவிடுகிறான். இந்த உண்மையை உணர்ந்தபின் ஒருவர் இல்லறவாழ்க்கையை வாழ்ந்தால் என்ன, துறவியாக மலைகளில் வாசித்தால் என்ன, பித்தனைப் போல இவ்வுலகில் சுற்றித் திறந்தால் என்ன (அவன் எப்பொழுதும் இந்த உணர்ந்த நிலையில் இருக்கிறான், பரம்பொருளில், காரணத்தில் மூழ்கியிருக்கிறான்). 

புலத்தியர் அகத்தியரிடம் சிவனைப் பற்றிக் கேட்டபோது அகத்தியர் சிவபெருமான் தாழ் சடையன், புலித்தோல் அணிந்தவன், கங்காதரன் என்று கூறவில்லை.  சிவன் சுத்த நிராமயமான ஜோதி என்கிறார்.  இதுவே இறைவனின் உண்மை நிலை.  அவன் சுத்தன் ஏனெனில் அவனிடம் சத்துவம், ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்கள் இல்லை, அவன் நிற்மலன்.  அவன் அசைவற்றவன், தன்னில் மூழ்கியிருப்பவன்.  அவன் ஜோதி உருவானவன், அவனுக்கு ஒரு குறிப்பிட்ட உருவமில்லை ஆனால் அவன் அனைத்து உருவங்களாகவும் இருப்பவன்.  அவன் ஞானஜோதி!


காஷ்மீர சைவமதத்தில் ஈஸ்வர பிரதியபிக்ஞா என்னும் நூல் சிவனைப் பற்றி விளக்கும்போது “சிவன் எனது ஆத்மா, ஆதி சித்தன் என்னைத் தானாக, கர்த்தாவாகவும் ஞாதாவாகவும்  காட்டியவன்.  அவன் இருப்பிடத்தை ஒருவர் காணவேண்டுமென்றால் தன்னையேதான் சுட்டிக்காட்டவேண்டும்” என்று கூறுகிறது.  இந்தக் கருத்தில்தான் அகத்தியர் ஒரு தெளிந்த உள்ளத்தால் தானே பரமசிவன் என்று காணமுடியும் என்கிறார். 

163. The one who assembled the 'kalari'! Please say ever forceful words and show us the locus..

Verse 163
கேள்வி
அடுத்திட்டாய் என்றுரைத்தீர் குருவே ஐயா
அருள் ஞானக் கொடிபோட்டீர் ஞானம் சொல்லும்
படுத்திடாக் குருக்கள் குண்டம் அறியச் சொன்னீர்
பாரில் உள்ளோர் நடத்தை சொன்னீர் பயமும் தீர்த்தீர்
கடுத்திடாத் திருதறெதன்று  ஞானம் சொல்வீர்
களரிமிகக் கூட்டி அல்லோ கார்த்தீர் ஐயா
படுத்திடா வார்த்தை உண்டோ விளங்கச் சொல்வீர்
பரமசிவன் பதிகாட்டி அருள் செய்வீரே

Translation:
You said, do not associate with them, Sir,
You created the flag/the creeper of wisdom and grace
You expanded on the nature of good gurus
You spoke about the behavior of worldly people, you also dispelled fear
Please tell us about wisdom considering us as those not ready to take pain and change
You protected it creating a combat area (kalari)
Are there any words that do not cause trouble/ lose its vigor?  Please tell us clearly
Bestow your grace on us by revealing the locus of Paramasiva.

Commentary:
This is again a summary verse by Pulatthiyar.  He lists all the things that Agatthiyar taught recently. Agatthiyar told him to stay away from evil people, wastrels.  He talked about wisdom, good and evil gurus, nature of people in general and removed any fear that may lurk in the mind.  The meaning of the word ‘dhiruthar or thiruthar’ is not clear.  This term appears in Thirucchendoor Murugan Pillaith thamizh- ‘seraa dhiruthar kulakalagaa’.  சேரா திருதர் குலகலகா.  It seems to be some type of bad people.  Next line is interesting.  Pulatthiyar praises Agatthiyar that he has created or brought together a ‘kalari’ or a combat ground where erroneous ideas are thrashed with force and protected this knowledge.  He asks Agatthiyar to tell him words that never lose vigor- those that are true always and bestow his grace by revealing the locus of Paramasiva. 


இதுவரை அகத்தியர் கற்றுக்கொடுத்தவற்றை புலத்தியர் தொகுப்பதாக உள்ளது இப்பாடல் புலத்தியரை தீயவர்கள், வீணர்கள் வம்பர்கள் ஆகியவர்களை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று கூறிய அகத்தியர், பொய் குரு மெய்குரு ஆகியவர்களின் தன்மை, உலகமக்களின் பழக்கம் ஆகியவற்றையும் கூறி அவரது பயத்தையும் போக்கினார் என்கிறார் புலத்தியர்.  அடுத்த வரியில் உள்ள ‘திருதர்’ என்ற வார்த்தைக்குப் பொருள் தெரியவில்லை.  ஏதோ ஒரு தீய குணத்தைக் கொண்டவர் என்பது புலப்படுகிறது.  இந்தச் சொல் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில் காணப்படுகிறது (சேரா திருதர் குலகலகா) என்று வலைப்பதிவில் காண்கிறோம்.  அகத்தியர் ஒரு களறியைக் கூட்டி இந்த நூலையும் இதில் கூறியுள்ளவற்றையும் காத்தார் என்கிறார் புலத்தியர்.  களரி என்பது சண்டையிடும் இடம் என்று பொருள்படும்.  இந்த மெய்ஞ்ஞானம் என்னும் களத்தில் அகத்தியர் தவறான கொள்கைகள், தவறான மக்கள் ஆகியோருடன் போரிட்டு இந்த ஞானத்தின் உண்மைத் தன்மையைக் காக்கிறார்.  இதனை அடுத்து புலத்தியர் அகத்தியரிடம் எப்பொழுதும் வலுவிழக்காத வார்த்தைகளைக் கூறுமாறும் பரமசிவனின் இருப்பிடத்தைக் காட்டி அருள் புரியுமாறும் வேண்டுகிறார். 

Saturday, 19 April 2014

162. Shop of birth and shop of Guru..

Verse 162
காணப்பா கருக்கடையும் குருக்கடைகள் எல்லாம்
காட்டுமடா இந்த நூல் களங்கம் இல்லை
தோணப்பா ஆயிரத்தைப் பந்தனம் பண்ணு
துன்மார்க்க பிள்ளைகளை அடுத்திடாதே
சாணப்பா வீண் அளக்கும் பயல்களோடே
சரியாக நீ வசனம் சாற்ற வேண்டாம்
பாணப்பா பானமதம் கொண்டோர் உண்டு
பார்த்து நீ உருத்தெரிந்து அடுத்திடாயே

Translation:
See son, the shop of birth and the shop of guru
This book will show. There are no faults.
Think about it, process the thousand.
Do not go near evil people
Move finger span from those who talk about unnecessary things
You do not have to correct them with a speech
There are those who are crazy about food and drink
Seeing their true nature you refrain from associating with them.

Commentary:
The terms ‘karukkadai’ means the shop of birth, the muladhara from which one gets all kinds of life forms.  It is said that one’s karma and samskara are stored in the muladhara that creates various situations and experiences for the one born.  ‘Gurukkadai’ is the shop of the guru or realization.  This site is the ajna that offers a variety of experiences for the yogi. 

Agatthiyar tells Pulathiyar, “Process the thousand”.  The term used is ‘padanam’. This is a special method of preparation where materials are incubated and allowed to undergo transformation.  Agatthiyar does not want us to merely read the book but to let it get undergo processing within us, that is, we should contemplate upon the topics and realize their ramifications.  
Then he tells Pulatthiyar to go away from evil people at least to a finger span length, ‘saan’.  He tells Pulatthiyar to not waste his time arguing or talking with them trying to convince them what is right.  Such people are not interested in knowing the truth.  They are interested only in argument for argument sake. He also tells Pulatthiyar to go away from those interested in only food.  ('paan' means bread, this term is used in Srilankan Tamil frequently.  'paanam' means drink).  They also waste their lives in insignificant pursuits.


முதல் வரியில் காணப்படும் ‘கருக்கடை’ மூலாதாரத்தைக் குறிக்கும்.  நமது கர்மங்களும் சம்ஸ்காரங்களும் மூலாதாரத்தில் சேர்த்துவைக்கப்பட்டுள்ளன என்று பொதுவாகக் கருதப்படுகிறது.  இவையே நமக்கு பிறவியையும் வாழ்க்கையின் அனுபவங்களையும் அளிக்கின்றன.  குருக்கடை என்பது ஆக்ஞா சக்கரம்.  அங்கு ஒருவருக்கு பல்வேறு அனுபவங்கள் ஏற்படுகின்றன.  ஒரு யோகி பல்வேறு சித்திகளைப் பெறுகிறார்.  இந்த ஆயிரம் குற்றமற்ற பாடல்களைப் படித்து பதனம் பண்ணுமாறு அகத்தியர் கூறுகிறார்.  பதனம் என்பது ஒருவிதமான தயாரிப்பு முறை.  நாம் இந்தப் பாடல்களைப் படித்தால் மட்டும் போதாது, அதை நினைவில் எப்பொழுதும் வைத்து அது நம்மை மாற்ற அனுமதிக்கவேண்டும், அதில் தரப்பட்டுள்ள விஷயங்களின் உட்பொருளை நாம் அறியவேண்டும்.  இதனை அடுத்து அகத்தியர் புலத்தியரிடம் வீண் வம்பர்கள், தீயவர்கள், உணவே பிரதானம் என்று இருப்பவர்கள் ஆகியோருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்கிறார்.  (பாண் என்னும் சொல் ரொட்டியைக் குறிக்கும். பானம் என்பது திரவ உணவு)அது வெட்டிப் பேச்சு, தீய குணங்கள், அல்ப விஷயங்களைத் தேடுதல் ஆகியவற்றை வளர்க்கும்.

161. Protect this book like your life, then the down turned banana bunch will grant all siddhis!

Verse 161

தேறப்பா புலத்தியனே நூலைக் கண்டால்
சீவன்போல் காத்திரு நீ இந்த நூலை
கோறப்பா காவியம்தான் இதுதான் ஐயா
குருநூலும் இந்தநூல் கொள்ளைபோல
வேறப்பா நூல் இல்லை கண்டு தேறு
வீணருடன் சொல்லாதே மெய்தப்பாதே
தாறப்பா கதலைகுலை கீழ்க்கண் போல
சகலசித்தும் கைவசமாகும் காணே

Translation:
Become an expert Pulatthiya! When you see this book
Protect it as your life /soul, you seek
This book.  This is the epic, this is it, Sir
This book is also gurunool/book of wisdom, like a theft
There is no other book, see it and become an expert
Do not talk to wastrels do not miss the truth
Like the bunch of the kadali banana turning downward
All the mystical accomplishments (siddhi) will come under control, See.

Commentary:
Agatthiyar emphasizes the importance of this book by telling Pulatthiyar to protect it like his life.  He says this is the epic, the complete work, there is no other book like this, the book of wisdom.  The next line may be ‘sellaadhe’ which means do not go with them, or ‘sollaadhe’ do not tell it to the wastrels.  Another interpretation is that even the words of the wastrels cannot miss this truth, it is so clear, no one can twist it.  Agatthiyar mentions a down turned bunch of banana fruit.  The sahasrara is depicted as a banana bunch by many siddhas.  This also refers to the pineal gland which secrets the divine nectar which grants all the mystical accomplishments or siddhis. 


இந்த புத்தகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்தப் புத்தகத்தை அவரது  உயிரைப்போல காக்கவேண்டும் என்று புலத்தியரிடம் அகத்தியர் கூறுகிறார்.  இந்த நூல் ஒரு காவியம் என்றும் இதைப்போல இன்னொரு நூல் இல்லை என்றும் இதுவே குரு நூல், ஞான நூல் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இதனை அடுத்த வரிக்குப் பல பொருட்களைக் கூறலாம்.  ‘செல்லதே’ என்பதை செல்லாதே (தப்பாதே யுடன் சேர்ந்திசைகிறது)  என்று கொண்டால் வீணருடன் தொடர்பை வைத்துக்கொள்ளாதே என்று பொருள்.  சொல்லாதே என்று கொண்டால் அவர்களுக்குச் சொல்லாதே என்று பொருள்.  அல்லது வீணறது சொல் அதே மெய் தப்பாதே என்று கொண்டால் வீணரது சொற்களும்கூட இதில் கூறுப்பட்ட உண்மையை மாற்றிக் கூற முடியாது,  இதில் குறிப்பிட்டவை அவ்வளவு தெளிவாக உள்ளன என்று பொருள்.  கீழ்காணும் கதலைகுலை என்பது கதலிவாழையின் குலை என்று பொருள்படும்.  சஹாராரத்தை வாழைக்குலை என்று பல சித்தர்கள் பாடியுள்ளனர்.  அந்த சக்கரம் கீழ்நோக்கித் திரும்பி அமிர்தத்தை வடிக்கும்.  இந்த அமிர்தம் எல்லா சித்திகளையும் அருளும்.  இதையே அகத்தியரும் குறிப்பிடுகிறார். 

160. Ways to get this book

Verse 160
நடக்கும் வழி
கேளப்பா புலத்தியனே தொண்டு செய்து
கிருபையுடன் நூல் கொடுத்தால் மிகவும் நன்று
வாளப்பா தனம் கொடுத்து நூல் வந்தக்கால்
மகத்துவங்கள் என்னவென்றால் ரெண்டாம் பக்ஷம்
தாளப்பா இரண்டும் விட்டுச் சண்டை போட்டு
சமத்தாக வாங்கினால் உதவாதையா
கோளப்பா திருடினால் சித்தி இல்லை
குரு நூலுக்கிது உறுதி கண்டு தேறே

Translation:
The way to act
Listen Pulatthiya!  If he gives the book
After service, it is very good
It is a sword, When the book is obtained through payment of wealth
Then the glory is only second best
It is a mere parchment, if one leaves these two methods
And obtains the book through a fight. It will be useless
Understand this.  If it is obtained by stealing then no siddhi
This is definite for this gurunool (book of wisdom), realize this.

Commentary:
Agatthiyar lists three ways in which one may attempt to possess meijnanam.  Some will serve the Guru and obtain the knowledge from him.  This is the best method.  Some may attempt to buy it by offering money, wealth.  This is only second best.  The third is the worst method, obtaining through fighting with the owners.  It will be useless, like a piece of parchment.  The last method is the most deplorable one, that of stealing it from the owners.  Agatthiyar says that if one attempts this method, one would not get any siddhi at all.  It will only earn the person a curse.  Agatthiyar swears that this is true for this book of wisdom.


மெஞ்ஞானம் என்னும் இந்த நூலை மூன்றுவிதங்களில் பெறலாம் என்கிறார் அகத்தியர்.  அவற்றில் குருவுக்கு சேவை செய்து அவரிடமிருந்து பெறுவதே மிக்க நல்லது.  அதனை அடுத்தது நூலை விலைக்கு வாங்குவது.  மூன்றாவது அதை சண்டைபோட்டுப் பெறுவது.  இது நல்ல முறையல்ல என்கிறார் அகத்தியர்.  ஆனால் இதைவிட தாழ்ந்தது அதைத் திருடுவது.  இதைத் திருடி அடைந்தால் ஒரு சித்தியும் கிட்டாது என்கிறார் அகத்தியர்.  இது சத்தியம் என்று மேலும் வலியுறுத்துகிறார்.  

Friday, 18 April 2014

159. Offer what the guru asks and seek this knowledge

Verse 159
ஈயாமல் இருந்துவிட்டால் வுகமுங் காரு
ஏற்றபடி பணிவிடைகள் எல்லாம் செய்து
செய்யாதே அணுவளவும் பொய் பேசாதே
தினந்தொறும் கால் கடுக்க நின்று காரு
ஆயாவே முகம்பார்த்துச் செபமே பண்ணு
அன்றாடம் உண்கிறதில் மூன்றில் ஒன்று
மேயாக ஐயருக்குப் பங்கிட்டீவாய்
வேண்டினது நீ கொடுத்தும் இன்னங்கேளே

Translation:
If you do not make the offering then you have to wait for an eon,
Performing all the services that are suitable
Do not say lies, even a miniscular one,
Stand steadfast everyday (with you legs paining) and wait
Looking at his face perform japa (ask for the knowledge)
One third of the daily food
You will share with him
Offering what he seeks you ask/listen somemore.

Commentary:
Agatthiyar mentioned that one has to offer dharma and service to the Guru and seek the knowledge mentioned in meijnanam.  He is elaborating on that idea in this verse.  He says that if one is not willing to offer the Guru what he asks for then one should wait for eons to get this knowledge.  It is not that the guru is greedy!  The guru seeks good and bad qualities from the disciple as offering.  He does this to prepare the disciple to be fit to receive the knowledge.  He asks for good qualities- because one has to develop them to handle this knowledge which is a practical method and bad qualities- because they have to be culled out.  

One has to have unwavering desire to attain this knowledge.  It is not a passing fad, a temporary desire.  One has to be prepared to wait for it however long it takes to get it.  Agatthiyar says that the disciple should look at the face of the guru and perform japa.  The japa here may be the request for the knowledge.  The next line is interesting.  He says that the disciple should offer 1/3 of his food to the guru.  Traditionally, disciples who live in an ashram go around with a begging bowl, collect the food offerings from householders and share it with the guru.  

Agtthiyar tells Pulathiyar that the disciple should offer everything the Guru asks for and seek the knowledge.


முந்தைய பாடலில் அகத்தியர் ஒரு சீடன் தனது குரு கேட்பவற்றை எல்லாம் தந்து அவருக்கு சேவை புரிந்து அவரிடமிருந்து மெய்ஞ்ஞானத்தில் கூறியுள்ளவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.  இவ்வாறு செய்யாவிட்டால் அவன் ஒரு யுகமளவு காத்திருக்கவேண்டும் என்கிறார்.  ஒரு குரு தனது சீடனிடமிருந்து நல்ல குணங்கள், தீய குணங்கள் ஆகிய இரண்டையும் தர்மமாகக் கேட்கிறார்.  நல்ல குணங்கள்- ஏனெனில் அவை குருவின் உதவியுடன் வளர்க்கப்படவேண்டும், தீய குணங்கள்- அவை குருவின் உதவியுடன் அழிக்கப்படவேண்டும்.  அந்த சீடன் தனது குருவின் முகத்தைப் பார்த்து ஜபம் செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இதற்குப் பொருள் அவன் குருவின் முகக் குறிப்பை அறிந்து இந்த அறிவைத் தொடர்ந்து வேண்ட வேண்டும்.  அதாவது, இந்த விருப்பம் தொடர்ந்ததாக எப்பொழுதும் உள்ளதாக இருக்கவேண்டும்.  பிக்ஷையின் மூலம் உணவைச் சேகரிக்கும் சீடன் அதில் மூன்றில் ஒரு பங்கை குருவுக்கு அளிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  ஆஸ்ரமத்தில் வாழும் சீடருக்கான விதி இது.  இவ்வாறு ஒரு சீடன் தனது குரு கேட்பவை அனைத்தையும் வழங்கி இந்த அறிவைப் பெறவேண்டும் என்கிறார் அகத்தியர். 

158. How to learn the topics discussed in this book?

Verse 158
ஆசானை அடுக்கிற விதம்
காரப்பா இந்நூலைத் திருந்தோர் பாதம்
           காரடா வருடமது பனிரெண்டாண்டு
சீரப்பா பணிவிடைகள் எல்லாம் செய்து
           சிவசிவா கேட்டதன்ம மெல்லாம் ஈய்ந்து
சாரப்பா நூல் எனக்குத் தாரு மென்று
           சற்றும் நீ கேளாதே சும்மா நில்லு
பேரப்பா அவர் மனது கனிந்து தென்றால்
           பேசாமல் நூல் கொடுத்து அருள் ஈவாரே

Translation:
Contemplate upon this book, son, in the sacred feet of the pure
              Contemplate it for twelve years
Glory, Son, doing all the services
              Siva sivaa! Offering all the dharma requested
Reach him and request, “Please grant me the book”
              Do not ask, but stand quietly
It is a boon if his heart melts
              He will quietly give the book and offer his grace.

Commentary:
Agatthiyar advises that one should approach a true guru and serve him for twelve years.  One should offer the Guru all that he asks for.  He should not ask the Guru to give him the essence of this book but should stand quietly.  When the Guru is pleased with the disciple he will grant this book to himthat this knowledge to him, and offer him his grace.  A true guru knows what is appropriate for a student at his current mental and spiritual maturity level.  One need not ask a guru to grant a particular knowledge or technique.  A guru knows.    

Scriptures say that one should remain in the gurukula for twelve years.  This is the time when the brahmachari remains with his guru learning various sciences and practicing sexual abstinence.  This helps the disciple to convert his sexual energy into constructive activities.   Agatthyar says that the disciple should offer all the dharma that the guru asks for.  There is a subtle difference between dharma and dhana.  Dhana is donation while dharma is regulations or achara, rules that one must follow depending on his position in life.  This involves physical, mental and spiritual injunctions.   One has to serve the guru with utmost sincerity surrendering his ego, pride and the ahamkara to him.  He should submit himself to the guru trusting him fully that he will lead him in the right path.  Both the physical and mental attitude of the disciple required to receive the grace of the guru is cultivated during this twelve year period of stay with the guru. 

Agatthiyar saying that one should not ask the guru for this specific book reminds us of the episode of Upakosala mentioned in Chandhogya Upanishad where Upakosala served his guru Satyakama under such arduous circumstances that even the gods took pity on him.  They came in different forms and initiated him.  The period of staying with the guru for such a long period prepares the disciple psychologically as well.  He loses his obsession towards his family, the idea of ‘this is mine’ is removed and he learns to live in a spiritual way  instead of the family way.  Living with the guru is a blessing in itself.  Gurus are realized souls and Divinity works through them.   They channel the Divine force and the disciple who lives continuously with such a guru receives this grace abundantly.  Thus, the guru is able to elevate the disciple in all the three realms, physical- by making him perform karma yoga through service to the guru and fellow disciples, mental or psychological- helping him cut delusion of ‘me and mine’ letting go of qualities such as ahamkaram, ego and false pride and spiritually- by being a channel and directing the Divine energy towards him.  The only goal of the student is to please the guru so that ‘his heart melts’ just as Agatthiyar says and he will grant the student all the knowledge and grace.


ஒரு சீடன் ஒரு உண்மையான குருவைச் சேர்ந்து அவருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சேவை புரியவேண்டும.  அவர் கேட்பான அனைத்தையும் அவருக்கு அளித்து அவர் மனம் குளிரச் செய்யவேண்டும்.  அவரிடம் எனக்கு இதைக் கற்றுத் தா, அதைக் கற்றுத் தா என்று கேட்கக் கூடாது ஏனெனில் ஒரு குருவுக்கு சீடன் இருக்கும் ஆன்மீக நிலைக்கு ஏற்ற அறிவு எது என்று தெரியும்.  அதைத் தான் அவர் அவனுக்குக் கற்றுக்கொடுப்பார்.  அதை சீடன் தெரிவிக்கவேண்டியதில்லை.  அவ்வாறு மனம் குளிர்ந்த குரு தேவையான அறிவையும் தந்து தனது அருளையும் ஈவார் என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.

மறைகள் ஒரு சீடன் ஒரு குருவுடன் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து பிரம்மச்சரியத்தை  மேற்கொண்டு, குருவுக்கு சேவை புரிய வேண்டும் என்று கூறுகின்றன.  பன்னிரண்டு ஆண்டுகளின் முக்கியத்துவம் என்ன?  சுமார் ஐந்து அல்லது ஏழு வயதில் குருகுலத்தை அடையும் ஒரு சீடன் உடலைப் பொறுத்தவரை பல மாற்றங்களைச் சந்திக்கிறான்.  அந்த சமயத்தில் பிரம்மச்சரியத்தை மேற்கொள்வது அவனுக்கு விந்து கட்டுப்பாடை, மனக்கட்டுப்பாட்டைக் கற்றுத் தருகிறது.  அகத்தியர் ஒருசீடன் தனது குரு கேட்கும் எல்லா தருமங்களையும் அவர் மனம் குளிரும் அளவுக்கு அவருக்கு சமர்ப்பிக்கவேண்டும் என்கிறார்.  அங்கு நாம் தர்மத்துக்கும் தானத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்க்கலாம்.  தானம் என்பது பொருள்களை பிறருக்கு ஈவது.  தர்மம் என்பது ஒருவர் உடல், மனம் மற்றும் ஆன்மீக தளங்களில் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்வது. இதற்கு ஒரு சீடன் தனது குருவுடன் பன்னிரண்டு ஆண்டுகள் இருப்பது அவசியமாகிறது.

 ஒரு சீடன் உடலளவில் தனது குருவுக்கு ஆஸ்ரமத்தில் சேவை புரியவேண்டு.  மன அளவில் தனது அகங்காரம், கர்வம், மமதை ஆகியவற்றை விட்டுவிட வேண்டும், தான் தனது, தன் மக்கள் போன்ற பாசங்களை விட்டுவிட வேண்டும்.  ஆன்மீக தளத்தில் அவன், தனது குருவிடமிருந்து பெறவேண்டிய அறிவுக்கு ஏற்படு தன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்து தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.   

ஒரு சீடன் தனது குருவிடம் இதைக் கற்றுத் தா அதைக் கற்றுத் தா என்று கேட்கக் கூடாது.  அந்த சீடனுக்கு அவனது மன, ஆன்மீக நிலைக்கு ஏற்ற அறிவு எது என்று ஒரு குருவுக்கு நன்றாகத் தெரியும்.  சீடன் கேட்கவேண்டியதில்லை.   சாந்தோக்கிய உபநிடதத்தில் உள்ள உபகோசலன் கதை இங்கு நினைவுக்கு வருகிறது.  உபகோசலன், சத்தியகாமர் என்ற குருவுடன் பன்னிரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து கடுமையான சேவைகளைச் செய்தான். அவனது சேவையினால் குளிர்ந்த தேவதைகள் அவனிடம் கருணை கூர்ந்து பல்வேறு உருவங்களில் வந்து அவனுக்கு உபதேசங்களை அளித்தனர்.

ஒரு குருவுடன் தங்கியிருக்கும் அனுபவமே ஒரு சீடனுக்கு வரமாகும். ஏனெனில் ஒரு உண்மையான குரு இறையுணர்வின் வடிகாலாக இருக்கிறார்.  அவர் மூலம் இறையுணர்வு உலகினுள் செயல்புரிகிறது.  இத்தகைய குருவுடன் தங்கியிருக்கும் ஒரு சீடன் இந்த தெய்வீக சக்தியை அபரிமிதமாகப் பெறுகிறான்.  இவ்வாறு ஒரு குரு தனது சீடனை உடலளவிலும்- அவனை கர்மயோகத்தைச் செய்யவைத்து, மனதளவிலும்- விருப்பு வெறுப்பு பற்றுக்களை விடச் செய்து, ஆன்மீக தளத்திலும் இறையுணர்வைப் பெற தயார் செய்கிறார்.  அந்த சீடனின் ஒரே குறிக்கோள் அந்த குருவின் மனத்தைக் குளிவிப்பது.  அப்போது அவன் பெறும் அறிவும் அருளும் அளப்பரியது.