Sunday, 31 August 2014

349. Will a mother kill her child who is poisoned?

Verse 349
ஆகாது என்று சொன்னீர் கும்ப மூர்த்தி
அறியாமல் செய்த பிழை யாரு காப்பார்
பாகையுடன் மதலைதுடை விஷடித் தக்கால்
பசுந்த பின்பு மதலையைத் தாய் கொல்ல லாமோ
வேகாமல் வெந்து நின்ற யோகி உள்ளம்
வெந்ததினால் அத்துயரம் சொன்னீரையா
சோகாதி தாகம் விட்ட மோன மூர்த்தி
துயரத்தை ஆற்றுதற்கு வழி சொல்வாயே

Translation:
Kumba moorthy!  You said it is not possible
Who will protect from faults committed unknowingly
If the thigh of the child is poisoned
When it becomes green will the mother kill the baby?
The heart of the yogi which remained cooked without being cooked
You told about that misery as it was saddened
The silent lord who has forsaken sorrow and thirst
Please tell the way to pacify the sorrow.

Commentary:
Pulatthiyar addresses Agatthiyar as Kumba moorthy.  Kumbam means kumbaka or retention of breath.  It also means the body which is popularly referred to as katam or pot or kumbam.  Agatthiyar is the Lord of this body as he takes if from material existence to the state of Divinity.  Pulatthiyar requests Agatthiyar to tell him how he could pacify his sorrow that was born from errors committed unknowingly.  He tells Agatthiyar an example, that of a child whose thigh has been poisoned.  When the thigh becomes green from the poison the mother does not kill the baby.  She tries to relieve it of the poison.  The errors or faults that are present within us is like that poison.  They will kill us slowly.  Instead of dooming us to destruction Agatthiyar should save from this situation.  Pulatthiyar’s heart is on fire due to the sorrow he feels realizing his faults.  He requests Agatthiyar to tell him the way to get over this misery. 


புலத்தியர் அகத்தியரை கும்ப மூர்த்தி என்று அழைக்கிறார்.  கும்பம் என்பது மூச்சை உள்ளே நிறுத்தும் பயிற்சியான கும்பகத்தையும் இவ்வுடலையும் குறிக்கும்.  நமது பருவுடலை சித்தர்கள் கடம் அல்லது குடம் என்று அழைக்கின்றனர்.  அந்த உடலுக்கு மூர்த்தி அகத்தியர் ஏனெனில் அவர் அதனை பருவுடல் என்ற நிலையிலிருந்து பரவுணர்வு நிலைக்கு எடுத்துச் செல்கிறார்.  புலத்தியர் அகத்தியரிடம் தனது மனம் தனது தவறுகளை எண்ணி வெந்துபோயுள்ளது, அதன் துயரத்தைத் தீர்க்கும் வழியைத் தனக்குக் கூறுமாறு வேண்டுகிறார்.  இதற்கு ஒரு உதாரணத்தையும் அவர் காட்டுகிறார்.  ஒரு குழந்தையின் தொடை நச்சுப்பட்டு பச்சையாகியுள்ளது.  அந்தக் குழந்தையின் தாய் அதற்காக அந்தக் குழந்தையைக் கொள்வதில்லை, அந்த விஷத்தைத் தான் வெளியேற்றுகிறாள்.  அகத்தியரும் புலத்தியரை அழிவை நோக்கி அனுப்பிவைக்காமல் அவரது குற்றங்களைக் களைய வேண்டும் என்று புலத்தியர் வேண்டுகிறார்.   

Friday, 29 August 2014

348. This world is your mother she will give you everything

சொல்லப்பா இவ்விடம் அது கேட்கச்
சொன்னவுடன் நெடுமூச்சாய் சோம்பி நிற்பான்
பில்லப்பா கொழுந்தில் அனல் பட்டாப் போல
பொய்மனது தான் வெதுப்பிப் பேசான் ஒன்றும்
அல்லப்பா உந்தனுக்கு உலகம் தாய்தான்
அவன் கொடுப்பதேது னக்கு அறுத்துப் பேசு
அல்லப்பா அருளித்தோர் மனம் நொந்தக்கால்
அர அரா ரவிகோடிக்காகான்என்னே

Translation:
Say it son, so it is heard here
He will remain fatigued with long breaths
Like the young grass burnt by fire
The fallacious mind burning, he will not speak
He is not for you.  The world is your mother
What can he give you?  Cut him off
If those who are gracious are saddened
He will not be rescued even until millions of suns

Translation:
Agatthiyar says that such a person, if he listens about the truth, will remain speechless.  His heart will be burning like young grass on fire.  Agatthiyar tells Pulatthiyar that this world is Pulatthiyar’s mother.  That is, she will give everything he wants, there is nothing that someone else need to give him.  Hence Pulatthiyar should cut that person down and talk to him curtly.  If a soul who is gracious is made to become sad then the person who did so cannot recover from that damage even after millions of years.


அகத்தியர் பாவி என்று குறிப்பிட்ட மனிதன் உண்மையைக் கேட்டால் அனலில் பட்ட இளம் புல்லைப் போல மனம் வெதும்பி பேசாமல் இருந்துவிடுவார்.  அவர் புலத்தியருக்குக் கொடுக்கவேண்டியது ஒன்றுமில்லை ஏனெனில் இந்த உலகமே புலத்தியருக்குத் தாய், அவள் அவருக்கு வேண்டியதைத் தருவாள்.  அதனால் அத்தகைய மனிதரிடம் வெட்டென்று பேசி அவரை விலக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  அருள் மிகுந்த ஒருவரை மற்றவர் வருத்தமுறச் செய்தால், அந்த மற்றவர் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகும் உயர் நிலையை அடைய முடியாது என்கிறார் அகத்தியர்.  

347. Do not share this knowledge even if deceitful people offer riches and service

வணங்கி அவன் வந்தாலும் முகம் பாராதே
வாழ்தனங்கள் ஈய்ந்தாலும் நயம் சொல்லாதே
இணங்கி அவன் வந்தாலும் இடம் கொடாதே
ஏவல் அவன் செய்தாலும் நீ கொள்ளாதே
துணங்கி அவன் வீடு பொருள் நாடி ஈந்தும்
சொல்பத்தில் அவன் வசனம் நீ கூறாதே
சுணங்க அவன் ஒருநாளும் உதவாக் குப்பை
தோழி அவள் துடர்ந்து வந்தால் இவ்விடம் சொல்லே

Translation:
Even if he comes to you saluting you, do not see his face
Even if he offers wealth for living, do not tell him
Even if he comes humbly, do not give him a chance
Even if he serves you, do not accept it,
Even if he offers house, wealth etc
Do not talk to him easily
He is useless garbage
If She, the friend comes following, tell her about this place.

Commentary:
Agatthiyar is continuing his advise to Pulatthiyar that he should avoid charlatans.  He tells Pulatthiyar to not reveal the content of this book even if such a person offers wealth, house, or any service.  He is nothing but garbage as he will go back to his original ways.  The last line is not clear, Agatthiyar talks about a friend, a girl.  He tells Pulatthiyar that if she comes he should tell her this place.



புலத்தியருக்குத் தனது அறிவுரையைத் தொடருகிறார் அகத்தியர்.  தீயவர்களுக்கு இந்த நூலை அவர்கள் பொருளும் வீடும் தனமும் தந்தாலும் சேவை புரிய வந்தாலும் தரவேண்டாம் ஏனெனில் அவர்கள் வெறும் குப்பை என்று அகத்தியர் கூறுகிறார்.  இப்பாடலின் கடைசி வரி தெளிவாக இல்லை.  தோழி அவள் வந்தால் அவளுக்கு இவ்விடம் சொல்லு என்கிறார் அகத்தியர். 

346. Do not share this book with the less deserving

Verse 346
பதித்தனடா இந்நூலை வெளிவிடாதே
பாவிகள்தான் வணங்கி நின்று வாசி கேட்பார்
சதிப்பனடா வாசிதனைச் சொல்லிவிட்டால்
தலைகீழாய் விழுந்தவனும் மதிக்கான் உன்னை
எதித்து உடன் வாது செய்வான்...
எவ்வளவு போடா நீ வாடா என்பான்
குதிப்புடனே விழுந்தவனும் அலுத்துப் பின்னும்
குறி அறிவோம் என்று வந்து வணங்குவானே

Translation:
I recorded son, do not reveal this book
Sinners will stand saluting and ask for vaasi
If you reveal vaasi they will plan deceit
Even the one who fell head down will not respect you
He will argue with you
“How much? Go away, you silly”- he will talk so disrespectfully
The one who fell with a jump will tire out and then
He will come to salute you saying let us know the signs.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar to not reveal this book to low lives.  Such people will show respect only until they learn vaasi yogam.  Then they will act as if they are supreme masters, they will start arguing with the guru himself, negotiating and speaking to him disrespectfully. After dancing around for sometime he will see the futility of his pride and come back asking for more. 
Agatthiyar is advising Pulatthiyar to avoid such people in the next verse.

இப்பாடலில் அகத்தியர் இந்த நூலை தீயவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்.  அவர்கள் முதலில் வணங்கி வாசியைப் பற்றி அறிந்து கொள்வார்கள்.  அதன் பிறகு தாமே பெரியவர் என்பதுபோல் குருவுடனேயே வாதம் செய்வர், மரியாதையில்லாமல் பேசுவர்.  அவ்வாறு சில நாட்கள் ஆடியபிறகு அலுத்துப் போய் மீண்டும் அருகில் வந்து வணங்கி எங்களுக்கு குறிகளைக் கற்றுக்கொடுங்கள் என்று கேட்பர்.  அத்தகைய மக்களைத் தவிர்க்குமாறு அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.

Wednesday, 27 August 2014

345. "These words are like those of Kannan" says Agatthiyar

Verse 345
சொன்னதோர் இந்நூல் போல் ஒரு நூல் இல்லை
சூதாடும் திருடருக்கு நூலீயாதே
அன்னை திரு மாதுமையாள் பாதம் நம்பி
அறிவித்தார் சதுர்முகத்தோன் பூண்மையாலே
கன்னனது சொல்போல் ஞானக் கூறு
காட்டினேன் வெளி திறந்து மெய்யோர்க்காக
பண்ணினேன் வேதாந்தத் திருட்டை எல்லாம்
பார்த்தறிந்து இந்நூலில் பதித்திட்டேனே

Translation:
There is no other book like this one revealed
Do not give the book to those who gamble and thieve
Trusting the sacred feet of the lady, the auspicious mother, Uma
The four-faced one announced it with grace
These are words of wisdom like those uttered by Kannan (Krishna)
I revealed this, explaining it explicitly, for the good ones
Knowing all that, which was stolen by Vedanta
I have recorded them in this book.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that there is no other work which is as detailed as this meijnanam and that this was revealed by the four-face after paying obesience to the sacred feet of Sakti, Uma.  Among the five faces of Siva, the fifth face is not supposed to be visible.  May that is why Agatthiyar is calling him four-faced one.  It may also be Brahma, the dispenser of knowledge.

An interesting line in this verse is, “these are words of wisdom like that of Kannan”  Agatthiyar is referring to Krishna’s Bhagavat Gita.  For those of us who wonder about the time of this composition, this should explain that it is after the the time of Bhagavat Gita, after the Mahabharata war.  One wonders whether Agatthiyar was reminded of the Mahabharata war when he instructed Pulatthiyar previously to not share it with those who gamble!

Agatthiyar adds that he has recorded all the esoteric knowledge even the Vedanta did not explain explicitly.  Thus, this work is more complete than the Vedanta and more beneficial for good souls who seek liberation.

அகத்தியர் புலத்தியரிடம் இந்த நூலைப்போல விளக்கமான நூல் வேறு இல்லை என்றும் இதை திருடர்களுக்கும் சூதாடிகளுக்கும் கொடுக்கக் கூடாது என்றும் கூறுகிறார்

இந்த நூலில் உள்ளவற்றை நான்முகன் தெய்வீக மாது, தாய் உமாவின் பாதத்தைப் பணிந்து நான்முகன் அளித்தார் என்கிறார் அகத்தியர்.  சிவனின் ஐந்து முகங்களில் ஐந்தாவது முகம் கண்ணுக்குத் தெரியாது என்று கூறுவது வழக்கம்.  அதனால் ஒருவேளை அகத்தியர் சிவனை நான்முகன் என்று கூறுகிறாரோ?  சிவன், சக்தி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சதாசிவன் ஈஸ்வரன் என்பதே சுத்த வெளிப்பாட்டின் முறையாகும்.  இவ்வாறென்றால் சக்திக்குப் பின் தோன்றிய பிரம்மன் சக்தியின் பாதத்தைப் பணிந்து இந்த அறிவை உலகுக்கு அளித்திருக்கலாம்.

இதனை அடுத்து அகத்தியர் ஒரு முக்கியமான வரியை எழுதியுள்ளார்.  அது, இந்த நூல் கண்ணனின் வார்த்தைகளைப் போல ஞானம் பொதிந்தது என்பது.  அவர் இங்கே கண்ணனின் பகவத் கீதையை நினவிகூருகிறார்.  இந்த நூலின் காலம் என்னவாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இது ஒரு குறிப்பை அளிக்கிறது, அதாவது, இந்த நூல் பகவத் கீதையின் காலத்துக்கு, மகாபாரத்தத்தின் காலத்துக்கு பிற்பட்டது என்பது.  முந்தைய வரிகளில் சூதாடிகளுடன் இந்த நூலைப் பகிரவேண்டாம் என்று அகத்தியர் கூறியது அவருக்கு மகாபாரதத்தை நினைவுபடுத்தியதோ?


தான் இந்த நூலில் வேதாந்தம் மறைத்தவற்றையும் வெளிப்படையாகக்  கூறினோம் என்ற அகத்தியரின் வார்த்தைகள், இந்த நூல் வேதந்தத்தைவிட பூரணமானது, உண்மையான தேடலை உடையவர்களுக்குப் பயனளிக்கக் கூடியது என்பதைக் காட்டுகின்றன. 

Tuesday, 26 August 2014

344. Live the Vedantic way and learn about mental worship

கேளப்பா புலத்தியனே மானதமாம் பூசை
கிருபையுடன் சொன்னனப்பாஅறிவுள்ளோர்க்கு
வாளப்பா வேதாந்த வாழ்வே அல்லால்
மற்றதல்லாம் வாருகோல் கிட்டு வாழ்வு
கோளப்பா பழமுனி நூல் கோளே கோளு
கொட்டினார் சகல முறை மறைப்பை எல்லாம்
வாளப்பா அவர் நூலில் மாந்தமாம் பூசை
மறைத்திட்டார் அதனாலே இதைச் சொன்னேனே

Translation:
Listen Pulatthiya!  Mental worship
I told with mercy for the wise
Other than the life of Vedanta
Everything else should be swept away with a broom
Contemplate the work of the ancient muni
They revealed every method in them
Still, in his book, the mental worship
He concealed it.  Hence I am saying it here.

Commentary:
Agatthiyar is referring to some ancient work which he says tells all the methods to realize the Divine.  However, that book has not explained the mental worship ritual, it concealed it.  Agatthiyar tells Pulatthiyar that hence, he is talking about it here.  Please recall Tirumular’s verse “the heart is the great temple, the body is the locus, for the merciful one the mouth is the temple entrance, the Jiva is the Sivalinga and the hidden senses are the lamp”

Agatthiyar says another interesting thing here.  He says that a life other than that lived in the vedantic way is worthtless, it should be swept away with a broom like dust.  The philosophy of the Siddhas is the Siddhanta.  One may wonder why Agatthiyar is saying Vedanta instead of Siddhanta.  The rituals that the Siddhas prescribe may be different from the rituals that the Veda prescribes.  However, the ideas that Vedanta or the terminus of the Veda presents agree with the philosophy of the Siddhas.  Hence Agatthiyar says that one should live the life prescribed by Vedanta.  The broom mentioned here may be time. Time sweeps one’s life away unless one goes beyond mere material existence.

பழ முனிவர்கள் கூறிய நூல்களின் எல்லா முறைகளையும் கூறியுள்ளார்கள் ஆனால் மானச பூஜையை அவர்கள் விளக்கவில்லை. அதனால் தான் அதை இங்கே விளக்குவதாக அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  சித்தர்கள் வெளியில் செய்யும் பூஜையைவிட உள்ளத்தில் நடத்தும் பூசையே உயர்ந்தது என்று கூறுவர்.  திருமூலரின்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே
என்ற பாடலை இங்கே நினைவுகூரவும். அகத்தியர் மேலும் மற்றொரு கருத்தை இங்கே கூறுகிறார்.  வேதாந்த வாழ்வல்லால் மற்றவை துடைப்பத்தால் பெருக்கி எறியவேண்டிய குப்பை வாழ்வு என்கிறார்.  சித்தர்களின் தத்துவம் சித்தாந்தம் அல்லவா அவர் ஏன் வேதாந்தம் என்று கூறுகிறார் என்றால், வேதாந்தம் என்பதைச் சார்ந்தே சித்தர்கள் தமது தத்துவத்தை அமைத்துள்ளனர்.  வேதாந்தம் என்பது சடங்குகள் அல்ல, அது இறைவனைப் பற்றிய அறிவு.  சித்தர்கள் கூறும் சடங்குகள் வேதம் கூறும் சடங்குகளைப் போல இல்லாதிருக்கலாம் ஆனால் அவர்கள் இறைவனைப் பற்றிக் கூறுபவை வேதத்தின் உச்சியான, முடிவான வேதாந்தத்தில் உள்ள கருத்துக்களை ஒத்துள்ளன.  இங்கு துடைப்பம் என்று கூறப்படுவது காலமாக இருக்கலாம்.  காலம் ஞானம் பெறாத வாழ்க்கையை பெருக்கி எறிகிறது

Sunday, 24 August 2014

339, 343. Who will receive these experiences and with whom should this book be shared

Verse 339
ஞானி என்றால்இது காண்பான் மற்றோர் காணார்
நல்வினை தீ வினைகள் ரெண்டும் முளைத்த தனக்கே
காணி என்ற கியானம் அக்கியானம் அங்கே
-----------------------

Verse 343
அல்லடா என்று சொல்வார் அறியா மட்டை
அடுத்து உன்னைக் கேட்டாலும் அகலத் தள்ளு
கல்லடா மனம் கொண்ட பிள்ளைக் கீவாய்
கசடர்கள் வந்தடுத்தாக்கால் நூல் காட்டாதே
புள்ளடா புலையா அது முகம் பாராதே
பூதலத்தில் நீயிருந்தால் புதுமை கேளே

Translation:
It is only the jnani who sees this, others do not see it,
The two, good and bad actions will affect them
Wisdom and ignorance will occur there.

Verse 343
They will say it is not so, the stupid, the foolish
If they ask you, ignore them.
You will offer this to one who has a firm mind
Do not show this book to the faulty
They ae evil birds, Pulayaa!  Do not see even their face
If you remain in the world, hear this, something new.

Commentary:
As before some verses are missing and these two verses are disconnected.  Verse 339 says that only those who are free of the fruits of good and bad actions, the Wise Ones will attain these experiences.  The good and bad karma will make one shuttle between wisdom and ignorance.  So these experiences will not be permanent even if they occur.

Verse 343 is also not clear.  It seems to be instructing who should receive this book and who should not.  Agatthiyar tells Pulatthiyar that this book should be offered only to the worthy. 

 இடைப்பட்ட பாடல்கள் தொலைந்துவிட்டதால் இவ்விரு பாடல்களும் தொடர்பற்று உள்ளன.  பாடல் 339ல் அகத்தியர் நல்வினை தீவினை ஆகிய இரண்டையும் கடந்த ஞானியரே மேற்கூறிய அனுபவங்களைப் பெறுவர், பிறருக்கு நல்வினை தீவினை என்று இரு வினைகளும் இருப்பதால் ஒருசமயம் ஞானம் மற்றொரு சமயம் அஞ்ஞானம் என்று இரண்டுக்கும்  இடையே ஊசலாடுவர் என்கிறார் அகத்தியர்.

பாடல் 343ல் இந்த நூலை திடமான உறுதி பெற்றோருக்கே கொடுக்கவேண்டும்.  மனதில் அழுக்கு உள்ளவர்களுக்குக் காட்டக் கூடாது என்கிறார் அவர்.  அடுத்தபாடலில் தான் ஏதோ புதிய ஒன்றைக் கூறப்போவதாகவும் அதைக் கேள் புலத்தியா என்றும் அவர் கூறுகிறார்.