Monday, 5 May 2014

212. When you see the signs learn from him the undying leg and uncooked head!

Verse 212
உண்டப்பா நாலு பதம் பெற்றோர் உண்டு
ஓஓஓ அவர் மகிமை சொல்லப் போகா
பண்டப்பா அவருடைய நடக்கை பாரு
பார்த்துகந்து ஒருபோது அடுத்துக் கேளு
அண்டப்பா சாகாத காலைக் கேளு
அப்போதே வேகாத தலையைக் கேளு
குண்டப்பா மணி ஆடும் கோணம் கேளு
குறி உரைத்தால் குரு எனவே கூர்ந்து நில்லே

Translation:
There are, Son, those who attained the four levels
O!O!O! their glory cannot be uttered
Ancient, see his behavior
Seeing it and liking it, go near him sometime and ask
Go to him and ask about the undying leg (air)
At the same time ask about the head that does not get cooked
The ball-like jewel, son, ask about the angle in which it dances
If the signs show it go to him as Guru and stand watching carefully.

Commentary:
The four padam or levels that Agatthiyar is referring to here are the four states of consciousness- the wakeful state (jagrat), dream state (svapna), deep sleep (sushupti) and the turiya state.  Agatthiyar says that one cannot describe the glory of such gurus sufficiently.  He tells Pulatthiyar to watch their behavior and get knowledge from them.  The term ‘undying air’ refers to the prana that flows through the sushumna.  The ‘uncooked head’ is when the fire of kundalini ascends to the sahasrara in the crown.  That is, Agatthiyar is telling Pulatthiyar to learn about Kundalini yogam from such gurus.  The mani that he is referring to here is the soul that appears so in the ajna cakra.  Vijnana Bhairava, a book on yoga, mentions that the soul appears in the ajna as a bead of light.  When the yogi focusses his attention on this bead it slowly disappears the the state of supreme consciousness is attained.
Agatthiyar says that one should look for signs of such gurus and approach them for wisdom.


இப்பாடலில் அகத்தியர் கூறும் நான்கு பதங்கள் நான்கு விழிப்புநிலைகளாகும்.  அவை விழிப்பு நிலை (ஜாக்ரதி), கனவு நிலை (ஸ்வப்னம்), ஆழ் உறக்க நிலை (சுஷுப்தி), மற்றும் இவையனைத்தையும் கடந்த துரியா என்பவை.  இந்த நான்கு பதங்களையும் அடைந்த குருவின் பெருமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்கிறார் அகத்தியர்.  அத்தகைய குருவைக் கண்டால் அவரை நெருங்கி அவரிடம் நிற்காத கால் அல்லது காற்றைப் பற்றியும் வேகாத தலையைப் பற்றியும் கேட்குமாறு உபதேசிக்கிறார்.  சாகாத கால் என்பது நில்லாமல் சுழுமுனையில் பயணிக்கும் பிராணன்.  வேகாத தலை என்பது குண்டலினி அக்னி சஹாஸ்ராத்தை அடைவது.  மணி என்பது விழிப்புணர்வு ஆக்ஞையை அடையும் கண்ணில் தென்படுகிறது.  இந்த மணியின் மீது ஒரு யோகி தனது கவனத்தைத் தொடர்ந்து வைத்தால் அது மெதுவாக மறைந்து பரவுணர்வு ஏற்படும் என்று விஞ்ஞான பைரவம் என்ற யோக நூல் குறிப்பிடுகிறது.  இவ்வாறு உயர்ந்த நிலையை அடைந்த குரு என்ற குறியைக் கண்டால் அவரை உணர்ந்து அவரிடம் அறிவைப் பெறவேண்டும் என்கிறார் அகத்தியர். 

No comments:

Post a Comment