Monday, 19 May 2014

231. Siva repeats his question

Verse 231

செப்பும் என்ற புசண்டமுனி முகத்தை நோக்கி
சிவன் மகிழ்ந்து ஓர்மொழி செப்புவார் கேள்
கொப்பும்என்ற யுகம் மாறிப் பிரளும் காலம்
குருநம சிவயம் எங்கே பரம்தான் எங்கே
அப்பும் என்ற பஞ்சகண தேவர் எங்கே
அயன் மாலும் சிவன் மூவர் ஆட்டம் எங்கே
ஒப்பும் இந்த யுகமாறிப் பிறந்த தெங்கே
ஓஓஓ முனி நாதர் உரை சொல்வீரே

Translation:
Looking at the face of the Pujanda muni who asked, “Please say”
Siva, happily had a conversation
“At the time when the eons change and go topsy turvy
Where is Gurunamasivaya, where is Param
Where are the gods of the five elements including water
Brahma, Vishnu and Siva- where do they act/dance
These eons- how did they emerge at different times
O!O1O! Lord of the Muni!  Please explain.”

Commentary:
Siva is repeating his querry to Pujandar in this verse.  He asks him where do Gurunamacivaya, Param, the five elements and the holy triad remain during the pralaya.  He also asks Pujandar about how the eons occur.


சிவன் புஜண்டரிடம் தனது கேள்விகளை மீண்டும் கேட்கிறார்.  பிரளயகாலத்தில் குருநமசிவயம், பரம், பஞ்சபூதங்களும் அவற்றின் தேவதைகளும் மற்றும் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் செயல்பாடு இவை என்ன ஆகின்றன, யுகங்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பது போன்ற கேள்விகளை சிவன் புஜண்டரிடம் கேட்கிறார். 

No comments:

Post a Comment