Friday, 4 July 2014

276. constant contemplation and removing the dirt in the mind

                                                           சதாகால சிந்தனை மனக்கசடு நீக்கல்
போச்சப்பா சகல பிணி தீர்ந்து போச்சு
பொருள் சுடராம் சின்மயத்தைப் புகழ்ந்து பாடு
ஏச்சப்பா ஏதும் இல்லை ஞானக் கல்வி
எளிதாமோ கரக்கிறது கடினம் மெத்த
காச்சப்பா  சுருள் நன்றாய்ப் பாலைக் காச்சி
காச்சி உரை மோர் தளித்தால் தயிராப் போச்சு
பேச்சப்பா மனக்கசடை அகற்ற வேண்டிப்
பேசினேன் காவியத்தில் பேசினேனே. 

Translation:
                                     Constant contemplation and removing the dirt in the mind
Gone Son!  All the diseases are exhausted
Sing the praise of the embodiment of wisdom, the entity, the flame,
There are no contradictions, Son, the education of wisdom
Is it easy to hide it? It is very difficult
Boil son!  Boiling the milk
Boiling it well if the curd is added it will congeal
The talk to remove the dirt of the mind,
I spoke about it in the kavya, I spoke that.

Commentary:
Agatthiyar advises Pulatthiyar to sing the praise of the Divine, the effulgence, the embodiment of wisdom.  He accepts that it is not easy to learn or comprehend the Divine.  He is says it is an arduous task that needs a lot of processing.  Like processing the milk by boiling it, adding the culture of curd and waiting for it to set, one has to thoroughly understand the knowledge imparted, put it to practice and wait for it patiently to take effect.  There is no quick and short way.  Agatthiyar says that he has talked elaborately about this and about removing the dirt in the mind in the kavya.  One wonders whether he is referring to the meijnana kaviya or the jnana kavya 1000. 


பரவுணர்வு நிலையைப் பெறுவது எளிதான காரியமல்ல என்று கூறும் அகத்தியர் புலத்தியருக்கு ஒரு உதாரணத்தின் மூலம் அதனை விளக்குகிறார். பாலை நன்கு காய்ச்சி புரை குற்றி அது தயிராகும்வரை காத்திருப்பதைப்போல இந்த உணர்வைப் பெறுவதற்கு ஒருவர் அனைத்தையும் கற்று அதைத் தனது பயிற்சியாகக் கொண்டுவந்து பிறகு அது பலனளிக்கக் காத்திருக்கவேண்டும்.  இதற்கு ஒரு குறுக்கு வழியும் கிடையாது.  இதற்கு முதல் தேவை மனதின் அழுக்குகளை அகற்றுவது.  தான் அதைப்பற்றி காவியத்தில் விரிவாகப் பேசியுள்ளதாக அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.

No comments:

Post a Comment