Tuesday, 8 July 2014

284. What Siva will show to the yogin

Verse 284
...... பூசை செய்வார்
நோக்கியே பூசைதனை எடுத்துக் கொள்வார்
கலைமொழுகி விபூதிதனைப் பூசிக் கொள்வாய்
கங்கைதனைத் தொட்டுமேல் காட்டுவார்பின்
அலையும் மனக் கசடதனை அகற்ற மாட்டார்
அர அரா உச்சி தொட்டு அணி குவாரே.

Translation:
…. They will perform worship
Seeing it he will accept worship
Swabbing the digits you will adorn the sacred ash
Touching the Ganga he will show above, then
He will not remove the dirt, the mind
Ara araa!  Touching the pinnacle he will descend.

Commentary:
This verse is also available only partially.  It is usually said that one has to remove the dirt in the mind to realize the Divine.  Here Agatthiyar says that the yogin will not remove the ‘mana kasadu’  one wonders whether he is talking about the dirt in the mind or the mind which is itself the dirt, the link with this world.  ‘kalaa’ means art forms as well as the digits of the moon.  In tantra theology there is branch called Chandra vidya which involves study of the digits of the moon.  There is also a section known as kalaavaada or kalaabedhaa which deals with the digits of the moon.  In SriCakra worship, the fifteen digits of the moon are represented as fifteen nithyas and the sixteeth digit as Lalitha Tripurasundari herself.  The fifteen nityas represent the fifteen vowels of the Sanskrit alphabet and the sixteen this the visarga. 
Experiencing the kalaa, Agatthiyar tells Pulatthiyar to adorn the sacred ash.  He says, then Siva will touch the Ganga and show above.  The Ganga may be referring to the Divine nectar that descends from uvula, and the above may be the sahasrara or the space above it called the dvadasaantha.  However, the yogin does not go beyond the body and merge with this supreme space. He holds on to his mind and descends back into the body consciousness after touching the pinnacle.  The mind (which is the dirt or the dirt in the mind) helps in this return.


இந்தப் பாடலிலும் ஒரு பகுதிதான் கிடைத்துள்ளது.  பொதுவாக மனதில் உள்ள அழுக்கை விலக்கினால் இறையுணர்வைப் பெறலாம் என்று கூறுவர்.  இங்கு அகத்தியர் மனக்கசடு என்று கூறுவது ஒருவரை சிந்திக்க வைக்கிறது.  கலைகளை மெழுகி விபூதியைப் பூசுமாறு அகத்தியர் கூறுகிறார்.  கலைகள் என்பது சந்திரனின் கலையையும் பாடல் ஆடல் போன்ற கலையையும் குறிக்கும்.  சித்தர்கள் மேற்கொள்ளும் தந்திர முறையில் சந்திர ஞான வித்யை என்று ஒரு வழிமுறை உள்ளது.  இதில் சந்திரனின் வளர்வு தேய்வை கவனிக்கும் கலாவாதம் அல்லது கலாபேதம் என்று ஒரு வழிமுறை உள்ளது.  சந்திரனின் பதினைந்து கலைகளும் பதினைந்து நித்யா தேவிகளாகவும் பதினாறாவது கலையை லலிதா திரிபுர சுந்தரியாகவும் வழிபடும் வழக்கமும் உள்ளது.  இந்த பதினைந்து தேவிகள் சம்ஸ்கிருத உயிரெழுத்துக்கள் பதினைந்தைக் குறிப்பவர்களாகவும் விசர்கம் லலிதா திரிபுரசுந்தரியாகவும் இந்த பூஜாமுறையில் கருதப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.  இப்பாடலில் அகத்தியர் இந்த முறைகளில் ஒன்றைக் குறிப்பிடுகிறார் போலும்.  இவ்வாறு செய்த பிறகு விபூதியைப் பூசிக்கொள்ளவேண்டும் என்கிறார் அகத்தியர். அப்போது சிவன் கங்கைதனைத் தொட்டுக் காட்டி மேலே காட்டுவார் என்கிறார் அகத்தியர்.  கங்கை என்பது சஹாஸ்ராரத்திலிருந்து கீழே இறங்கும் அமிர்தத்தைக் குறிப்பிடுகிறது என்று தோன்றுகிறது.  மேலே என்பது சஹாஸ்ராரத்துக்கு மேலே உள்ள பரவெளி அல்லது துவாதசாந்ததைக் குறிப்பிடுகிறது.  இவ்வாறு குண்டலினி யோகத்தின் உச்சியை அடைந்த யோகி அந்த பரவுணர்வு நிலையுடன் ஒன்றிவிடாமல் மீண்டும் தனது உடல் சார்ந்த நிலைக்குத் திரும்புகிறார்.  அதற்கு மனக்கசடு காரணமாக இருக்கிறது என்கிறார் அகத்தியர்.  இங்கே மனம் என்ற கசடா, மனத்தில் உள்ள கசடா என்ற கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment