Wednesday 30 July 2014

314. Only those burnt will feel the fire

Verse 314
ஆடப்பா புலத்தியனே இந்திர ஜாலம்
ஆயிரத்தில் வெகு நுணுக்கம் அறிந்து பாரு
போடப்பா ஜெய கண்டி புவனை கடகம்
புகட்டினேன் ஆயிரந்தான் வாலைக் கூறு
பாடப்பா வெகுபாடு ஞானம் பாடு
பட்டவர்க்கல்லோ தெரியும் மௌனக் கூறு
சூடப்பா பட்டவர்க்கே சுரணை காணும்
சூடணுகா நின்றவர்க்கு துயரம் ஏதே

Translation:
Dance Son, Pulatthiya!  The rainbow
Very subtle in the thousand, see it with knowledge
Adorn the victory necklace, the bracelet of Bhuvanai, Sakthi,
I taught, the thousand details about vaalai,
It is difficult son, very difficult the wisdom
Only those who have enjoyed will know the details of silence
Only those who are burnt will realize the heat
Where is the sorrow for those near whom the heat did not come?

Commentary:
Agatthiyar tells Pulatthiyar to enjoy the experience in the thousand.  It may be this book of thousand verses or at sahasrara.  The rainbow describes the myriad of topics, colors, experiences that he has described here. It may also refer to the ajna cakra where all the principles merge and appear with a rainbow hue. This vision marks victory over several obstacles and hence Agatthiyar is telling Pulatthiyar to adorn the victory bracelet, the bangle of the Lady of the Universe, Sakthi.  Jaya kandikai is a golden chain that is worn as a mark of victory.  Kadakam is a bracelet that is usually awarded to one who is accepted as an expert in a particular field.  Agatthiyar tells Pulatthiyar to pat himself on the back because this process is very difficult to go through.  It is testing by fire, literally!  This arduous process results in a state of silence.  Hence, Agatthiyar is telling Pulatthiyar that only those who have gone through it would know what he means by mouna yogam or the yoga of silence.  The last two lines are interesting.  They appear as examples as well as the real situation.   Agatthiyar tells Pulatthiyar that only the one who has been burnt by fire will know the heat and the one near whom the heat has not come at all.  This is also literally true as the fire here is the fire of kundalini and only those who have been burnt by it, gone through the process of yoga will know about it and not others.


இப்பாடலில் அகத்தியர் ஆயிரத்தில் இந்திரஜாலத்தை அனுபவிக்குமாறு கூறுகிறார்.  இந்திர ஜாலம் என்பது வானவில்லைப் போன்ற நிறம் மற்றும் மாயவித்தையைக் குறிக்கும்.  விழிப்புணர்வு ஆக்ஞையைஅடையும்போது எல்லா தத்துவங்களும் ஒன்றாகி வானவில்லின் நிறத்துடன் தோன்றும்.  ஆயிரம் என்பது ஆயிரம் பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பையும் குறிக்கலாம்.  இந்த நிலையை அடைவது என்பது பெரும் வெற்றி, அதனால் அதை ஜெய கண்டிகை அல்லது வெற்றி மாலையை அணிந்து கொண்டாடவேண்டும் என்றும் கடகம் அணிந்து கொண்டாடவேண்டும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  இங்கு மாலை என்னும்போது மாத்ருகா மாலையான ஐம்பத்தொரு அட்சரங்கள் கொண்ட மாலையையும் அதாவது எல்லா தத்துவங்களையும் வெற்றி கொண்ட நிலையையும் குறிக்கலாம்.  கடகம் என்பது வட்டவடிவமான ஆபரணம்.  இதைக் கையில் அணிவர்.  இது குண்டலினி சக்தி வட்டத்தைப் போல மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை சுழலுவதையும் குறிக்கலாம்.  தான் இந்த ஆயிரத்தில் வாலையைப் பற்றிய விவரங்களைக் கூறியுள்ளதாகவும் இவ்வாறு மிகக் கடினமான செயலைப் புரிந்து வெற்றியடைந்த யோகியே மௌனத்தின் மதிப்பை அறிவார் என்கிறார் அவர்.  இதை விளக்க அவர் நெருப்பின் சூடு பட்டவர்களே அந்த வெப்பத்தை உணருவர் அந்த நெருப்பு நெருங்காதவர்க்கு இதைப் பற்றித் தெரியாது என்கிறார்.  இது குண்டலினி நெருப்புக்கும் பொருந்தும். 

No comments:

Post a Comment