Verse
301
வெடித்துப்போம்
புலத்தியனே பயந்து கேளாய்
வீண்
இடியும் மண் கரையும் விழலாய்ப் போகும்
பிடித்துப்
போய் காலன் உன்னைக் குத்திக் கொள்வான்
பூரணம்தான்
சாக்ஷியாய்ப் புகன்றேன் உண்மை
மடித்துப்
போம் வந்த பொருள் நிலை நில்லாது
வாய்பிலுக்கால்
நூல் பறித்தால் எல்லாம் போச்சு
கடித்துப்
பார் நூலதனை வெளிவிடாதே
காட்டாதே
புலத்தியனே ஞானம் தானே.
Translation:
It
will explode, Pulatthiya! Hear with
fear/care
Unnecessary,
the sand bank will brake and become useless
God
of death will take you away and kill you through piercing
I
am saying this truth, with the fully complete as the witness
Everything
will die, any material gained will not last
If the
book is grabed through verbal expertise everything is lost
See
carefully, do not reveal the book
Do not
show it, Pulathiya! The wisdom.
Commentary:
Agatthiyar
is swearing by the Divine that what he is saying is true. If one tries to get this book through wrong
means one’s head will explode. It will
be like a sand bank that will dissolve and be lost over time. One will meet a very nasty death due to the curse. Any material gained will not lost. So one should not try to get it through
verabal magic but through sincere effort.
Agathiyar advises Pulathiyar to no reveal it or expose the wisdom to the
wrong person.
அகத்தியர்
தான் கூறுவது உண்மையே என்று இறைவன் சாட்சியாகக் கூறுகிறார். ஒருவர் தவறான முறையில் இந்த நூலைப் பெற
முனைந்தால் காலன் அவருக்குக் கொடூர மரணத்தைத் தருவான். இதனால் பெற்ற பொருள் எதுவும் தங்காது. ஞானமும் மண் கரையைப் போல நாளடைவில்
கரைந்துவிடும். அதனால் ஒருவர் வாய் ஜாலத்தால்
இந்த அறிவைப் பெற முனையாது விசுவாசுத்துடன் இதைப் பெற முயற்சிக்கவேண்டும். இந்த ஞானத்தைத் தவறானவருக்கு வெளிவிட வேண்டாம்
என்று அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.
No comments:
Post a Comment