Sunday 20 July 2014

297. I have shown you everything here

Verse 297

வெளிவிட்டேன் இத்தனை நாள் ஒளித்த தெல்லாம்
மெய்விளம்பிக் கூறிவிட்டேன் இந்த ஞானம்
பளிவிட்டுப் போகாது இந்த ஞானம்
பார்த்தவர்க்கு வெகு சுளுவு பரிசு காணும்
சளி தொட்டு சளி அதனை முறிப்பார் போல
சண்ணி விட்டேன் கற்பமொரு ஞானக் கூறே
வெளி விட்டுத் தீர்த்தனடா பத்து நூறும்
வைத்தோர்க்கு வெகு சுளுவு பார்த்துத் தேறே

Translation:
I revealed all that, which were hidden so long
I told the truth.  This wisdom
Will not lose its grace.  This wisdom
It is easy for those who see it,  the prize will be attained
Like touching the phlegm and removing it,
I have told this.  Karpam is a part of the wisdom
I revealed everything openly, the ten and hundred
For those who keep it in their minds, it is very easy.  See it and become an expert.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that he has revealed all the knowledge that was hidden from people so long.  He adds that for those who see it, understand it, it is will appear very easy.  Like those who address the phlegm and remove it, he has addressed all the evil and has tried to remove it.  Karpam is a medicinal preparation that the Siddhas recommend for serious pursuant of realization.  Agatthiyar has mentioned elsewhere that if one does not consume and practice pranayama alone, one is sure to die.  The body needs to be conditioned to handle the energy changes.  Hence, the karpam is also a component of wisdom, realization.  Agatthiyar concludes this verse by saying that he has revealed all these in the ten hundreds or in the thousand verses.  One cannot help feel sad that the rest of this work is not available to us. 


தான் இதுவரை உலகோரின் கண்களிலிருந்து ஒளிந்திருந்த ஞானத்தை வெளிப்படையாக இந்த பத்து நூறு அல்லது ஆயிரம் பாடல்களில் வெளியிட்டுள்ளதாக அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.  சளித் தொல்லையால் திண்டாடுபவர் அதை சிந்தி தொட்டு அழிப்பதுபோல், கெட்டவைகளை அகத்தியர் இங்கே தொட்டுக்காட்டி நமக்கு வழிகாட்டியுள்ளார். இவ்வாறு வெளிப்படையாக கூறப்பட்டுள்ள இந்த நூலைக் கருத்தில் கொள்பவர்களுக்கு ஞானம் பெறுவது என்பது வெகு சுளுவு என்கிறார் அவர்.

No comments:

Post a Comment