Tuesday, 1 July 2014

275. All of you say "Om Agattheesaaya namaha" says Agatthiyan!

Verse 275
நாடப்பா அகத்தீசர் என்று கூறு
நடுக்கம் வந்தால் என் மேலே பழியைப் போடு
கூடப்பா என் குருவே என்று கூடு
கும்பமுனி குழந்தை என்றே விருது நாட்டு
பாடப்பா என்புகழை பரிந்து பாடு
பாரத்திலே உனதிடுக்கம் தீர்ப்போம் கண்டாய்
தேடப்பா சிவ வாசி ஞானியோரை
தேடினால் உனது கர்மம் தீர்ந்து போச்சே
Translation:
Seek son!  Say Agattheesaa!
When you get shivering/shaking blame it on me
Join son!  Join me calling “Oh! My Guru”
Establish boldly that you are Kumbamuni’s child
Sing my glory with happiness and grace
We will solve your problems in the world
Seek Siva vaasi jnani
If you search for them, your karma are exhausted.

Commentary:
This verse which seems as an advice for Pulatthiyar seems to be Agatthiyar’s instruction for all of us.  He says, “Call out to me Agatheesaa!  And come to me saying Oh my Guru.  Tell everyone boldly that you are my child.  Sing my glory happily and with mercy, I will solve all your problems.  Seek wise souls who are Siva vaasi jnani and all your karma will be exhausted.”
What a blessing!  Om Agattheesaaya namaha!


புலத்தியருக்கு அறிவுரையாகக் காணப்படும் இப்பாடலின் மூலம் நமக்கும் அகத்தியர் ஒரு பெரிய வழிமுறையைக் கற்றுக்கொடுக்கிறார்.  அவர் நம்மிடம், “ஓ!  அகத்தீசா!  என் குருவே என்று அவரை அழைத்தவாறு அவர் அருகில் வருமாறும் உலகில் அனைவரிடமும் “நான் அகத்தியரின் குழந்தை” என்று ஆணித்தரமாகக் கூறுமாறும் அவரது புகழை வாயார பாடுமாறும் அவர் நமது கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்துவிடுவார் என்றும் சிவ வாசி ஞானிகளை நாம் தேடவேண்டும் என்றும் அவ்வாறு தேடினால் நமது கர்மங்கள் அனைத்தும் தொலைந்துவிடும் என்றும் கூறுகிறார். எத்தகைய ஒரு ஆசி இது!  ஓம் அகதீசாய நமஹ!

9 comments:

  1. அய்யா வணக்கம் நான் திவிர சிவன் பக்தன் நான் சிவனை ம் அகத்தியரையும் காண நினைப்பது என் லச்சியம் ஆனால் என்னால் அருகில் உள்ள அத்திரி மலைக்கு கூட போகமுடியவில்லை ஆண்டவன் சோதனைக்கு பிறகே காட்சி தருவார் என நம்பி சோதனை ம் கனவாக நினைத்து வாழ்ந்து வருகிறேன் இறைவனை காணும் முன்பே இறந்துபோவேன் என பயமாக உள்ளது நான் வாங்கிய கடன் என் கழுத்தை இருக்குகிறது கடன் வாங்கினால் சாகவேண்டியது தானேனு நினைப்பிண்க கடன் எனக்கு வந்தது நண்பரின் நம்பிக்கை துரோகத்தால் என்னிடம் இருப்பது தர்மத்ுக்காக செலவு செய்தேன் இப்போதும் சம்பாதிப்பதில் இல்லாதவர் கேட்டால் இல்லை என கூறாமல் இல்லாதவர்களுக்கு கொடுத்த்து உதவுவேன் ஆனால் இப்போது வருமானத்துக்கு வழி இல்லாமல் தவிக்குறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நிலையைக் கேட்க வருத்தமாக இருக்கிறது. கல்லாரில் உள்ள அகத்தியர் ஆஸ்ரமத்துக்குச் செல்லுங்கள். அங்கு தவயோகி தங்கராஜன் அடிகள் உங்களுக்கு அகத்தியர் ஜீவ நாடியின் உதவியுடன் தகுந்த பரிகாரத்தைச் சொல்லுவார். அகத்தியரும் சிவனும் ஒருவரையும் கை விடுவதில்லை. நம்பிக்கையுடன் இருங்கள்.

      Delete
    2. அழைத்தால் அக்கணமே வந்து அருள் செய்வேன் அஞ்சேல்....என்று உரைத்த என் தந்தை அகத்தியனையும் அவரின் குரு சிவனையும் நம்புங்கள் நிச்சயம் கவலைகள் மறையும்....இந்த வரும் வருடம் அகத்தியரின் அளவற்ற கருணையினால் நல்ல ஆண்டாக அமையும்...வாழ்க வளமுடன்

      Delete
  2. Where to find true agastya Shiva vaasi jnani today

    ReplyDelete
  3. There is one Mr. Raja Krishnamurthy (he is in fb) who teaches vaasi yogam. I see that you live in Bangalore. There is one Mr. Maniganda Ranganathan who runs Siddha Martial arts school in Kammanahalli. He had posted some photos a while ago about a vaasi yogi. May be you can contact him through fb

    ReplyDelete
  4. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய குருவாக அகத்தியர் உள்ளார்.

    ReplyDelete