Tuesday, 22 July 2014

302. Kaalai, maalai, thaanam

Verse 302

காலை மாலை
ஞானம் என்ன வென்றாக்கால் சுழினை ஞானம்
நாட்டினபின் ஞானம் என்ன காலை மாலை
ஈனம் என்று எண்ணி எண்ணி உலகோரையா
இறந்தார்கள் பெரியோர்கள் மகிழ்ந்த செய்கை
தானம் என்ன அது தானம் சமைந்த பிரமம்
சதா நித்தம் உன்னிடத்தில் விளைந்த கோலம்
பானம் என்ன முப்பாலே பான பானம்
பார்த்தறிநீ காலை சிவ மாலை தானே.

Translation:
If asked what is jnana, it is the wisdom of the whorl
After establishing this, what is wisdom. Morning and evening,
The worldly, thinking it lowly,
Died.  This is the action which gladdened the great souls.
What is ‘taanam’ (philanthropy/self, aham)? This is the Brahmam which remained as Self/aham
This is your eternal form that arose in you,
Drink, the best drink is the ‘muppaal’
You see and realize, the vital air/morning, Siva’ garland/ evening of consciousness, is this.

Commentary:
This verse has interesting meanings for the words ‘kaalai and maalai’. Kaali, generally means day and maalai, the evening. It also means the foot and Mal or the embodiment of maya. Kaalai also means vital breath. Agatthiyar says that the wisdom offered by the meijnanam is the supreme wisdom. Worldly people thoughly only about the lowly ‘kaalai and maalai’ the ordinary day and evening. In the end they meet their death as their lifespan marked by ‘kaalai and maali’ gets exhausted. It may also mean that they thought lowly about the vital breath or the sacred feet of the Lord and about Maal or the one who controls the maya and met their death in the end. However, great souls realize what ‘kaalai and maalai’ mean and they “consume” or experience the triple paal. Triple paal means pranayama where the breath flows through the surya, chandra and agni nadi. This process will take them towards a deathless state, a state beyond time and its divisions. They will realize the ‘taan+am’ or the nature of aham or Self. There is a play of the word ‘taanam’ which normally means philanthropy. thaanam also means one's locus, sthaanam. The soul's locus is at the supreme space or vetta veli. This is going beyond the limitations of space. When one realizes one’s true nature, about aham, one will realize the nature of the prana or ‘kaal’ and the nature of ‘siva maalai’ which means the garland of consciousness, the garland of letters or matruka mala which indicates different principles and depicted on the six cakras. It is also the garland, the prana and kundalini sakthi that travels from muladhara to sahasrara and returns, like a garland. It may also mean siva's maya that causes the limitations of time and space.


இப்பாடலில் அகத்தியர் காலை மாலை என்ற இரு சொற்களைப் பல்வேறு பொருட்களில் உபயோகித்துள்ளார். பொதுவாக காலை என்பது பகல் பொழுதையும் மாலை என்பது சாயங்காலத்தையும் குறிக்கும். சுழினை அல்லது குண்டலினியைப் பற்றிய ஞானமே மிக உயர்ந்த ஞானம் என்று கூறும் அகத்தியர் உலக மக்கள் காலை மாலை என்பதைப் பற்றித் தவறாக, அது ஒரு காலத்தைக் குறிப்பது என்று கருதி முடிவில் இறந்தபோகிறார்கள். ஆனால், காலை அல்லது பிராணனையும் மாலையும் அல்லது மாயையின் அதிபதியான இறைவனைப் பற்றியும் அறிந்த உயர்ந்தோர் இதனால் மகிழ்வர். அகத்தியர் அடுத்து தானம் என்ற சொல்லை இரு பொருட்களில் உபயோகிக்கிறார். தானம் என்பது ஒன்றைப் பிறருக்குக் கொடுப்பது மற்றும் தான்+அம் அல்லது அஹம் என்றும் பொருள்படும். இந்த அஹம் அல்லது தான் என்னும் உணர்வே நம்முள் இருக்கும் பரவுணர்வு, அதுவே நமது உண்மையான சொரூபம். தானம் என்பது ஸ்தானம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையின் தமிழாக்கமும் ஆகும். ஜீவனின் இருப்பிடம் பரவெளி, அது காலத்தைக் கடந்தது. குண்டலினி யோகத்தின் முக்கிய குறிக்கோள் காலம் மற்றும் தேசம் என்ற எல்லைகளைக் கடப்பது. இந்த குறிக்கோளை அறிந்தவர் முப்பால் என்பப்படும் மூன்று நாடிகளில் பிராணனைச் செலுத்துவதான பிராணாயாமத்தைச் செய்வர். அதாவது சூரிய நாடி சந்திர நாடி மற்றும் அக்னி நாடிகளில் பிராணனைச் செலுத்தி அமிர்தரசம் உண்ணுவர். பிறவா வரம் அளிக்கும் அது அவரை கால தேச எல்லைகளைக் கடக்க வைக்கும்.


இவ்வாறு அனுபவிப்பவர்கள் காலைப் பற்றியும்/பிராணனைப் பற்றியும் சிவமாலை எனப்படும் சிவனின் மாயையைப் பற்றியும் அல்லது மாத்ருகா மாலை எனப்படும் மாலையைப் போல உள்ள தத்துவத்தையும், பிராணனும் குண்டலினி சக்தியும் ஒரு மாலையைப் போல மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரை பயணிப்பதையும் உணருவர் என்கிறார் அகத்தியர். 

No comments:

Post a Comment