Saturday, 12 July 2014

291. What the Asaan would say

Verse 291
பசுந்த மண் தண்ணீரின் வகை
  பசுந்த மண்ணும் தண்ணீரும் காணும் காலம்
பாழ்த்த ஜடம் மாயது வலத்துப் போகும்
இசைந்த மொழி ஆயிரத்து இருநூற்றுள்ளே
இசைந்திட்டேன் வெளி திறந்து அந்த வாழ்க்கை
பிசைந்த மண்ணும் தண்ணீரும் நாடிப் பூசி
பேசாதே ஆசான் சொல் செய்கை ஆகும்
கசிந்த மண்ணும் தண்ணீரும் விடுத்தாயானால்
கால் அசந்து நீ மடிவாய் கண்டு கொள்ளே

Translation:
At the time when the verdant soil and water come together
The insentient matter will go to the maya
I sang about this in
The thousand and two hundred, revealing it openly
Seeking the clay mixed well and the water together
Do not talk, the words of the aasaan will turn into action
If you leave the oozing soil and the water
With the leg/air tiring, you will die, see it.

Commentary:
In this verse, Agatthiyar is describing how a life comes into existence. The water and the soil signify man and the woman as the semen of the man (water element) comes together with the womb (soil where the fetus grows) of the woman to bring about a life.  The insentient entities are principles or tattva.  They are 36 in number (24 atma tattva- karmendriya, jnanendriya, 10 objects of these indriya, four modifications of the mind, 5- vidya tattva- kaala, niyathi, kalaa, vidya and araaga, and the 5 siva tattva- siva, sakti, sadhakhya, isvara and sadh vidya)  These principles are not sentient entities (the siva tattva is different from Siva).  This is the secret of a birth.  Agatthiyar says that following the upadesa of a teacher, one should leave these principles behind and remain in a state called turiyatheetha.  In this state even the prana (kaal means air here) does not function.  The soul remains in a state called Jiva turiya without any action (leg tiring means inactive state). In that state even the I- consciousness dies.  Hence, he says YOU will die.   

அகத்தியர் தான் தண்ணீரைப் பற்றியும் மண்ணைப் பற்றியும் தனது 1200 பாடல்கள் தொகுப்பில் பாடியுள்ளதாகவும் அவை இரண்டும் ஒன்றாகும் காலம் ஜடமான தேகம் மாயையால் ஏற்படுகிறது என்றும் கூறுகிறார்.  இந்த இரண்டைப் பற்றியும் கூறுவது ஆசானே என்கிறார் அவர். இந்த மண்ணையும் நீரையும் விட்டுவிட்டால் “கால்” அசந்து மடிவாய் என்கிறார் அகத்தியர்.  கால் என்பது கால்களையும் பிராணனையும் குறிக்கும்.  மண்ணையும் நீரையும், அதாவது, விந்தும் கருப்பையும் சேர்வதை விட்டுவிட்டால், பிறவி ஏற்படுவதைத் தடுத்துவிட்டால் “நான்” என்னும் அளவுக்கு உட்பட்ட நிலை மறைந்து பரவுணர்வைப் பெறலாம் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment