Verse 278
குறித்த இடம் பிரபை ஒளி வீசும் அப்பா
கூடுவாய் உன்னறிவால் சுடரின் உள்ளே
பொறி காண பொறி சிதறி விரிந்து காணும்
பூந்தக்கால் பூரணமும் கூடப் பேசும்
வெறி காதல் கிரி வந்துதூக்கும் தூக்கும்
முன் ஏதோ பின் ஏதோ லாட மேது
பறிக்காத மலர் ஏறிப் பரித்தாயானால்
பாலகனே நீயும் ஒரு ரிஷி ஆவாயே
Translation:
In the place marked, the aura will glow,
You will merge with the help of your mind, withing the flame,
When the spark is seen, it will split and expand
When entered, the fully complete will speak (with you).
The loving mountain will come and lift, lift.
Which is the front, which is the back, which is the lalaata,
If you pluck the unplucked flower,
Son! You will also become a rishi.
Commentary:
The place marked may be the ajna cakra where the flame, the flame
of consciousness, the atma is seen. One
should merge with it with the help of the knowledge that he learned so
far. This is the actual experience of
the textual knowledge. “giri” is the
mountain. Agatthiyar may be referring to
the Divine, of the state of supreme consciousness that raises one from the
limited state to unlimited state. Atma
anubhava becomes paramatma anubhava.
Hence, the spinal cord is called is Mount Meru. Consciousness moves from ajna to
sahasrara. Agatthiyar says “which is the
front, which is the back and which is the lalata”. He is referring to the cakras between ajna
and sahasrara. The lalata cakra is that
found a little above the ajna, the front is the ajna and the back is the indu
or bindu cakra. “Plucking the unplucked
flower” means raising the consciousness through the cakra, the lotuses. Agatthiyar says that one will become a
rishi. A rishi is of the highest status
compared to tapasvi and yogi.
Amarakosham defines a rishi as “the one who speaks only the truth.”
Scriptures says that one specific Manu rules the world. Along with Vishnu and
Indra the Rishis and their sons are born anew.
Agatthiyar has mentioned in a previous verse where Kakapujandar tells
Vasishta that he went back and forth several times before.
குறித்த இடம் என்பது ஆக்ஞை சக்கரம்.
அங்கே ஆத்ம ஜோதி காட்சியளிக்கிறது.
அதை ஒருவர் தான் பெற்ற அறிவினால் உணர்ந்து கூடவேண்டும். இதுவே ஏட்டுக்கல்வியின் நேரிடை அனுபவம். அப்போது கிரி வந்து ஒருவரைத் தூக்கும்
என்கிறார் அகத்தியர். கிரி என்றால்
மலை. அது பரவுணர்வைக் குறிக்கும். ஆத்மவுணர்வைப் பெற்ற அந்த யோகி பரவுணர்வு
நிலைக்கு தூக்கப்படுகிறார். அப்போது முன்
எது பின் எது லலாடம் எது என்கிறார் அகத்தியர்.
முன் என்பது ஆக்ஞா சக்கரத்தையும் பின் என்பது இந்து அல்லது பிந்து
சக்கரத்தையும் லலாடம் என்பது ஆக்ஞைக்கு மேலே உள்ள சக்கரத்தையும் குறிக்கும். அப்போது அந்த யோகி பறிக்காத மலரைப் பறித்தால்
ரிஷியாவார் என்கிறார் அகத்தியர். பறிக்காத
மலர் என்பது தாமரை மலரைப் போலக் குறிக்கப்படும் சக்கரமாகும். அதாவது தனது விழிப்புணர்வை சஹாஸ்ராரத்துக்கு இந்து
சக்கரம் ஆக்ஞை லலாட சக்கரம் ஆகியவற்றின் வழியாக ஏற்றும்போது அவர் ரிஷி நிலையை
அடைகிறார். ரிஷி என்பது தபஸ்வி, யோகி
ஆகியவரினும் உயர்ந்த நிலை. அமரகோசம் ரிஷி
என்பவர் சத்தியவாசி அதாவது சத்தியத்தையே பேசுபவர் என்று கூறுகிறது. ஒவ்வொரு
மன்வந்திரத்திலும் ஒரு மனு ஆட்சி செய்வார் என்றும் விஷ்ணு, இந்திரன், ரிஷிகள்
மற்றும் அவர் புதல்வர்கள் மீண்டும் பிறப்பர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. நாம் முந்தைய ஒரு பாடலில் காகபுசண்டர்
வசிஷ்டரிடம் நீர் மீண்டும் மீண்டும் பிறந்து இங்கு வருகிறார் என்று கூறுவதைப்
பார்த்தோம்.
No comments:
Post a Comment