Tuesday 15 July 2014

294. Sambhavi mudra and experience of Parama Kailasa

போற்றப்பா பூரணத்தைத் தினமும் மைந்தா
புத்தி மனம் நன்றாகப் பொருந்தி நில்லு
சாற்றப்பா வாடாத மாலை பூண்டு
சந்திர புஷ் காரணியிலே ஸ்நானம் பண்ணி
ஏற்றப்பா தினந்தோறும் சுழியில் கண்ணை
இருட்டாய் வந்தாலும் விலகிப் போகும்
பார்த்தப்பா தினந்தோறும் மகிழ்ச்சி பூணு
பரம கைலாசம் அதில் பரிந்து நில்லே

Translation:
Son! Praise the fully complete daily
Remain with the mind and buddhi fixed firmly
Adorn the garland which never withers
Bathing in the Chandra pushkarni
Raise it daily, in the whorl, the eye
Even if it appears dark it will go away
Seeing this daily, Son, become happy
Remain with grace in the Supreme Kailash.

Commentary:
This verse is an explanation of the vaasi yogam.  Agattthiyar begins his instruction by telling Pulatthiyar to eulogize the Divine first with his mind firmly focused on it.  The garland that never withers are the cakras.  The cakras adorn the various letters of the Sanskrit alphabet in a garland-like fashion.  It is called matrika mala.  The breath flows up and down through these cakra like a garland. Chandra pushkarni represents the amrit or divine nectar that descends from the sahasrara.  The whorl or suzhi is the ajna cakra which called suzhi munai or the end or tip of the whorl.  Agatthiyar is talking about the sambhavi mudra of holding the eye focused at the ajna cakra.  The eye will experience a darkness when it is held so.  The Siddhas call the ajna cakra as the black cave, stone cave.  When the consciousness is raised to the ajna then it follows the path upto sahasrara or the parama kailasa.


இப்பாடலில் அகத்தியர் புலத்தியருக்கு எவ்வாறு கவனத்தை ஆக்ஞாவில் குவிப்பது என்று விளக்குகிறார்.  பூரணமான இறைவனை புத்தியும் மனமும் பொருந்திய நிலையில் போற்றி, வாடாத மாலையான சக்கரங்களை அல்லது தாமரை மலர் மாலையை அதற்கு சூட்டுமாறு அகத்தியர் கூறிகிறார்.  தாமரை மலரைப் போல குறிக்கப்படும் சக்கரங்களின் இதழ்களில் சம்ஸ்கிருத மொழியின் எழுத்துக்கள் குறிக்கப்படுகின்றன.  இவை பல தத்துவங்களைக் குறிக்கின்றன.  இதை மாத்ருகா மாலா அல்லது எழுத்துக்களால், தத்துவங்களால் ஆன மாலை என்கின்றனர்.  அதன் பிறகு சந்திரபுஷ்கரணியில் நீராடி கண்களை சுழியில் குவிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  சந்திர புஷ்கரனை என்பது உண்ணாக்கிலிருந்து ஊறும் அமிர்தம்.  இதைப் பருகி புலத்தியர் கண்களை சாம்பவி முத்திரையில் அதாவது, மேலே குவிக்கவேண்டும் என்றும் அப்போது இருட்டு தோன்றினாலும் அது விலகி விடும் என்கிறார் அகத்தியர்.  சித்தர்கள் ஆக்ஞையை கருங்குகை அல்லது கல்குகை என்று அழைக்கின்றனர்.  இவ்வாறு விழிப்புணர்வை ஆக்ஞைக்கு உயர்த்தினால் அது சஹஸ்ராரத்த்துக்கு அதாவது பரம கைலாயத்தை அடைந்து பெரும் இன்பநிலையை அளிக்கும் என்கிறார் அகத்தியர். 

No comments:

Post a Comment