Thursday 31 July 2014

315. Diamond, her form is that of diamond

Verse 315
துயரம் என்றால் வெகு துயரம் மாது நேர்மை
சொல்லவென்றால் என்னாலே தள்ளாதப்பா
வயிரம் என்றால் வயிரமடா மணியின் கோலம்
வைத்தனடா புத்திமான் கண்டு கொள்வான்
ஆயிரம் என்ற புருவந்தான் போவென்றக்கால்
அம்மனது கம்பக் கூற்ற னந்தம் உண்டு
தயிர் மாய மனோன்மணிப் பெண் ஏறி ஆட
.........             ..........    ......
(85வது ஏடு மூலத்தில் இல்லை)

Translation:
Misery, it is sorrow, the state of the lady,
I do not have the energy to tell you,
Diamond, the form of the jewel is that of diamond
I placed, the wise will see it,
As thousand, if one goes to the brow
The bliss of ‘amman’s’ movement is available
The magical lady, Manonmani, to climb up and dance
…….   ………    …………..
(85th palm leaf is lost in the original)

Commentary:
Agatthiyar says that describing the status of the Lady, the state where the consciousness ascends to the ajna cakra or middle of the brow is very difficult to describe.  Attaining it is even more difficult.  He says even he does not have the energy to describe it.  It is not that Agatthiyar lacks the energy.  To be able to describe it so much in detail that we with our limited knowledge can get a glimpse of it is an almost impossible task that needs a lot of time and energy.  He says further that the form of Manonmani, the Kundalini Sakti at the middle of the brow is like that of a diamond.  Yoga books say that the jewel or the mani that the yogin experiences at the ajna is like a six faced diamond.  This is the ‘shanmugam’.  Agatthiyar adds that he has placed this information in the thousand and the wise will see it, realize it.  Agatthiyar says that ‘if one goes to the eyebrow which is ayiram’.  Tamil dictionary gives the meaning for ayiram as ‘kanda sarkkarai’ or the candied sugar.  Agatthiyar may mean the sweetness of divine nectar that flows from above when the yogin reaches this state.  He says that in this state one will experience the ‘kampa kootthu’ of ‘amman’.  Amman is Sakthi.  Kampam has several meanings.  Generally it means pillar, here the pillar is sushumna nadi along which kundalini sakthi dances with immense glory.  The yogin experiences the bliss that occurs in this state.  Kampam also means movement.  The movement is the dance of the Divine, of kundalini sakthi.  The yogin will experience the ‘aananda koothu’ or ‘Ananda thandavam’ of the Divine.  Kampam has a third meaning.  ‘anukampa’ in Sanskrit means immense mercy.  Here kampa means the bliss that Sakthi grants to the yogi due her immense mercy will be experienced here.
Unfortunately the last line in this verse and the next four verses are missing in the original.

இப்பாடலில் அகத்தியர் வாலை அல்லது குண்டலினி சக்தி அனுபவத்தை விளக்குகிறார்.  சிறு குழந்தைக்கு விளக்குவதைப் போல அவர் இதுவரை நாம் அனுபவித்த பாடல்களில் சிறிது சிறிதாக இந்த மகத்தான அனுபவத்தை நமக்குக் கூறுகிறார்.  ஒரு குண்டலினி யோகி தனது விழிப்புணர்வை ஆக்ஞாவுக்கு ஏற்றுவது என்பது மிகக் கடினமான செயல் என்கிறார் அவர்.  அதை விளக்க தன்னாலும் இயலாது, தனக்கு அதற்கு சக்தியில்லை என்று அவர் கூறுகிறார்.  அகத்தியருக்கு சக்தி இல்லை என்பது உண்மையாக இருக்கமுடியாது.  நாம் அதைப் புரிந்துகொள்ளக் கூடிய அளவுக்கு அதை விளக்கவேண்டும் என்றால் அதற்கு மிக அதிக நேரமும் சக்தியும் வேண்டும் என்றே பொருள். 

இதனை அடுத்து அவர் ஆக்ஞையில் குண்டலினி சக்தி எவ்வாறு காட்சியளிக்கிறாள் என்று கூறுகிறார்.  அவளது உருவம் வைரத்தைப் போன்றது என்கிறார் அவர்.  ஆக்ஞையில் காணப்படும் மணி ஆறு முகங்களைக் கொண்ட பட்டை தீட்டப்பட்ட வைரத்தைப் போல ஜொலிக்கும் என்று யோக நூல்கள் கூறுகின்றன.  இதையே “சண்முகம்” என்று யோகம் அழைக்கிறது.  இந்த வைரத்தைப் பற்றிய விவரங்களைத் தான் ஆயிரத்தில் வைத்துள்ளதாகவும் அறிவுள்ளவர்கள் அதைக் காண்பர் என்றும் அகத்தியர் கூறுகிறார்.  அதனால் இந்த மெய்ஞ்ஞானம் மேற்போக்காகப் படிக்கக் கூடிய நூல் அன்று.  ஒருவர் இதைப் பலமுறை படித்து இதில் கூறப்பட்டவற்றை மனதுள் தியானம் செய்து உணர வேண்டும் என்பது தெளிவாகிறது.   

இதனை அடுத்து அகத்தியர் “அயிரம் என்ற புருவம் போனக்கால்” என்கிறார்.  தமிழகராதி அயிரம் என்பதற்கு ‘கண்ட சர்க்கரை’ என்று பொருள் கூறுகிறது.   இது தொண்டைவரை இனிக்கும் கல்கண்டு என்று கொண்டால் அகத்தியர் சஹஸ்ராரத்திலிருந்து கீழே தொண்டைக்கு வரும் அமிர்த தாரையைக் குறிக்கிறார் என்று பொருள்படுகிறது.  இந்த அனுபவம் விழிப்புணர்வு ஆக்ஞைக்குச் செல்லும்போது ஏற்படுகிறது.  இந்த சக்கரத்துக்கு ஒருவர் சென்றால் அங்கு “அம்மனது கம்பக்கூத்து ஆனந்தம்” கிட்டுகிறது என்கிறார் அகத்தியர்.  அம்மன் என்பது குண்டலினி சக்தி.  கம்பம் என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன.  சாதரணமாக கம்பம் என்பது கோல் என்று பொருள்படும்.  இங்கு கோல் என்பது சுழுமுனை நாடியைக் குறிக்கும்.  அதில் குண்டலினி சக்தி ஏறி நாட்டியமாடுகிறாள், அவளது ஆனந்தக் கூத்தை அந்த யோகி அனுபவித்து இன்பமடைகிறார் என்று பொருள் வருகிறது.  கம்பம் என்பதற்கு அசைவு என்றும் பொருள்.  அசைவை உடையவள் சக்தி, அவளது அசைவே உலகைப் படைத்துள்ளது.  இந்த அசைவின் ஆனந்தத்தை, உலக இயக்கத்துக்கு மூலமான ஆனந்தத்தை அந்த யோகி அனுபவிக்கிறார்.  ‘அனுகம்பா’ என்ற சொல்லுக்கு பெரும்கருணை என்று பொருள்.  இங்கு இந்தப் பொருளைக் கொண்டால், சக்தி தனது அபரிமிதமான கருணையால் அருளும் ஆனந்தத்தை அந்த யோகி அனுபவிக்கிறார் என்றும் பொருள் கூறலாம்.  இந்தப் பாடலின் கடைசி வரியும் அடுத்த நாலு பாடல்களும் தொலைந்திருப்பது நமது துரதிருஷ்டம்தான்.

No comments:

Post a Comment