Verse 289
பலுக்கினதால்
என்ன பயன் அடிதான் முன்னே
பத்தினதும்
லாபம் ஓர் லாபம் கேளு
கிலுக்கிமிகத்
திரியாமல் காலந்தோறும்
கிரியையிலே
நில்லென்றான் இதுவே லாபம்
குலுக்கி
நீ திரியாதே அதனுள் தானே
குருமொழிதான்போகுதென்று
மலைத்திடாதே
வலுத்து
நீ கிரியை விட்டு யோகம் பாரு
வசப்பட்டால்
ஞானத்தில் மாட்டும் தானே
Translation:
What is the benefit
of this cheating, only thrashing!
It will be the only
benefit. Now listen to one benefit
Without roaming
around with a show like that, at all time
Remain in kriya he
said, “that is the benefit”
You do not prance
within that
Do not despair that
the words of the guru is directing you there
Leaving the kriya
forcefully you approach yoga
When it becomes familiar
it will automatically lead to wisdom.
Commentary:
Agatthiyar says that
there is no point in prancing around like how it was described in the above
verses. The only benefit that would be
drived will be thrashing. He will say remain
in kriya that will grant benefit.
Agatthiyar advises against it. He
says that one should proceed towards yoga leaving the kriya. The yoga will automatically lead to jnana or
wisdom.
Charya, kriya, yoga
and jnana are the four steps towards realization. Charya is external disciplinging. Kriya is performing austerities like worship
rituals and chanting of mantra. Yoga is
performing steps like dharana and dhyana. It is remaining with the Divine,
which will automatically lead one to wisdom or jnana, the truth about one’s
real nature, of being consciousness.
Hence, Agatthiyar is advising us to not stop at the kriya stage but to
proceed to yoga. One can perform yoga
but jnana should occur by itself.
மேலே
கூறியபடி குலுக்கித் திரிவதால் எவ்வித பயனுமில்லை என்றும் அதனால் பெறக்கூடிய ஒரே
பயன் அடி மட்டுமே என்கிறார் அகத்தியர்.
பொய்க்குருக்கள் மக்களை கிரியைகளை மட்டுமே செய்துகொண்டிருக்குமாறு
கூறுவார். ஏனெனில் அதனால் அவர்களுக்கு லாபம் கிடைக்கிறது. ஆனால் ஒருவர் கிரியையுடன் நின்றுவிடக் கூடாது
என்கிறார் அகத்தியர். ஒருவர் கிரியையை
அடுத்து யோகத்தை மேற்கொள்ளவேண்டும்.
அப்போது ஞானம் தானாக ஏற்படும்.
சரியை
கிரியை யோகம் ஞானம் என்று பரவுணர்வைப் பெற நான்கு படிகள் உள்ளன. இவற்றில் சரியை என்பது புறத்தூய்மை, கிரியை
என்பது அகத்தூய்மை, பூஜைகள் செய்வது, கோயிலைத் தூய்மை செய்வது, பூக்கள் பறித்துத்
தருவது போன்ற செயல்களைச் செய்வது. ஒருவர்
இந்த கிரியை நிலையுடன் நின்றுவிட்டால் எவ்வித் பலனும் கிடைப்பதில்லை. அவர் அதனை அடுத்த யோகத்தை மேற்கொள்ள வேண்டும். யோகம் என்பது பரவுணர்வுடன் ஆத்ம உணர்வைச்
சேர்ப்பது. அதன் வழிகள் தாரணை, தியானம் என்பவை.
இந்த யோகம் ஒருவரை ஞான நிலைக்கு அதாவது தனது உண்மை நிலையை உணர்ந்துகொள்ளும்
தளத்துக்கு தானாகவே அழைத்துச் செல்லும் என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment