ஆட்டெலாம்
அறியவும்
ரிஷி
ஆட்டும் வாசியிலே நின்றோராட்டு
நிலைத்து
நடு மனை நாடி நின்றோராட்டும்
விழி
ஆட்டும் மந்திரத்தில் புகுந்தொராட்டும்
வீசிஅறு
பத்து நால் சித்தி ஆட்டும்
குழிஆட்டும்முக்கோணக்
கோலத் தாட்டும்
கோலசிவ
சிதம்பரத்தின் நடனத் தாட்டும்
சுழி
ஆட்டில் சேருமடா மணியின் ஆட்டம்
சூக்ஷமடா
வெகு சூக்ஷம் சுழன்று ஏறே
Translation:
One movement while remaining in the vaasi that rishis shake.
One movement/stir while seeking the middle land,
The
dance of the mantra with the eye in a particular position,
It
is the dance of the sixty four mystical accomplishments,
The
dance of the triangle that shakes the pit,
The
beautiful dance of the Siva Chidambaram
The
dance of the effulgence will occur when the dance of the whorl is performed
Subtle,
son, very subtle, whirl and climb
Commentary:
Agatthiyar
said that when the consciousness reaches the supreme state one becomes a rishi
or a seer. Here he describes that state
as the supreme dance. He says that it is
the dance of breath control or vāsi, the dance while the consciousness remains
in the middle land or the sushumna, it is the dance of holding the eye in the
kechari mudra/sambhavi mudra etc and uttering the mantra. It is the dance of the
sixty four siddhi. It is the dance of
the triangles in the muladhara and in the sahasrara. It is the dance of Supreme consciousness in
the space of consciousness, chit ambaram.
It is the dance of the jyoti, the effulgence seen at the ajna when the
kundalini yoga is performed. Agatthiyar tells
Pulathiyar to perform this dance which is the subtlest of the subtle.
முந்தைய
பாட்டில் அகத்தியர் பரவுணர்வு நிலையை அடைபவர் ரிஷி நிலையை அடைகிறார் என்று
கூறினார். இப்பாடலில் அந்த நிலையை உச்ச
நடனம் என்று விளக்குகிறார். இந்த நிலை
வாசி யோகத்தின் ஆட்டம், விழிப்புணர்வு நடு மனை அல்லது சுழுமுனையில் நின்று ஆடும்
ஆட்டம், கண்களை ஒரு நிலையில் வைத்து, அதாவது கேசரி, சாம்பவீ போன்ற முத்திரைகளில்
ஒன்றில் வைத்து மந்திரத்தைச் செபிப்பது.
திருமூலர் முத்திரைகளில் இந்த இரண்டு முத்திரைகளும் மிக உயர்ந்தவை என்று
கூறுகிறார். இந்த விழிப்புணர்வின் நடனம் அறுபத்து
நான்கு சித்திகளின் நடனம் என்கிறார் அகத்தியர்.
இந்த நடனம் முக்கோணங்களைக் கொண்ட மூலாதாரம் மற்றும் சஹாஸ்ராரத்தில்
நடைபெறும் நடனமாகும். இது பரவுணர்வான சிவம் இவ்வுடலில் உள்ள சித் ஆகாசத்தில்
நடத்தும் நடனம், ஆக்னையில் காணும் சோதியின் நடனம். இந்த மிக சூட்சுமமான நடனத்தை உணர்ந்து சுழன்று
ஏறுமாறு அகத்தியர் புலத்தியரிடம் கூறுகிறார்.
No comments:
Post a Comment