Friday 18 July 2014

298. This knowledge is suitable for everyone

Verse 298
சகலருக்கும் ஒத்துவரும்
தேரப்பா சிங்கார ஞானத்தோரை
தேற வைப்பேன் ஐந்நூற்றில் பரிந்து பாரு
பேரப்பா காணவென்றால் கொலுவில் பாரு
பேசாமல் இருக்கவென்றால் இதுவே ஞானம்
ஊரப்பா இருந்தோர்க்கும் மலை வாழ்ந்தோர்க்கும்
ஒத்துவர இஞ்ஞானம் உரைத்தேன் யாவும்
ஆரப்பா சொல்வார்கள் என்னைப் போல
அரிதரிது ஞானம் இந்தப் பத்து நூறே

Translation:
Become an expert Son!  I will make those with wisdom
To become an expert, see in the five hundred
The boon son!  If you want to see, see it in the assembly
To remain silent, this is the wisdom.
For those who live in towns and in the hills,
I have uttered this knowledge to suit them both
Who will reveal them like me, Son?
Rare, very rare, this ten hundreds.

Commentary:
Agatthiyar tells Pulathiyar that this work is for those who wish to experience the singlet state.  He advises Pulatthiyar to learn this knowledge from the five hundred.  He may be referring to the first five hundred verses of this work or to another of his work that contains five hundred verses.  He adds that this work is for those who wish to learn about silent yoga or the yoga of silence and it is suitable for both householders and for renunciates.  He exclaims that there is no one in this world who would reveal this wisdom so openly and that one should benefit from this thousand verses.

இப்பாடலில் அகத்தியர் ஞானம் பெறவிரும்புவோரை இந்த நூலின் மூலமாக அனைத்தையும் அறிந்து தேறவைப்பேன் என்றும் இந்த அறிவை ஐந்நூறில் கண்டு தேறுமாறும் கூறுகிறார்.  ஐந்நூறு என்பது இக்காவியத்தின் ஐந்நூறு பாடல்கள் என்று தோன்றுகிறது.  இந்த பாடல்கள் மௌன யோகத்தைப் பற்றி அறிய விரும்புபவர்களுக்காக தான் இயற்றியது என்றும் இதில் கூறியுள்ள கருத்துக்கள் இல்லத்தோருக்கும் துறவிகளுக்கும் ஏற்றது என்றும் கூறுகிறார்.  இவ்வாறு விஷயங்களை யார் வெளிப்படையாகக் கூறியுள்ளார் என்று அவர் புலத்தியரிடம் கேட்கிறார்.  அதனால் இந்த நூலைப் படித்து பயன்பெறவேண்டும் என்று புலத்தியருக்கு அறிவுரை கூறுகிறார். 

No comments:

Post a Comment