Saturday 26 July 2014

308. What is good?

Verse 308
நரகம் அதிலே விழுந்து போக நன்றோ
நல்லபதம் முத்தி பெற்று இருக்க நன்றோ
சிறிதான குகைவாசல் விழுகல் நன்றோ
சிவ ஞானம் முத்தி பெற்று இருக்க நன்றோ
பரிவான வாசிதனில் ஏற நன்றோ
பாழான உலகமதில் இருக்க நன்றோ
தெரியாத பிள்ளைகளே தெரிந்து பாரீர்
சிவசிவா புலத்தியனே செப்பினேனே

Translation:
Is it good to fall into hell
Is it good to remain in the good locus attaining mukti
Is it good to fall into the small entrance of the cave
Is it good to remain attaining the Siva jnana mukti
Is it good to climb in the merciful vaasi
Is it good to remain in the world which is a paazh
The ignorant children, see it with knowledge
Siva sivaa!  Pulatthiya!  I told this.

Commentary:
Agatthiyar asks Pulatthiyar what is good, is it good to fall into hell, into the cave of birth, be in this world which is nothing but destruction or a space created by maya or whether it is good to attain siva jnana mukti, to climb the vaasi and thus attain the locus of realization.  In the end Agatthiyar says “Children! See what is good and follow it, I have said everything here”.


இப்பாடலில் அகத்தியர் புலத்தியரிடம் எது நல்லது என்று பல விஷயங்களைக் கூறி கேட்கிறார்.  நரகத்தில் வீழ்வது நல்லதா, குகைவாயில் விழுவது நல்லதா, பாழான உலகில் இருப்பது நல்லதா அல்லது வாசியில் ஏறி சிவ ஞான பத முக்தியைப் பெறுவது நல்லதா என்று கேட்டுவிட்டு “பிள்ளைகளே எது நல்லது என்று நான் இங்கே கூறியவற்றைக் கொண்டு தேறுங்கள்” என்று இப்பாடலை முடிக்கிறார்.

No comments:

Post a Comment