Sunday, 20 July 2014

300. Ways to get this book

Verse 300
நூல் வாங்க சாபம்
பாரப்பா புலத்தியனே அறிவுல்லோனே
பார் உலகில் இந்நூலைப் படித்தோர் பாதம்
காரப்பா பன்னிரண்டு வருடம் காத்து
கைப்பொருளோ கேட்டதெல்லாம் கையில் ஈந்து
கோரப்பா நூல் கொடுத்தால் இரண்டாம் பாதம்
குணம் வந்து ஈய்ந்தாக்கால் மிகவும் நன்று
போரப்பா செய்து நூல் வாங்கிடாதே
பூரணத்தால் உனது சிரம் வெடித்துப் போமே

Translation:
See Son! Pulatthiya!  The knowledgeable one,
Seek the feet of those who have read this book and
Associate with them for twelve years patiently.
Offering all the materials asked for and
Requesting the book-if they give you the book it is of second quality,
If they condescend and offer it, it is good.
Do not get the book through tussle
You head will explode due to the fully complete.

Commentary:
Agatthiyar is reiterating the ways in which one should obtain this book.  The best way to get this knowledge is through serving a person knowledgeable about this book for twelve years and learning it from them.  This is very beneficial because not only will they reveal the concepts found in the book they will also explain it and help the disciple understand clearly.  The next best method is to offer all the material things that the possessor of the book asks for.  This is only of second quality because the one who gives the book will not offer the knowledge he gained from the book.  The seeker will only get the book, he has to learn and realize the truths mentioned here.  The worst way to obtain this book is through fighting.  This will only earn the curse of the possessor of the book.  Agatthiyar warns that one’s head will explode if one tries to get knowledge through wrong means.  This is interesting as the brain in the head is the site of knowledge while the heart is the site of realization.  Agatthiyar says that the head will explode and not the heart as it will be mere textual knowledge and not a realized one.


இந்த நூலைப் பெறக்கூடிய வழிகளை இங்கே அகத்தியர் விவரிக்கிறார்.  இந்த நூலைப் படித்துணர்ந்தவர்களைத் தேடி அடைந்து அவர்களது பாதங்களைப் பற்றி அவருக்கு சேவை புரிந்து அவரிடமிருந்து இதைக் கற்பதே மிக உத்தமமான வழி.  இவ்வழியில் ஒருவர் அறிவைத் தேடினால் அந்த அறிவைப் பெறுவது மட்டுமல்லாமல் அதை உணருவதற்கும் அந்த குரு உதவுவார்.  இந்த நூலைப் பெற்றிருப்பவருக்கு அவர் கேட்ட பொருட்களைத் தந்து இந்த நூலைப் பெறுவது இரண்டாம் பட்சம்.  இம்முறையில் இப்புத்தகம் ஒருவருக்குக் கிடைக்கும் ஆனால் அந்த குரு அறிந்துணர்ந்த ஞானம் கிட்டாது. சண்டை போட்டு இந்த நூலைப் பெறுவது மிகக் கீழ்த்தரமான முறை.  இதனால் ஒருவர் தலைவெடித்துச் சாவார் என்கிறார் அகத்தியர்.   தலை என்பது அறிவின் இருப்பிடம், இதயம் உணர்வின் இருப்பிடம்.  இவ்வாறு சண்டைபோட்டுப் பெற்ற அறிவு ஒருவரது தலையைச் சிதறச் செய்யும்.  

No comments:

Post a Comment