Thursday 24 July 2014

305. Dance is that of the jewel, deeksha is dasadeeksha, action is ashta karma...

Verse 305
ஆட்டம் என்றால் மணியினது ஆட்டே ஆட்டு
அதைவிட்டால் வேறு ஓர் ஆட்டை காணேன்
தீட்டம் என்றால் தசதீக்ஷை தீட்டே தீட்டு
தீ பறிந்த சிவ யோகி திறம்பார் பூட்டு
கூட்டம் என்றால் வாசியிட கூட்டே கூட்டு
கூட்டறிந்த யோகி வந்தால் குறிதான் சொல்வார்
பாட்டம் என்றால் அஷ்டகர்ம பாட்டே பாட்டு
பாட்டறிந்தோன் யோகி என்றால் பலுக்குவானே

Translation:
If it is the dance, it is the dance of the jewel
I do not see any other dance than this
Purification is none other than dasa deeksha
This Siva yogi is the embodiment of flame, look at his capacity, lock it
Merging means the merging of vaasi
If a yogi who knows how to join comes, he will tell you the signs
Action means the action, ashtakarma (eight actions)
The one who knows this is yogi, he will show off/say it clearly.

Commentary:
Agatthiyar says that all the actions are that of the jewel, the state of superconsciouness, the soul.  The mani represents the formless form of the Divine.  Theettam means impurity as well as deeksha.  Agatthiyar mentions that the only deeksha is the dasa deeksha or the deeksha of ten.  Dasa deeksha has two meanings.  One interpretation is that it represents the initiation into the esoteric meaning of akara and ukara which together constitute ten.  Another interpretation is ten step initiation process.  Agatthiyar in his paripurana sutram talks about ten types of initiation for Siva and Sakti.  These are mantras chanted sequentially while crossing states of consciousness.  Dasadeeksha also refers to the ten types of purification of the body through a process called kayasiddhi. The terminus of the kayasiddhi is attaining oli udal or the body of light, like Vadalur Ramalinga adigal.  Agatthiyar refers to this in the next line when he says the yogi becomes a ‘deepar’.   Next says that the only thing that is worthwhile joining is the breath or vaasi and the only action that should be performed are the eight actions or ashta karma that we have already seen to be vasyam, sthambanam, mohanam etc.  Agatthiyar says that a true yogi will talk in detail about this.  The term ‘palukku’ means spelling it clearly as well as showing off.  Here it means the first interpretation.

இப்பாடலில் அகத்தியர் பல முக்கியமான கருத்துக்களைக் கூறுகிறார்.  இவ்வுலகில் நடைபெறுபவை அனைத்தும் மணியின்ஆட்டம், அதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தும் உணர்வுகள்தான் என்று முதலில் கூறுகிறார்.  இதனை அடுத்து தீட்டம் அனைத்தும் தச தீட்சை என்கிறார்.  தீட்டம் என்பது அசுத்தி என்றும் தீட்சை என்றும் பொருள்படும்.  இங்கே தீட்சை என்ற பொருளில் வருகிறது.  தசதீட்சை என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன.  அதற்கு அகார உகாரங்களைப் பற்றிய ரகசியத்தை அறிவது என்று ஒரு பொருள்.  ஏனெனில் அகாரமும் உகாரமும் மொத்தமாக பத்து என்ற கூட்டைக் கொடுக்கின்றன.  அதற்கு மற்றொரு பொருளை அகத்தியர் தனது பரிபூரண சூத்திரம் என்ற நூலில் கூறியுள்ளார்.  பூரண சூத்திரம் என்னும் நூலில் சிவ தச தீட்சை சக்தி தச தீட்சை என்று இரு படிநிலைகளை அவர் கூறியுள்ளார்.  அது படிப்படியாக செபிக்கவேண்டிய மந்திரங்களும் கடக்கவேண்டிய நிலைகளுமாகும்.  காய சித்தி எனப்படும் உடம்பை திவ்விய தேகமாக மாற்றும் முயற்சியிலும் இந்த தச தீட்சை வருகிறது.  அது உடலைப் பல்வேறு நிலைகளுக்குக் கொண்டு சென்று முடிவில் இராமலிங்க அடிகள் பெற்றது போல ஒளியுடலைப் பெறுவது. 

தசதீட்சையை அடுத்து அவர் கூட்டுவது என்றால் வாசியைக் கூட்டுவது என்கிறார். இவ்வாறு கூட்டினால் ஏற்படும் சித்திகளே அஷ்ட கர்மங்கள் எனப்படுகின்றன.  அவை மோகனம், ஸ்தம்பனம், வசியம் முதலியவை.  இதனை அடுத்து கூறுகிறார் அகத்தியர். இவையனைத்தையும் பற்றி ஒரு உண்மையான யோகி விரிவாகப் பேசுவார் என்கிறார் அவர்.  பலுக்கு என்றால் அலட்டிக்கொள்வது மற்றும் விரிவாகப் பேசுவது.  இங்கே இச்சொல் இரண்டாவது பொருளில் வருகிறது.

No comments:

Post a Comment