Sunday 13 July 2014

293. Do this for twelve years to attain siddhi

Verse 293
சொல்லுவேன் புலத்தியனே சுழி உள்ளோனே
துன்மார்க்கப் பிள்ளைகட்குச் சொல்லொணாது
அல்லுமே பகலாக அதின் மேல் நின்றால்
அர அரா ஆண்டு பனிரெண்டில் சித்தி
செல்லுமே மதனமாய்ச் செய்தாயானால்
செய்கிறதில் சித்தி வரும் வருடம் நாலில்
பல்லுமே நாவிட ருசி பாராதே
பார்த்துவா ஒரு மனதாய் குருவைப் போற்றே

Translation:
I will say, Pulatthiya!  The one with the whorl
This should not be said to those who follow the wrong path
If you remain on it night and day
Ara araa!  Siddhi in twelve years
If you do this with desire
Siddhi will happen within four years
The teeth does not realize the taste that the tongue feels
See with focus of the mind, praise the guru.

Commentary:
Agatthiyar tells Pulatthiyar that he will gladly describe this to him as he is the one who has the kundalini yoga as his goal and that this technique should not be revealed to the unworthy.  If this is performed continuously night and day without fail, one whould attain siddhi within twelve years.  This is an interesting information. Lambika yoga involves the kechari mudra, the best among all the mudras in yoga.  It involves lengthening the tongue and turning it upwards, plugging the uvula and remaining in that state for twelve years when the body of the yogin transforms into divya deha.  Agatthiyar says that if one performs this yoga with madhanam” then one will attain this siddhi within four years itself. Madhanam means sex, patience and silence.  If we interpret it as sex then Agatthiyar may be referring to paryanga yoga.  If he means remain in silence and perform the yoga it fits with his mauna yogam, and he has been insisting that one should perform this patiently.


அகத்தியர் புலத்தியரிடம் தான் அவருக்கு இதை மகிழ்ச்சியுடன் விளக்குவதாகவும் அவர் குண்டலினி என்னும் சுழியை உடையவர் என்றும் கூறுகிறார்.  மேலும் அவர் இந்த அறிவை தகுதியற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.  இந்த யோகத்தை ஒருவர் அல்லும் பகலும் பயின்றால் பன்னிரண்டு ஆண்டுகளில் சித்தியைப் பெறலாம் என்றும் அதை மதனத்துடன் செய்தால் நான்கே ஆண்டுகளில் சித்தி கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.  மதனம் என்பதற்கு காமம், பொறுமை, மௌனம் என்று பொருள்.  இவற்றில் காமம் என்ற பொருளை எடுத்துக்கொண்டால் அகத்தியர் பரியங்க யோகத்தைக் குறிக்கிறார் எனலாம்.  பொறுமையுடன் இதை விடாமல் மேற்கொண்டால் சித்தி நான்கு வருடங்களில் கிட்டும் என்றும் மௌனத்துடன் இந்த யோகத்தை மேற்கொண்டால் நான்கு வருடம் போதும் என்றும் பொருள் கொள்ளலாம்.  பன்னிரண்டு வருடங்கள் என்று அகத்தியர் கூறுவது அவர் லம்பிக யோகத்தைக் குறிக்கிறாரோ என்று எண்ணத்தை ஏற்படுத்துகிறது.  லம்பிக யோகம் என்பது நாக்கை நீட்டி அண்ணாக்கைத் தொட்டு கேசரி முத்திரையை மேற்கொண்டு மனமும் பிராணனும் நின்ற நிலையில் இருப்பது.  இவ்வாறு பன்னிரண்டு வருடங்கள் இருந்தால் ஒருவர் சித்த தேகத்தைப் பெறுவார் என்று யோக நூல்கள் கூறுகின்றன.  

No comments:

Post a Comment