Thursday 17 July 2014

296. All the mystical accomplishments will be achieved!

ஏறப்பா புலத்தியனே சிவமும் தாண்டி
இயல்பாகச் சிவம் தாண்டி ஏறி மேலே
கூறப்பா நல்வினை தீ வினைகள் எல்லாம்
குணமாக இரண்டுமல்லோ ஒழித்து ஏறு
மாறப்பா ஐஞ்செழுத்தை மனதின் உள்ளே
மாற்றித்து மாறினதால் சகல சித்தும்
வீறப்பா சகல சித்தும் கைக்குள்ளாகும்  
வெளிவிட்டேன் காவியத்தில் வெளிவிட்டேனே

Translation:
Climb Son!  Pulatthiya! Going beyond the Sivam
Climb up naturally beyond the Sivam
Say son! The good and bad actions
Destroying both properly and climb up
Change Son!  Contemplate the five letters within the heart
Change it!  The change grants all the siddhis
The valorous mystical accomplishments will come under your control
I revealed this, in the kavya I revealed this.

Commentary:
Agatthiyar is telling Pulatthiyar that he should go beyond the sahasrara even beyond the dvadasantham, where the supreme consciousness remains as Sivam.  Sivam is not a person or a form but a state.  The state beyond Sivam is the turiyatheetha, the state of all-pervasiveness, the singlet state without any distinction. One can attain this state if both the good karma and the bad karma are removed.  Bad karma is an iron handcuff, the good karma is a golden handcuff.  Both tether the Jiva to the world.  One should do this by contemplating the five letters of namacivaya.  This practice will grant all the siddhis or mystical accomplishments.  Bhagavad Gita describes a total of sixty four siddhis that include the famous eight siddhis or ashtamasiddhi.   Agatthiyar reiterates that he has described all these in his kavyam, the meijnana kavyam.

புலத்தியர் சிவம் என்னும் உச்ச விழிப்புணர்வு நிலையையும் தாண்டி ஏறவேண்டும் என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  சிவம் என்பது ஒரு நபரோ ஒரு உருவமோ அல்ல, அது ஒரு விழிப்புணர்வு நிலை.  அதன் மேலே இருப்பது த்வாதசாந்தம் என்னும் நிலை.    இந்த நிலைகளுக்கு உயர ஒருவர் தனது நல்வினை தீவினை ஆகிய இரண்டையும் ஒழிக்க வேண்டும்.  நல்வினை என்பது பொன் விலங்கு, தீவினை என்பது இரும்பு விலங்கு.  இந்த இரு விலங்குகளும் ஒரு ஜீவனை உலகுடன் பிணைத்து வைக்கின்றன.  இந்த இருவினைகளையும் அறுக்க ஒருவர் ஐந்தெழுத்தான நமசிவய என்ற மந்திரத்தை மனதுள்ளும் கருத்துள்ளும் வைக்கவேண்டும்.  அவ்வாறு உயர்ந்தால் எல்லா சித்திகளும் கைக்கூடும் என்கிறார் அகத்தியர்.  பகவத் கீதை அறுபத்து நான்கு வகை சித்திகளைப் பற்றிக் கூறுகிறது.  அவற்றுள் அஷ்டமா சித்திகள் என்னும் எட்டு சித்திகளும் அடங்கும்

No comments:

Post a Comment