Verse
45
அங்கமென்ற
அஞ்செழுத்தே உடலதாச்சு
ஆதியென்ற
மூன்றெழுத்தே வுயிரதாச்சு
தங்கமென்ற
மூன்றெழுத்தின் விபரம் கேளு
சாற்றுகிறேன்
பசுபதி பாசம் அப்பா
பொங்கமென்ற
ஐஞ்செழுத்தும் ராசா வாச்சு
புகழான
ஓங்காரம் கோட்டை ஆச்சு
சிங்கம்
என்ற இரண்டெழுத்தும் மௌனத்தோடே
சேர்ந்தக்கால்
சிவ சிவா வாசி ஆச்சு
Translation:
The part, the five letters, became the body
The three letters that are the origin became the soul
Listen
to the details about the golden/precious three letters
I
will tell you, it is pasu (limited soul), pathi (universal soul) and pāsam
(relationships)
The
great five letters became the king, happily
The
glorious omkara became the fort
The two letters sing and am (the lion-like two letters) along with the silence
When
they came together, Siva sivā, became the vāsi (universal energy in the body)
Commentary:
Agatthiyar
tells Pulatthiyar that the five letters of namacivaya became the body.
Sivavakkiyar
refers to this as
With na as the two legs, ma as the
stomach,
ci as the two shoulders, the superior va as the mouth,
ya as the two eyes, that which remained truthfully so,
As supreme object in the subtle body, everything
remained within the five-lettered Civayam (verse 96)
na represents the earth principle, ma the water principle, si the fire principle, va the air principle and ya the space principle.
na represents the turiyathitha state, ma the turiya state, si the deep sleep state, va the dream state and ya the wakeful state.
na is marked at the muladhara where the turiyathitha state is experienced, ma at the svadishtana, si at manipuraka, si at anahata, va at the vishuddhi and ya at the ajna where the above states are experienced.
All these occur in the background of omkara. Its tripartite exististence as a u and ma represents its fully manifested state. a represents the pati (Isvara/Supreme Being), u the pasu (limited soul or Jiva) and m paasam (their relationship/ attachment) respectively. The five letters became
the king, the Jiva. The omkara is the fort that protects the Jiva. Namasivaya is the fully manifested form of om.
Cing
and am- Siddhas use the base letter si as sing and sim. sing represents drawing of the prapancha prana sakthi or universal force into the body. sim represents stabilizing it in the body. am represents stabilizing the universal energy ang in the body. si also represents the maha karana sareera or the universal form which is represented as fire or flame. Thus sing am represent drawing of mahakarana sareera into the body and stabilizing it within.
Vasi is prana. It is not the air we draw in, the breath. It is the prapancha prana, the universal force that uses the breath as its vehicle to enter the body. Thus, vasi yogam is joining the prapancha prana with the prana in the body. The sing am represents the universal energy that comes into the body.
இப்பாடலில்
அகத்தியர் உயிருக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பையும் அவற்றைக் குறிக்கும்
எழுத்துக்களையும் வாசி யோகத்தையும் விளக்குகிறார். ஐந்தெழுத்தான நமசிவாய என்பது உடலாயிற்று. சிவவாக்கியரும் இதை
நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துள
நமசிவயத்தில் ந என்பது கால்கள், ம- வயிறு, சி-தோள், வ- வாய், ய- கண்
ந- பூமி தத்துவம், ம- நீர்தத்துவம், சி- அக்னி தத்துவம், வ- காற்று தத்துவம், ய- ஆகாய தத்துவம்,
ந- துரியாதீதம், ம- துரியம், சி- ஆழுறக்கம், வ- கனவு நிலை, ய- விழிப்பு நிலை.
இந்த நிலைகள் முறையே மூலாதாரம், , மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்னையில் உணரப்படுகின்றன. இந்த எழுத்துக்களும் அதனால் அந்த சக்கரங்களில் குறிக்கப்படுகின்றன. இவற்றை விசுத்தியோடு நிறுத்துவதும் உண்டு.
மேற்கூறிய நமசிவாயம் முழு வெளிப்பாடு நிலை. அதற்கு அடித்தளமாக இருப்பது ஓங்காரம். இங்கு ஓங்காரம் எழுத்துக்களான அ உ ம
என்பவையாக இருக்கிறது. அவை முறையே பதி, பசு, பாசத்தைக் குறிக்கின்றன என்று அகத்தியர் கூறுகிறார். உடலான நமச்சிவாயத்தை ராஜாவாக்குவது ஓம்காரம்
என்னும் கோட்டை.
இதனை அடுத்து அகத்தியர் வாசி என்பதை விளக்குகிறார். வாசி என்பது பிரபஞ்ச பிராண சக்தி. அது மூச்சைத் தனது வாகனமாகக் கொண்டு உடலினுள் நுழைகிறது. வாசி யோகம் என்பது பிரபஞ்ச பிராண சக்தி உடலினுள் இருக்கும் பிராணனுடன் சேர்ப்பதாகிறது. இதைக் குறிப்பதே சிங் அம் என்ற சொற்கள்.
பிரபஞ்ச பிராண சக்தி என்பது மகா காரண சரீரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதன் உருவம் சோதி அல்லது அக்னி. சி என்னும் எழுத்து இந்த அக்னியைக் குறிக்கிறது. சிங் என்பது பிரபஞ்ச பிராண சக்தி உடலினுள் நுழைவதையும் சிம் என்பது அதை உடலில் நிலைபெறச் செய்வதையும் குறிக்கின்றன. அம் என்பது இறைவன் எனப்படும் சக்தி உடலினுள் நிலைபெறுவதைக் குறிக்கிறது. இவ்வாறு சிங் அம் என்பது பிரபஞ்ச பிராண சக்தி உடலுள் வருவதை, வாசியைக் குறிக்கிறது.