Monday, 31 March 2014

121. A disciple who asks for "money back guarantee"!

Verse 121

உதவா சீஷன்
ஞானம் அவர் உள்ளபடி அருளே செய்தால்
நாள்தோறும் யான் அறிந்த சேதிக்கெல்லாம்
ஈனம் இது நல்ல குரு போம் போம் என்று
இதுக்கேதான் ஏழு முழமாக வந்தீர்
தானம் என முன் கொடுத்த தனம் செண்ண சிலவும்
தந்து விட்டுப் போம் என்றால் சண்ணுவார் பின்
ஊனம் அவன் ஒரு நாளும் உதவா மாடு
ஒருநாளும் திருநாள் போல் பிலுக்குத் தானே

Translation:
           
Useless disciple

When wisdom is granted in his present state,
“This is useless compared to all the things
I know already/daily. What a guru you are!, Go, Go.
Did you come so elaborately only for this?
All the things I gave you as offerings and the expenses
Pay it and go,”he will fight so.
He is maimed, he is a useless cow, not useful ever,
Everyday is a tumult, like a festival.

Commentary:
Agatthiyar is now talking about a disciple who demands “money back guarantee”!  When a true guru mentioned in the above verse grants him wisdom at his current state, as is, he will complain saying, “What you have taught is nothing new.  It is nothing compared to what I already know.  Only for this knowledge you came here pretending as a great soul is it?  Go, Go. Return all the things I gave you as offering and pay back all the expenses I incurred on your behalf.”  He will fight so.  Agatthiyar calls such a person maimed, not physically but mentally.  He also calls him a useless cow!  Such a person will only make a big show everyday as if it is a festival, displaying his so-called spirituality and interest in wisdom to the whole world.


அகத்தியர் இப்பாடல் திருப்தி இல்லை காசைத் திருப்பிக்கொடு என்று கேட்கும் ஒரு சீடனைப் பற்றிப் பேசுகிறார்  மேற்பாடலில் குறிப்பிட்ட குரு இந்த சீடனுக்கு ஞானத்தை உபதேசித்தால் அவன், “நீர் ஒன்றும் புதியதாக எனக்குக் கற்றுக்கொடுத்துவிடவில்லை.  இவை எல்லாம் எனக்கு முன்னமே தெரியும்.  இதைக் கற்றுக்கொடுக்கத் தான் நீர் பெரிய குரு என்ற பெயரில் வந்தீரோ, போம் போம்.  நான் இதுவரை உமக்கு தானமாக அளித்த பொருட்களையும் செய்த செலவையும் திருப்பித் தந்துவிட்டுப் போம்,” என்று சண்டை பிடிப்பார்.  அகத்தியர் அந்த சீடனை ஊனமுள்ளவன், மனதில், என்றும் உதவாத மாடு என்றும் திட்டுகிறார்.  அவன் தினமும் திருவிழாவைப் போல அமர்க்களம்தான் செய்கிறான்.

119. Another charlatan Guru

Verse 119
பெரியோரைக் கெடுத்தவன்

எடுத்தானே இன்னொருவன் சொல்வதென்ன
இப்படியும் இருப்பாரோ பெரியோர் ஐய்யா
அடுத்தாலும் சுழிநாட்டம் நிலைக்க மாட்டான்
அவன் புத்திக் கியன்றபடி நடக்கச் சொல்வான்
தொடுத்தாலும் சுழி நாட்டம் நிலைக்க மாட்டான்
சொல்பம் இது வேறுண்டு பெரிதே என்பான்
கெடுத்தானே பெரியோர் தன் மதியைக் கூட
கேள்வி கண்டால் அகலப்போம் இன்னங் கேளே

Translation:
The one who took up. Another one, what to say!
Will great souls be like this, Sir?
Even if he is interested in the whorl, he will not have sustained interest. 
He will say, “Do as you mind tells you"
Even if directed he will not have lasting interest in sushumna
“This is insignificant, there is something greater than this,” he will say
He will ruin the minds of even great souls
When they question.  Go away from him, hear more.

Commentary:
Agatthiyar talks about another type of charlatan here.  This person will start out with interest in the whorl, however he will not have mental focus to remain there longer, to sustain his interest longer.  He will advise others to do as they please.  He will suggest whatever comes to his mind as sadhana.  One is reminded of modern age gurus (the numbers are plenty, one need not mention their names here) who prescribe all kinds of bizarre practices that have no basis or value as sadhana.  Such a person will ridicule kundalini yoga and say that there is something bigger than this.  He is so convincing that he will even corrupt the minds of great souls who question him.  It defies logic when we see so many learned men and women falling for such gurus in these times. Agatthiyar tells Pulatthiyar to go away from such people as they are very bad influence. 


இப்பாடலில் அகத்தியர் மற்றொரு பொய் குருவைப் பற்றிப் பேசுகிறார்.  இந்த குரு தான் ஒரு பெரிய ஞானி என்று அறிவித்துக்கொள்வார்.  அவருக்கு கொஞ்சம் கூட குண்டலினி யோகத்தில் விருப்பம் இருப்பதில்லை.  தன் மனம் போனபடி தானும் நடந்துகொள்வார் பிறரையும் நடக்கச் சொல்வார்.  தற்காலத்தில் இத்தகைய குருக்கள் மலிந்து கிடப்பதைப் பார்க்கிறோம்.  பிறர் அவருக்கு குண்டலினி யோகத்தைப் பரிந்துரைத்தாலும் அவருக்கு அதில் விருப்பம் இருப்பதில்லை.  “இது ஒன்றுமில்லை, அல்பம், இதைவிட பெரியது உள்ளது,” என்று அவர் கூறுவார்.  தமது மனதுக்குத் தோன்றியதை எல்லாம் சாதனை என்ற பெயரில் பிறரைப் பயிலச் சொல்வார்.  பெரியோர் இவர்களைக் கேள்வி கேட்டால் தனது வாக்குத் திறத்தால் அவர்களது மனத்தைக் கூட மாற்றக் கூடிய திறம் படைத்தவர்கள் இந்த குருக்கள்.  தற்காலத்தில் படித்த, சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட இத்தகைய குருக்களின் பின் போவதை நாம் காண்கிறோம்.  இதுதான் அகத்தியர் கூறும் கலியின் கொடுமை போலும்!  இத்தகைய மக்களைவிட்டு தூரப் போகும்படி அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.  

118. Siddhas are roaming among us- Agatthiyar implies

தான் என்று இதில் ஒருவன் சொல்வதென்ன
சமயமதம் தான் பேசி பணங்கள் வாங்கி
ஏன் என்று கேட்டாலும் இடும்பு பேசி
இவ்வார்த்தை நடக்குமே கலியுகத்தில்
வான் என்ற பெரியோர்கள் மலையில் உண்டு
வையகத்தில் வாரார்கள் பொய்பொய் என்பான்
தேன் என்ற பெரியோரை தூஷித்து
செத்திறந்து நாய் செனனம் எடுப்பான் தானே

Translation:
What does the one who has ahamkara say here?
Talking about religion and spirituality collecting money
If questioned, “Why?” speaking ill
These words will happen in the kali yuga
Great Souls like the sky are present on the hill
They will not come into this world, lie, lie, he will say
Abusing great souls sweet as honey
He will die and have a birth as a dog.

Commentary:
Agatthiyar describes a person who claims to be spiritual but is driven by ahamkara.  Such a person will talk about religion and spirituality to collect money from others.  When they question him about it he will speak ill.  He will declare that great souls live only on hills and mountains and they will never come into this world and that if anyone says otherwise it is a lie.  This statement is very interesting.  Agatthiyar is attacking those who say that siddhas will live only in seclusion and they will never come into this world. When some people say that they have seen the siddhas others will ridicule them saying that it is a lie.  Agatthiyar says that such a person who abuses great souls will die and be born as a dog.

இப்பாடலில் அகத்தியர் தான் ஆன்மீகவாதி என்று பேசிக்கொண்டு அகங்காரம் பிடித்து அலையும் மக்களைப் பற்றிக் கூறுகிறார்.  அத்தகைய மக்கள் மதத்தையும் ஆன்மீகத்தையும் காசு பறிக்கும் ஒரு வழியாகப் பயன்படுத்துவர்.  யாராவது தட்டிக் கேட்டால் அவர்களை இழிந்துரைப்பர்.  பெரியோர்கள் மலைமேல் மட்டும் வாழ்வர், அவர்களை யாராவது இவ்வுலகில் பார்த்தோம் என்று கூறினால் அது பொய் என்று பேசுவர் என்று அந்த மக்களைப் பற்றி அகத்தியர் கூறுகிறார்.  இதன் மூலமாக சித்தர்கள் நம் மத்தியில் உலவுகின்றனர்.  அவர்கள் மலைகளில் மட்டும் வசிப்பதில்லை.  தகுதியுள்ளவர்கள் அவர்களைப் பார்க்கின்றனர், அவர்களோடு பேசுகின்றனர் என்று அகத்தியர் காட்டுகிறார்.  அவ்வாறு நன்மக்களைத் தூஷிக்கும் அகங்காரம் பிடித்தவர்கள் அடுத்து நாய் ஜென்மம் எடுப்பர் என்று அகத்தியர் கூறுகிறார்

Sunday, 30 March 2014

117. kundalini cakras and their relationship with the zodiac signs

Verse 117
ஏழு ராசிக்காரர்
களருவான் பின் ஒருவன் கேட்ப தென்ன
கண் காட்டித் தனை மறைக்கச் செய்யும் என்பான்
உளறுவான் உபதேசம் பெற்ற போது
உற்ற அறு சபை காண வேணுமென்பான்
குளறுவான் காசி வரை கன்னி தொட்டு
குணபூத விஷயமும்தான் சொல்ல வேணும்
அலறுவான் அவர்கள் இந்த ஏழுராசி
அரிதரிது இவர்களுக்கு ஞானம் தானே
                 
Translation:
Those belonging to the seven zodiac signs

Another one will become a wasteland.  He will say
No need to ask, by a wink of the eye, I can hide anything.
He will blabber when he received the upadesa
He will say, “should see the six sabhas”
He will stammer upto kasi, touching the maiden
Qualities and elements must be spoken about
He will scream, they belong to the seven zodiac signs
Rare, rare, attaining wisdom is rare for them.

Commentary:
This verse talks about a half baked guru and a ‘not ready’ disciple.   The guru has not attained wisdom.  He has minor siddhis like making things disappear by the wink of the eye.  This is called ‘kan kattu viddai’ or the magic of tying up the eye- optical illusion.  A disciple approaches such a guru and seeks upadesa.  He will tell the guru that he wants to see all the six cakras.   The guru will grant him shati path even when he is not ready to receive it.  The consequences are very dangerous.  The disciple’s kundalini will go upto ajna from muladhara staggering on its way.  It does not go beyond that.  The disciple will scream seeing visions and experiencing things that he is not able to handle.  Kasi refers to ajna cakra and kanni refers to muladhara.  Agatthiyar says that such people will never get wisdom.

Agatthiyar calls such people as ‘those of the seven zodiacs’.  David Frawley in his book Astrology of the seers gives the connection between the different cakras and the twelve zodiac signs.
                                                           
Cakra
Ruling planet
Inhalation (lunar) prana up the spine
Exhalation (solar)
prana down
Muladhara
Shani
Kumbha
Makara
Svadishtana
Guru
Meena
Dhanus
Manipuraka
Mangala
Mesha
Vricchika
Anahata
Shukra
Vrishabha
Thula
Visuddhi
Buddha
Mithuna
Kanya
Ajna
Chandra/surya
Karkata
Simha
Sahasrara
Beyond this system


                       
Saturn- 1st cakra grounding/stability
Jupiter 2nd cakra procreating/creating
Mars 3rd competition/action
Venus 4th loving/embracing
Mercury 5th speaking/articulating thoughts
Sun-moon   6th    perceiving/intuiting
7th cakra may be ruled by rahu ketu

Uttama and neecha of planets
Chandra         anahata          lunar   unconditional feeling of love
Mangala         muladhara     solar   maximum action/accomplishments
Budha                        visuddhi        solar   maximum outward articulation
Guru               ajna                 lunar   teachable intuitive wisdom
Shukra            svadishtana               maximum attraction sensual pleasure
Shani              anahata          solar   active but detached pursuit of justice and order
Surya              manipuraka  lunar   fullest expression of vital will power

இப்பாடல் அரைவேக்காடு குருவைப் பற்றியும் அரைகுறை சீடனைப் பற்றியும் கூறுகிறது.  அந்த குறு ஞானத்தைப் பெற்றவரில்லை.  அவரிடம் கண்கட்டு வித்தை போன்ற அல்ப சித்திகளே உள்ளன.  அவரை உபதேசத்துக்காக ஒரு சீடன் அணுகுகிறான்.  தான் ஆறு சக்கரங்களையும் பார்க்கவேண்டும் என்கிறான்.  அந்த குரு அவன் தகுதி பெற்றவனா என்று ஆராயாமல் அவனுக்கு சக்திபாத்தை அளிக்கிறார்.  அதன் விளைவுகள் பயங்கரமானவை.  அவனது குண்டலினி மூலாதாரத்திலிருந்து ஆக்ஞா வரை பயணிக்கும்போது ஏற்படும் உணர்வுகளையும் அனுபவங்களையும் கண்டு அவன் அலறுகிறான்.  அத்தகைய மக்களை அகத்தியர் ஏழுராசிகாரன் என்கிறார்.  அத்தகைய மக்கள் ஞானம் பெறுவது மிக மிக அரிது என்கிறார் அவர்.

டேவிட் பிரௌலி என்னும் யோகி மற்றும் அறிஞர் சக்கரங்களுக்கும் ராசிகளுக்கும் உள்ள தொடர்பை கீழ்க்காணுமாறு விளக்குகிறார்.

சக்கரம்
ஆளும் கோள்
உள்மூச்சு (சந்திரன்)
பிராணன் தண்டுவடத்தில் மேலேறுதல்
வெளி மூச்சு (சூர்யன்)
பிராணன்
கீழிரங்குதல்
மூலாதாரம்
சனி
கும்பம்
மகரம்
சுவாதிஷ்டானம்
குரு
மீனம்
தனுஸ்
மணிபூரகம்
செவ்வாய்
மேஷம்
விருச்சிகம்
அனாஹதம்
சுக்கிரன்
ரிஷபம்
துலாம்
விசுத்தி
புதன்
மிதுனம்
கன்னி
ஆக்ஞா
சந்திரன்/சூரியன்
கடகம்
சிம்மம்
சஹஸ்ராரம்
இதனைக் கடந்தது


சனி- மூலாதாரம்- ஸ்திரம்,
குரு- சுவாதிஷ்டானம்- பிள்ளைப்பேறு
செவ்வாய்- மணிபூரகம்- போட்டி, செயல்பாடு
சுக்கிரன்- அனஹதம்- அன்பு
புதன்- விசுத்தி- பேச்சுத் திறன்
சந்திர சூரியன்- ஆக்கினை- உள்ளுணர்வு
சஹஸ்ராரம்- ராகு கேது ஆட்சி செய்யுமோ என்னவோ

உச்ச நீச அம்சம்
சந்திரன்- அனாஹதம்- உள்மூச்சு (சந்திரன்)-அன்பு
செவ்வாய்-மூலாதாரம்- வெளிமூச்சு (சூரியன்)- அதிகபட்ச செயல்
புதன்-விசுத்தி- சூரியன்- அதிக பட்ச வெளிப்பேச்சு
குரு- ஆக்கினை- சந்திரன்- உள்ளுணர்வுடன் கூடிய ஞானம்
சுக்கிரன்- சுவாதிஷ்டானம்- உடலின்பம்
சனி- அனாஹதம்- சூரியன்- செயல்படும் தன்மை ஆனால் பற்றற்ற நீதி நேர்மை உணர்வு

சூரியன்- மணிபூரகம்- சந்திரன்- முழு சங்கல்ப சக்தி

Saturday, 29 March 2014

116. The fate of arrogant fools

Verse 116
மூடர்
பினத்தினதும் அல்லாமல் போகான் சும்மாப்
பெரியவரா இவனோ போ பொய்யன் என்பான்
மனத்தினையும் காராமல் களரி கூட்டி
வந்தோர்க்குத் தெரிய சும்மா சொல்லிக் காட்டி
நினைத்தபடி கூறிவிட்டுப் போவான் அப்பா
நிறம்பரமும் கிட்டாமல் சாகமட்டும்
கனத்த எழு நரகத்தில் விழுந்து பின்பு
கண்டுகொள்ளாப் பிறப்பிறப்பில் களருவானே

Translation:
Not only will he blabber, he will not stop there.
“Is he a saint? No, He is a liar” he will say
Without clearing the mind, digging it and bringing up the dirt
He will say things to impress others
He will say as he pleases, Son.
Not attaining everlasting state, until his death,
He will fall into the tortuous seven hells
Whirl through births and deaths.

Commentary:
Agatthiyar continues to tell Pulatthiyar about charlatans.  After proclaiming instant siddhi they will not stop there.  They will put down every other great soul saying, “He is not great, he is a liar”.  Such a person will not have a clear mind but gather dirt in it and say whatever comes to his mind just to impress others.  Not only will he miss attaining a great state he will also fall into insufferable hell and go through births and deaths.
The seven types of hell are: athala, vitala, sutala, talaatala, mahaatala, rasaatala and patala.

முட்டாள்களைப் பற்றி அகத்தியர் மேலும் கூறுகிறார்.  அவர்கள் திடீர் சித்தி என்று அறிவித்த பிறகு அவர்கள் அத்தோடு நிற்பதில்லை.  பிறரைப் பார்த்து, “இவன் பெரியவனோ இல்லை, இவன் பொய்யன்?” என்று இழிவாகப் பேசுவர்.  பிறரைக் கவரவேண்டும் என்ற எண்ணத்துடன் வாய்க்குவந்தபடி பேசும் அவர்கள் இவ்வுலகில் இருக்கும்போது ஞானம் பெறாமல் சாவது மட்டுமின்றி கொடிய ஏழு நரகங்களில் வீழ்ந்து மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பு என்று சுழல்கின்றனர்.

ஏழு வகையான நரகங்கள் அத்தளம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம் என்பவை. 

115. "Insta Siddhi" the fools will say...

Verse 115
அறியாத மூடர்கள்தான் சொல்லும் வார்த்தை
அரை க்ஷணத்தில் சித்தி எனக்காக வென்பார்
குறியாத மூடனுடன் சேர்ந்த மூடன்
கூடியே சொல்வதென்ன குருட்டு மாடு
செறிதாகத் துறவறத்தில் பெரிதோ என்பான்
தேசத்தில் பல நூலும் படித்த மட்டை
கறியாமோ கடையில் வித்த காய்தான் மக்காள்
கழுதை அவன் அறியாமல் பினத்துவானே

Translation:
Only the ignorant fools say the words
“I attained siddhi in half a second”
The imbecile who joined the moronic fool
What has he to say?  The blind cow!
He will say, “Is there anything great in sanyasa?”
The much-read dullard
Will the vegetable sold in the store turn into a dish by itself?
Donkey! He will blabber without any knowledge.

Commentary:
Agatthiyar has used choice words to describe a fool and an imbecile who follows such as fool!  The first fool would say that he attained siddhi in an instant.  The other will follow him and vouch for it.  The second is not only a dumb cow but a blind one too!  He will dismiss sanyasa or detachment from worldly life as unnecessary.  Agatthiyar asks whether a vegetable present in the store will by itself turn into a dish for consumption. 
Some scholars interpret Sankara’s expression, “jnaanaan mokshaha” as to mean, “knowing the truth about everything from the scriptures will grant moksha”.  Jnana in this case is textual knowledge.  However, Ramanuja interpreted it as “bhakti roopaapanna jnanan mokshaha” that is, knowledge coupled with devotion will grant moksha.  Not mere textual knowledge but that knowledge put into practice (as devotion towards the divine) will grant moksha.  Agatthiyar in conveying the same idea through this expression.  Nothing can replace experience, not textual knowledge, not the upadesa heard from others.  Agatthiyar says that any words utter from such textual knowledge is only a donkey’s braying.


இப்பாடலில் அகத்தியர் வார்த்தைகளைத் தேடி எடுத்து படித்த முட்டாள்களைத் திட்டுகிறார்.  முதல் முட்டாள் தனக்கு “திடீர் சித்தி” கிட்டிவிட்டது என்பான்.  அவனைத் தொடரும் மற்றொரு முட்டாள் அதனை வழி மொழிவான்.  அவனைக் குருட்டு மாடு என்கிறார் அகத்தியர்.  அவன் முட்டாள் மட்டுமல்ல உண்மையைக் காணாக குருட்டு முட்டாளும் கூட.  அவன் துறவு, அதாவது உலகப்பற்றை விடுவது,தேவையற்றது என்பான்.  கடையில் வைக்கப்பட்டிருக்கும் காய் தானாகக் கறியாகுமா என்று அகத்தியர் கேட்கிறார்.  புத்தகத்தில் உள்ளதைப் படித்தால் மட்டும் போதாது அதை செயல்படுத்தி அனுபவத்தில் கொண்டுவரவேண்டும்.  அப்போதுதான் இறையுணர்வு கிட்டும்.  சங்கரரின் வார்த்தைகளான “ஞானத்தால் மோட்சம்” என்பதைப் பலர் இறைவனைப் பற்றிய ஞானம் ஏற்பட்டாலே போதும் அதுவே மோட்சத்தை அளித்துவிடும் என்று பொருள்படுவதாகக் கூருவர். அதற்கு ராமானுஜர் “பக்தியுடன் சேர்ந்த ஞானம் மோட்சத்தை அளிக்கும்” என்று பொருள் கூறினார்.  அதாவது படித்ததை அனுபவமாகச் செயல்படுத்தினால்தான் மோட்சம் கிட்டும் என்றார்.  இந்தக் கருத்தையே அகத்தியர் இங்கு கூறுகிறார்.  ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் போல வெறும் புத்தக அறிவு அனுபவத்தைக் கொடுக்காது.  அத்தகைய பேச்சு கழுதையின் கூவல்தான், பினாத்தல்தான் என்கிறார் அகத்தியர். 

114. Need to wait for the right time

Verse 114
பாரப்பா கனகசபை நடன மேவிப்
பார்த்தோர்க்குத் தோணுமிந்த பலக்கு நன்றாய்
சாரப்பா சமையுமுன்னே பிள்ளையாமோ
சமத்தில்லாள் சபை ஏறி ஆடப்போமோ
காரப்பா தந்தி இல்லா வீணையாமோ
காதில்லா சங்கீதம் பலிதம் ஆமோ
சீரப்பா வித்தென்றால் விளைந்து போச்சோ
சிவசிவா ஞானி அறிவான் சொல்லோ

Translation:
See son, those who saw the dance in
The golden arena, will realize this.
Associate with it.  Can one bear a child before attaining physical maturity?
Can an incapable dancer go to the stage attempting to dance?
See son, is there a veena without the string?
Will the music be effective if there are no ears to hear?
See son, will the mere utterance, “seed” make it a mature plant?
Siva Siva!  The wise one will not say.

Commentary:
Dance in the golden arena or kanakasabha means the dance of consciousness at the pinnacle, the zone beyond the sahasrara.  This is the principle behind the dancing form of Siva in Chidambaram.  However, one has to wait for the right time for this to happen.  Agatthiyar says that one cannot become pregnant until one attains the right physical maturity.  An untrained dance cannot go to the arena trying to dance when she is not ready for it.  A veena without a string cannot be played to create music.  The string here are the nadi, the music from the veena are the sounds that kundalini produces upon its arousal.  One needs “ears” to enjoy this music, the right faculty to experience the Divine.  Mere verbal utterance or explanation will not make one experience the Divine.  It is exclusively an experience.  Mere utterance of the word seed will not make it become a mature plant.  The conditions have to be right. Sufficient patience is needed to wait for it to happen.  Experience of the divine is also something that needs the qualification and the patience.   Agatthiyar concludes this exposition saying that the wise will not try to verbalise what a divine experience is.  They will not utter any words trying to explain it.


கனக சபையில் நடனம் என்பது சஹாஸ்ராரத்தைக் கடந்த பரவெளியில் விழிப்புணர்வின் நடனமாகும்.  இதைத்தான் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் என்று ஆன்றோர் குறிப்பிடுகின்றனர்.  ஆனால் இந்த நடனத்தைக் காண்பதற்கு ஒருவர் தகுந்த காலம் வரும்வரை பொறுக்க வேண்டும்.  இதை அகத்தியர், ஒருவர் உடலளவில் தகுந்த பக்குவத்தை அடைந்தால்தான் சூல் கொள்ள முடியும், தகுந்த தேர்ச்சி பெற்ற ஒரு நடனமாதுதான் அரங்கத்தினுள் நடனமாட நுழைய முடியும், தந்தி இருந்தால்தான் வீணையில் நாதத்தை எழுப்ப முடியும் என்று சுட்டிக் காட்டுகிறார்.  ஒருவர் தகுந்த தேர்ச்சியையும் பக்குவத்தையும் பெற்றிருந்தால் சரியான சமயத்தில் இறையுணர்வை அனுபவிக்கலாம்.  தந்தி என்பது நாடிகளைக் குறிக்கும்.  சரியான நாடியில், சுழுமுனையில் குண்டலினி சக்தி பாய்ந்தால்தான் நாதம் எழுகிறது.  அந்த நாதத்தைக் கேட்க ஒருவருக்கு “காது” புலன்களைக் கடந்த கேட்கும் தன்மை தேவைப்படுகிறது.  மேலும் அகத்தியர் விதை என்று வாயால் கூறினால் அதுவே வளர்ந்த பயிராக முடியுமா என்று கேட்கிறார்.  அதாவது வெறும் வார்த்தை ஞானம் இறையுணர்வைத் தராது.  அது தகுந்த பருவத்தில் ஏற்படும் ஒரு அனுபவம், வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.  அதற்குப் பெரும் பொறுமை தேவை.  இதனை அறிந்த ஞானிகள் இந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முயற்சிப்பதில்லை.  அதாவது புலத்தியருக்கு அகத்தியர் தான் அதை வார்த்தைகளால் விளக்க முடியாது புலத்தியர் அதை அனுபவித்துத்தான் உணரவேண்டும் என்கிறார்.  

Friday, 28 March 2014

113. One has to do Kundalini yoga and wait for the right time

Verse 113
நூல் ஏதுவென்றக்கால் இதுவே ஞானம்
நுணுக்கமாய் இந்நூலில் நுழைந்து பாரு
கால் ஏது வாசிதனை சுழினை நாட்டு
கருத்தேது  வாசியாலே கலந்து போடு
சூல் ஏது தசமாதம் சென்றால் அல்லோ
துடுக்கேது மஞ்ஞானத் துடுக்கு மெத்த
பால் ஏது முப்பாலே பாலாம் அப்பா
பரம் ஏது சிதம்பரமே பாரு பாரு

Translation:
When you ask what this book is about, it is only wisdom
You can to plunge into it deeply and carefully
What is the vital air, plant the vāsi in the whorl
What is contemplation, mix it with vāsi and place it
What is pregnancy, only after ten months are over isn’t it?
What is arrongant speech?  It is only the arrogant speech of ignorance isn’t it?
What is pāl it is only the muppāl isn’t it?
What is Param?  It is only Chidambaram, See, See.

Commentary:
Agatthiyar advises Pulatthiyar that meijnanam is about wisdom and that one should read it carefully examining the concepts mentioned critically to realize them.  He advises Pulatthiyar to plant the breath in the whorl, practice contemplation along with breath control and wait for the right time.  He indicates this by saying that one has to wait for ten months for the pregnancy to end, to grant the result.  If one tries to explain what the Divine is before the appropriate time it will only be words of ignorance.  We have already seen what muppāl is.  They are the triple desires kāma pāl, kānal pāl and soma pāl- worldly desires, transformation of those to desire for the divine, and the experience of the divine.  He states that the Supreme or Param or the Divine is nothing but Chidambaram- the arena of consciousness.  He tells Pulatthiyar to see this.


மெய்ஞ்ஞானம் என்னும் இந்த நூல் முழுவதும் ஞானத்தைப் பற்றியது என்று கூறும் அகத்தியர் புலத்தியரை இந்த நூலைக் கவனமாகப் படிக்குமாறு அறிவுறுத்துகிறார்.  அவர் வாசியை சுழுமுனையில் நாட்டி அதனுடன் கவனத்தைக் கலந்து குண்டலினி யோகத்தைப் பயில வேண்டும் என்றும் தகுந்த சமயம் வரும்போது பரத்தைக் காணலாம் என்றும் கூறுகிறார்.  எதுவுமே சரியான சமயத்தில்தான் நடக்கும் என்று கூற அவர் பத்து மாதங்கள் பொறுத்தால்தான் ஒரு சூழ் மகவாகும், அவ்வாறு ஞானத்துக்கு பொறுமையைக் கடைப்பிடிக்காமல் அதைப் பற்றிப் பேசப்புகுந்தால் அது அஞ்ஞானத்தால் எழுந்த பேச்சாகத்தான் இருக்கும் என்று கூறுகிறார்.  நாம் முன்பே முப்பால் என்றால் என்று பார்த்தோம்.  முப்பால் என்பது காமப் பால், கானல் பால் மற்றும் சோமப்பால் என்பவையே.  காமப்பால் என்பது உலகப்பொருட்களில் விருப்பம், கானல்பால் என்பது உலகப்பற்றை இறைப்பற்றாக மாற்றுவது.  சோமப்பால் என்பது இறையுணர்வு.  அகத்தியர், பரம் என்பது சிதம்பரமே வேறொன்றும் இல்லை என்கிறார்.  சித் அம்பரம் என்பது விழிப்புணர்வின் அரங்கம் என்று பொருள்படும்.